Friday, July 17, 2009

Daily news letter 17-07-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூலை -  17, ஆடி- 1, ரஜப் 23 

Today in Indian History:

1996 - Madras to be known as 'Chennai' henceforth

1948 - Govt. announced that all discriminations against women in matter of `employment will be done away with and in future, women will be eligible for any public service including administrative service and police service. 

இன்றைய குறள்

1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)

1.3.11 துறவு (Renunciation)

350. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று  விடற்கு.

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,  
Cling to that bond, to get thee free from every clinging thing.  
Meaning

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.

Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.

தினம் ஒரு பொன்மொழி

அன்பை அன்பினால் ஈடு செய். தீங்கை நீதியினால் ஈடு செய்.

தினம் ஒரு சொல்:

உசனன் – பெ. சுக்கிரன், Venus

Thursday, July 16, 2009

Daily news letter 16-07-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூலை -  16, ஆனி - 32, ரஜப் 22 

Today in Indian History:

1905: A decision to boycott British goods was taken at Bagarhat.

1929: Indian Council of Agricultural Research was established. (An autonomous apex national organisation which plans, conducts and promotes research, education, training and transfer of technology for advancement of agriculture and allied sciences)

1954: French rule ends in Mahe. De facto power was transferred to the people and the Indian flag hoisted.

1969:  Air Chief Marshal Pratap Chandra Lal, Padma Vibhushan, Padma Bhushan, DFC. became the Air Officer Commanding, India Command. He was in this office till 15/01/1973.

1981: India performs nuclear Test.

1991: Railway budget hikes passenger fares by 15-20% and freight up by 10\%.

1993: Russia cancels cryogenic rocket deal with India.

1996: The four basin states of Narmada valley - Madhya Pradesh, Rajasthan, Gujarat, Maharashtra - reach agreement to raise the height of Sardar Sarovar dam in Gujarat to 436' after which hydrological studies will be done for 5 years to decide whether the height should be raised to the awarded 455'.

இன்றைய குறள்

1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)

1.3.11 துறவு (Renunciation)

349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை  காணப் படும்.

When that which clings falls off, severed is being's tie;  
All else will then be seen as instability.

Meaning

பற்றுகளைத்  துறந்துவிட்டால், பிறப்பில்  எற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.

At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

தினம் ஒரு பொன்மொழி

துறுப்பிடித்து  அழிவதை விட உழைத்து அழிவது மேல்.

தினம் ஒரு சொல்:

உசாவு:

    1. வினவு, விசாரி enquire, ask.
    2. ஆலோசி, ponder, deliberate upon.
    3. அளவளாவு, chat, converse
    4. ஆராய், examine, study
    5. கேள், hear, listen to.

Wednesday, July 15, 2009

Daily news letter 15-07-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூலை -  15, ஆனி - 31, ரஜப் 21 

Today in Indian History:

1986 - India protests against China's intrusion of six to seven km into the Indian Territory in Arunachal Pradesh.

இன்றைய குறள்

1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)

1.3.11 துறவு (Renunciation)

348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி 
வலைப்பட்டார் மற்றை யவர். 
Who renounce all are free from care  
Others suffer delusive snare.

Meaning

அறைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.

Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.

தினம் ஒரு பொன்மொழி

அன்பு நிறைந்த நெஞ்சம் திருப்தியை இயல்பாக கொண்டுள்ளது.

தினம் ஒரு சொல்:

உச்சிவீடு பெ. 1 உச்சி வேளையில் மழை விட்டிருத்தல், stopping of rain at noon

          2 இடைவிடுதல், stopping at intervals.

Tuesday, July 14, 2009

Daily news letter 14-07-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூலை -  14, ஆனி - 30, ரஜப் 20 

Today in Indian History:

1946  - India grants Siam a 20 year, 3 mil. credit to increase export of Siamese rice.

1998  - India is elected chairperson of the World Intellectual Property Organization's standing panel on information technology in relation to Intellectual Property Rights.

இன்றைய குறள்

1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)

1.3.11 துறவு (Renunciation)

347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் 
பற்றி விடாஅ தவர்க்கு. 
Grief clings on and on to those  
Who cling to bonds without release.

Meaning

பற்றுகளைப் பற்றிக் கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

Who cling to things that cling and eager clasp,  
Griefs cling to them with unrelaxing grasp.  
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.

தினம் ஒரு பொன்மொழி

எதற்கும் துணிவில்லாதவன் எதையும் எதிர்பார்க்க முடியாது.

தினம் ஒரு சொல்:

உச்சியார் பெ. தேவர்கள், celestial beings. 

Monday, July 13, 2009

Daily news letter 13-07-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூலை -  13, ஆனி - 29, ரஜப் 19 

Today in Indian History:

1974 - India's 1st one-day international (v England, Headingley)

இன்றைய குறள்

1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)

1.3.11 துறவு (Renunciation)

346. யான் எனது என்னுஞ் செருக்குஅறுப்பான் வானோர்க்கு 
உயர்ந்த உலகம் புகும். 
Who curbs the pride of I and mine  
Gets a world rare for gods to gain.

Meaning

யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.

Who kills conceit that utters 'I' and 'mine',  
Shall enter realms above the powers divine.  
He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.

தினம் ஒரு பொன்மொழி

உழைப்பின் வேர்கள் கசப்பானவை ஆனால் அதன் கனி இனிப்பானது.

தினம் ஒரு சொல்:

உச்சிட்டம் பெ. எச்சில் உணவு, சேடம், leavings of food in the plate out of which one has eaten, that which is left, refuse.