Saturday, November 21, 2009

Daily news letter 21-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 21, கார்த்திகை – 5, ஜுல்ஹேஜ் – 3

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·    சீனா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி

·   கரும்பு விலை பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்பட்டது

·   அதிக சதம் அடிக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள்

·   நக்சல் வன்முறையை ஏற்க முடியாது : சோனியா

·    அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல்

·    இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. போட்டி: ஜெயலலிதா

·    சென்னை துறைமுகத்துக்கு வெளியே காத்திருக்கும் சரக்கு கப்பல்கள்

·    சீனா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.

1905 - ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.

1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.

1969 - முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

இறப்பு: 1970 - சி. வி. இராமன் இந்திய பௌதிகவியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1888)

சிறப்பு நாள்: உலகத் தொலைக்காட்சி நாள்

இன்றைய சிறப்பு மனிதர்:

 

சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

மேலும் படிக்க: சர் சந்திரசேகர வெங்கட ராமன்

 

இன்றைய சிறப்பு நாள்:

உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

மேலும் படிக்க: உலகத் தொலைக்காட்சி நாள்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்(porutpAl)

2.

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

 

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

Vinaivaliyum thanvaliyum mAtRRAn valiyum

thuNaivaliyum thUkkich sayal.

The force the strife demands, the force he owns, the force of foes,

The force of friends; these should he weigh ere to the war he goes

பொருள்

Meaning

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்

Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act

இன்றைய பொன்மொழி

தனது திறமைகளை பயன்படுத்திக் கொள்ள தெரிந்தவன் அறிவாளி

இன்றைய சொல்

Today's Word

எதிர்கோள் (பெ.)

ethirkOL

பொருள்

Meaning

1.  வரவேற்றல் (varavEtRal)

1.  Ceremonious greeting, welcoming and receiving a guest or a great person

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, November 20, 2009

Daily news letter 20-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 20, கார்த்திகை – 4, ஜுல்ஹேஜ் – 2

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·         ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ள மெகா கோடீஸ்வரர்கள்

·         கரும்பு விலை சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு

·         இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

·         வங்காளதேச பிரதமர் ஹசீனாவுக்கு இந்திராகாந்தி அமைதி விருது ரூ.25 ...

·         அரியூர் சர்க்கரை ஆலை பிரச்னை புதுச்சேரியில்

·         கோர்ட்டில் குண்டு வெடித்து 20 பேர் பலி

·         9 ஆயிரம் ரன்களை கடந்தார், ஜெயவர்த்தனே

·         பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடி :கேரள நிபுணர் குழு பரிந்துரை

·         ஆட்டோ மீது ரயில் மோதி 10 பேர் பலி

·         2 லட்சம் டன் அரிசி இறக்குமதி

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1917 - உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1985 - மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

1998 - பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

பிறப்புக்கள்

1750 - திப்பு சுல்தான், மைசூர் பேரரசன் (இ. 1799)

1980 - ஷாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்பு: 1910 - லியோ தல்ஸ்தோய், ரஷ்ய எழுத்தாளர் (பி. 1828)

சிறப்பு நாள்: யுனிசெஃப் - குழந்தைகள் நாள்

இன்றைய சிறப்பு மனிதர்:

 

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, சிறீரங்கப்பட்டினம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: திப்பு சுல்தான்

 

இன்றைய சிறப்பு நாள்:

அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children's Day), ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் படிக்க: அனைத்துலக குழந்தைகள் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.9

தெரிந்துசெயல்வகை

2.1.9

Action After Deliberations

470

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு.

eLLAtha eNNich seyalvaeNdum thammOdu

koLLAtha koLLAthu ulaku.

Plan and perform no work that others may despise;

What misbeseems a king the world will not approve as wise.

பொருள்

Meaning

தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.

இன்றைய பொன்மொழி

கல்வி அறிவும் சிறந்த அனுபவமும் உடையவனை சூழ்ச்சி அண்டாது.

இன்றைய சொல்

Today's Word

அகசு

akasu

பொருள்

Meaning

1.  பொழுது (pozuthu)

2.  பகல் (pakal)

1.  Time

2.  Day-time

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India