Friday, March 18, 2011

Daily news letter 18-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 4  வெள்ளி, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://ilakkiyam.net/

இந்த இணைய தளம் தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதாக கண்டறிய, புரிந்துகொள்ள உதவும் நோக்கோடு அமைக்கப்பட்டிருகிறது. உங்கள் கட்டுரைகள், கவிதை தொகுப்புகள் , ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை இந்த இணைய தளத்தில் நீங்கள் வெளியிடலாம்.

தெரிந்து கொள்ளுங்கள்  

கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

முக்கிய செய்திகள் – Top Stories

மூன்றாவது அணி அமையுமா ? இன்று விஜயகாந்த் அறிவிப்பு  

பூகம்பம், சுனாமி, கதிர்வீச்சு எதிரொலி 500 இந்தியர் நாடு ...

ஜெயலலிதாவை எதிர்த்து ஆனந்த்  

சுனாமி சோகம்... ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி!

தமிழக சட்டமன்ற தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல்  

உணவு பணவீக்கம் குறைந்தது

70 தொகுதியாவது கொடுங்களேன்: மம்தாவிடம் காங். கெஞ்சல்

உலக கோப்பைக்கு பின் ஓய்வு அக்தர் திடீர் முடிவு

வீடு, வாகன கடன் வட்டி உயரும் கடன் வட்டியை 0.25% உயர்த்தியது ...

சென்செக்ஸ் 209 புள்ளிகள் சரிந்தது

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1850 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1874 - வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.

1909 - ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார்.

1922 - ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட ஹிட்லரும் முசோலினியும் கூட்டிணைந்தனர்.

1965 - சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ஆனார்.

1970 - கம்போடியாவின் மன்னர் நொரொடோம் சிஹானூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.

1989 - எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

1990- கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக தேர்தல் இடம்பெற்றது.

பிறப்புக்கள்

1828 - வில்லியம் கிரேமர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 1908)

1837 - குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது, 24வது குடியரசுத் தலைவர் (இ. 1908)

1858 - ருடோல்ஃப் டீசல், ஜெர்மனியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1913)

1919 - இந்திரஜித் குப்தா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர். (இ. 2001)

1936 - பிரடெரிக் கிளார்க், தென்னாபிரிக்க அதிபர், நோபல் பரிசு பெற்றவர்

இறப்புக்கள்

1889 - வில்லியம் நெவின்ஸ், யாழ் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியர், ஆங்கிலம்-தமிழ் அகராதி தொகுத்து வெளியிட்டவர்

1996 - ஒடீசியஸ் எலீட்டிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர் (பி. 1911)

2007 - பாப் வுல்மர், துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் (பி. 1948)

சிறப்பு நாள்

துருக்கி - கலிப்பொலி நினைவு நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.12

புல்லறிவாண்மை (pullaRivANmai)

 

2.3.12

 

PETTY CONCEIT

Lack of Wisdom,Dunce, Smallness petty conceit

குறள் எண்  843

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

aRivilAr thAnthammaip P-zhikkum P-zhai

seRuvArkkum seithal arithu

With keener anguish foolish men their own hearts wring,
Than aught that even malice of their foes can bring.

பொருள்

Meaning

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.

இன்றைய பொன்மொழி

கோள் சொல்லும் வாய்  = காற்றுடன் நெருப்பு.

இன்றைய சொல்(Today's Word)

ஒழுங்கை

o-zu-ngai

பொருள்

Meaning

1.        கட்டிட முகப்பு

2.        சந்து  

 

1.     portico, porch

 

2.     lane. alley

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

Thursday, March 17, 2011

Daily news letter 17-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜப்பானில், அணுக் கதிர் கசிவினால் உண்டாகும் பேரிழப்பை தடுக்க தன் உயிரை பணயம் வைத்து போராடும் 50  தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு அவ்வை தமிழ் சங்கத்தின் சார்பில் நன்றிகள் மற்றும்  சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர்களின் உழைப்பும்,மனஉறுதியும் வெற்றி பெறவும் , அணுக்கதிர் கசிவு நன்முறையில் தடுக்கப்படவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 3  வியாழன், திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilwriters.net/

மலேசியத் தமிழ் எழுத்துலகம் மலேசியத் தமிழ் ஆக்கங்கள், ஆக்கர்கள், சூழல் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய வலைத்தளம் ஆகும். மலேசியத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் தமிழ் மொழிக்கு வழங்கி உள்ள பங்களிப்பைப் பற்றி இத் தளம் சிறப்பாக விளக்குகிறது.

தெரிந்து கொள்ளுங்கள்  

  • ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மிஸ் கமலா; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.
  • கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் ஏற்றப்பாட்டு எனப்படுகிறது.

முக்கிய செய்திகள் – Top Stories

சாதிக் தற்கொலைக்கு யார் காரணம்?  

ஜப்பானில் தொடர்கிறது துயரம் : 3வது அணுஉலை வெடித்தது!

அதிமுக வேட்பாளர் பட்டியல்: கம்யூனிஸ்டுகள் அதிர்ச்சி  

அணுமின் திட்டங்களைக் கைவிட வேண்டுமா?

ஸ்ரீரங்கத்தை ஜெயலலிதா தேர்வு செய்தது ஏன்?  

இன்று இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் மோதல்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் 31ல் குற்றப்பத்திரிகை

கனடாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா

வருமானத்துக்கு அதிகமாக சொத்து : ஜெகனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

இலங்கைக்கு எதிரான ஆட்டம்: "மில்ஸ், வெட்டோரி விளையாடமாட்டார்கள்'

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1776 - அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர்.

1805 - நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.

1845 - இறப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது.

1861 - இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது.

1919 - றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

1950 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1958 - ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது.

1959 - டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.

1966 - ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை மத்திய தரைக் கடல்பகுதியில் ஸ்பெயினுக்கருகில் கண்டுபிடித்தது.

1969 - கோல்டா மெயர் (Golda Meir) இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.

1970 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.

1996 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.

பிறப்புக்கள்

1881 - வால்ட்டர் ஹெஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)

1920 - ஷேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேசத்தின் தந்தை (இ. 1975)

இறப்புக்கள்

1937 - ஒஸ்டின் சாம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1863)

1956 - ஐரீன் ஜோலீயோ-கியூரி, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)

1983 - ஹால்டன் ஹார்ட்லைன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)

சிறப்பு நாள்

அயர்லாந்து - சென் பாட்றிக் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.12

புல்லறிவாண்மை (pullaRivANmai)

 

2.3.12

 

PETTY CONCEIT

Lack of Wisdom,Dunce, Smallness petty conceit

குறள் எண்  842

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

aRivilAn nenju-vandhu ee-thal piRithiyAthum

illai peRuvAn thavam.

The gift of foolish man, with willing heart bestowed, is nought,
But blessing by receiver's penance bought.

பொருள்

Meaning

அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்.

 (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).

இன்றைய பொன்மொழி

திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள், மன்னிக்கப்படாத பாவங்கள்.

இன்றைய சொல்(Today's Word)

ஒழுகை

o-zu-kai

பொருள்

Meaning

1.        வண்டி

2.        வண்டிகளின் வரிசை

 

1.     cart

 

2.     train of carts

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India