அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||
நவம்பர் – 8 திங்கள், ஐப்பசி –22, ஜீல்ஹேஜ் – 1 | ||||||||||||
Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path" Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer , Actress and Anchor ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station) Date: 14/11/2010 ( Sunday) 6 — 8 PM | ||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||
தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்தது: புயல்-மழைக்கு 5 பேர் பலி | கரூரில் தினமும் 10 ஆயிரம் லாரி மணல் கொள்ளை: மணல் லாரி மோதி ... | |||||||||||
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு,கிடு உயர்வு ஒரே நாளில் 5 அடி ... | சென்னையில் ஜல் புயல் 4 மையங்களில் தயார் நிலையில் உணவு மேயர் மா ... | |||||||||||
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: மார்ட்டின் பந்து ... | ||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||||
1889 | மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது. | |||||||||||
1895 | எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார். | |||||||||||
1917 | ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது. | |||||||||||
1965 | பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது. | |||||||||||
1977 | கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. | |||||||||||
பிறப்புக்கள் | ||||||||||||
1680 | வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1847) தமிழில் வீரமாமுனிவர் என்றழைக்கப் படுகின்ற பெசுகிப் பாதிரியார், தற்போது இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். | |||||||||||
1900 | ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர், (இ. 1976) ந.பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. | |||||||||||
1902 | ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், (இ. 1977) ஜீ. ஜீ. பொன்னம்பலம் இலங்கைத் தமிழர்களின் நலன்கருதித் துவக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவார். இலங்கையின் அரசியலில் 1940களிலும் 1950களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் வழக்கறிஞரும் ஆவார். ஜீ.ஜீ. என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர். | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | |||||||||
2.3.2 | அரண்(araN) | 2.3.2 | The Fortification | |||||||||
Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength. | ||||||||||||
741 | ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். | |||||||||||
aatRRu pavarkkum araNporuL anjsiththaR pOtRRu pavarkkum poruL. | ||||||||||||
fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woes. | ||||||||||||
பொருள் | Meaning | |||||||||||
பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும். | A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter. | |||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||
அதிகமாக ஆராய்ச்சி செய்பவன் குறைவாகவே செய்து முடிப்பான். | ||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||
ஐங்கோணம் (பெ.) | aingKONam | |||||||||||
பொருள் | Meaning | |||||||||||
1. ஐந்து கோணங்களையுடைய வடிவம் (ain-thu kONangkalaiyudaiya vadivam) | 1. pentagon | |||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||
No comments:
Post a Comment