அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||
ஆகஸ்டு – 28 சனி, ஆவணி – 12, ரமலான் - 17 | |||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||
சவுதியில் வேலை பார்த்த இலங்கை பெண் உடலில் 23 ஆணிகள்: சவுதி ... | |||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||
1511 | போர்த்துக்கீசர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர். | ||||||||
1521 | ஒட்டோமான் துருக்கியர் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினர். | ||||||||
1789 | வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார். | ||||||||
1844 | பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர். | ||||||||
1845 | சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது. | ||||||||
1898 | காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார். | ||||||||
1913 | நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார். | ||||||||
1991 | சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது. | ||||||||
பிறப்புக்கள் | |||||||||
1828 | லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (இ. 1910) | ||||||||
1855 | ஸ்ரீ நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928) ஸ்ரீ நாராயணகுரு இந்து ஆன்மிகவாதியும் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு சாதிக்கட்டுப்பாடுகளை சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம்? என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் முனைந்தவர். | ||||||||
இறப்புக்கள் | |||||||||
முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890) முகவை கண்ண முருகனார் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு தேச பக்தக் கவிஞராகத் தமிழ்நாடெங்கும் அறியப்பட்டார். சம காலத்தியவரான சுப்பிரமணிய பாரதியாருக்கு இணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர். | |||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | ||||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | |||||||||
684 | அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. | ||||||||
aRivuru vArAyn-tha kalviim mUnRan seRivudaiyAn selka vinaikku. | |||||||||
Sense, goodly grace, and knowledge exquisite. Who hath these three for envoy's task is fit. | |||||||||
பொருள் | Meaning | ||||||||
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும். | He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning. | ||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||
எங்கு அன்பு இருக்கிறதோ அங்குதான் பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும். | |||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||
ஏவறை (பெ.) | aevaRai | ||||||||
பொருள் | Meaning | ||||||||
1. மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு (maRan-thu ampeythaRkuriya mathiluRuppu) 2. ஏப்பம் (aeppam) | 1. Provision in the battlement of a port from where warriors could shoot arrows against the enemy unobserved 2. Belch |
| |||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||