தீபாவளி 2011
============
பட பட பட்டாசு இடபுறம்
பயத்தினில் துடிப்பவர் வலபுறம்
வெடி வெடி வெடியென இடபுறம்
வெடியால் செவிடர்கள் வலபுறம்
புகைந்திடும் சூழல் இடபுறம்
இருமலில் இரைப்பவர் வலபுறம்
சுழலது சக்கரம் இடபுறம்
கடனுக்கு கஞ்சி வலபுறம்
இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்
இயலாமையில் சிலர் மறுபுறம்
இருட்டில் ஒளிர்ந்தது ஒருபுறம்
இருட்டினில் ஒளிந்தது மறுபுறம்
நரகாசுரர்கள் எதிர் புறம்
நாரணண் நம்பி நம்புறம்
குயவரின் விளக்குகள் ஒளிதரவே
கயவரின் இனங்களும் குறைந்திடவே
பிணிகளும் பேய்களும் நீங்கிடவே
அணிகளும் வாழ்த்தும் சேர்ந்திடவே
அன்புடன் இனிப்பாய் ! புத்தாடை
அணிந்தே ஆடடி "தீபாவளி"
அன்புடன் கவி
சத்தியமணி