Saturday, July 9, 2011

Daily news letter 09-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

  • தினம் ஒரு குறள் செய்தி மடல் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்காக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து வெளிவருகிறது. சில மாற்றங்கள், சில பகுதிகள் குறைப்பு, சேர்ப்பு ஆகியன அவ்வப்போது நடைபெறுகிறது.

திருக்குறள் 1000 மாவது குறளை நெருங்கும் இத்தருணத்தில், அடுத்து என்ன செய்வது, இந்த செய்தி மடலை மேலும் ஒரு பயனுள்ள மடலாக மாற்றுவது எப்படி என்பது பற்றி அறிய உங்கள் கருத்துக்களை வேண்டுகிறோம்.

உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.

இம்மடலைப் படிக்கும் அனைவரையும், சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம்.

  • காயத்ரி பைன் ஆர்ட்ஸ் – 21ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள்

இடம்: தில்லி தமிழ் சங்கம், மலை 5 மணி முதல்

9-7-2011 – சென்னை ஜி.ஷில்பா குழுவினரின் இன்னிசை

10-7-2011 – தில்லி ஜி.சௌம்யா குழுவினரின் இன்னிசை

மேலும் விவரங்களுக்கு 9818476632

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௨௪  (24) , சனிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி எதுவும் கிடையாது; இந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக உள்ளன

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

மாறன் சகோதரர்களிடம் சிபிஐ விரைவில் விசாரணை  தினமணி 

ஆப்ரிக்காவின் புதிய தேசமாக நாளை உதயமாகிறது தெற்கு சூடான்! தினகரன்

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக நடக்கவில்லை - கபில் சிபல் ... Bharath News Online 

சென்செக்ஸ் 220 புள்ளிகள் சரிவு வெப்துனியா

டி.ஆர்.பாலுவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தர பிரதமர் ... தட்ஸ்தமிழ்

எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் தினமணி

மீண்டும் மத்திய அமைச்சராவாரா லல்லு பிரசாத் யாதவ்? Inneram.com

ஜாவ்னா, சினி, டயானா ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானது  தினமணி

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்  பிபிசி 

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் ஒத்திவைப்பு  பிபிசி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

7.   கடற்கரையிலே திருநாவுக்கரசர்

தமிழ் நாட்டில் ஈசனுக்குரிய கோயில் ஈச்சுரம் என்று வழங்கப் பெறும். முன்னாளில் மன்னரும் முனிவரும் பல ஈச்சுரங்கள் எடுத்தனர். பல்லவ மன்னன் ஒருவன் எடுத்த திருக்கோயில் பல்லவனீச்சுரம் எனவும் அகத்திய முனிவன் எடுத்த ஆலயம் அகத்தீச்சுரம் எனவும் வழங்குதலால் இவ் வுண்மை விளங்கும். இத் தகைய ஈச்சுரங்களை யெல்லாம் முறையாக வணங்க ஆசைப் பட்டார் திருநாவுக்கரசர். அவ்வாசையால் தமிழகத்திலுள்ள ஈச்சுரங்களைத் தொகுத்து ஒரு திருப்பாசுரம்+ பாடினார்:

+ "நாடக மாடிடம் நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம்,

      நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்கான

கேடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம்,

      குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால்

ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம்,

      அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அந்தண் கானல்

ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்று ஏத்தி

      இறைவன் உறைசுரம் பலவும் இயம்பு வோமே"

      - அடைவு திருத்தாண்டகம்


அப்பாட்டில் அமைந்த திருக்கோயில்களை ஒன்றன் பின் ஒன்றாக வணங்கிப் பாண்டி நாட்டிலுள்ள இராமேச்சுவரத்தை வந்தடைந்தார்; கோடிக்கரையில் நீராடி அக் கோயிலைத் தொழுதல் முறையாதலால் கடற்கரைக்குச் சென்றார்; தென்முகமாக நின்றார் அவர், தூய வெண்ணீறு துதைந்த மேனியர்; மாசற இமைக்கும் உருவினர்; ஈசனார் புகழைப் பேசாத நாளெல் லாம் பிறவா நாளே என்று கருதும் பெற்றியர். இத் தன்மை வாய்ந்த பெரியார் கோடிக் கரையிலே நின்று பேசலுற்றார்:-


"
ஆ! கோடிக்கடலே! பாண்டிநாட்டின் ஒரு கோடியில் நின்று பாரத நாட்டுப் பல கோடி மாந்தரை இழுக்கும் பண்புடையாய் நீ! நாடி வருபவர்க்கெல்லாம் நீ நலந் தருகின்றாய்; வாடி வருபவர்க்கெல்லாம் வழி காட்டுகின்றாய். முன்னொரு நாள் காதல் மனையாளைப் பிரிந்த கமலக் கண்ணன் கவலையுற்று உன் கடற்கரையிலே வந்து நின்றான். அவ் வீரனது மனத் துயரை நீ மாற்றினாய்; அவனுடன் வந்த வானரப் பெருஞ்சேனையை இலங்கையிற் கரையேற்றினாய்; அன்று முதல் கோடானு கோடி மக்களைப் பிறவிப் பெருங்கடலினின்றும் கரையேற்றிக் கொண்டிருக்கின்றாய். இதனாலன்றோ, 'கோடியுற்றார் வீடு பெற்றார்' என்று ஆன்றோர் உன்னைப் போற்றுகின்றனர்?

"அறப்பெருங்கடலே! உன்கரையை வந்தடைந்தவர், இலங்கையில் முன்னாள் வாழ்ந்த அரக்கரை மறக்க வல்லரோ? உன்கரையில் மோதும் அலைகளெல்லாம் அவர் கதையை எடுத்தோது கின்றனவே! அரக்கர் கோமானாகிய இராவணன் கோடி மாதவங்கள் செய்தான்; என்னையாளுடைய ஈசனருளால் யாரும் பெறாத வரம் பெற்றான்; திறம் பெற்றான்; வளமார்ந்த இலங்கையில் வல்லரசனாய் வீற்றிருந்தான்; ஈசனுக் கினிய மாசில் வீணையைத் தன் மணிக் கொடியில் எழுதினான்; எட்டுத் திசையிலும் அவ் விசைக்கொடியை நாட்டினான்; முடி மன்னரெல்லாம் அவன் அடி பணிந்தார்கள். வெற்றிமேல் வெற்றி யடைந்தபேது அவன் தலை கிறுகிறுத்தது. 'மாநில முழுதும் எனதே' என்ற மமதை கொண்டான் அவன்; ஆகாயத்திலும் ஆணை செலுத்த விரும்பினான்; அதற்குத் தடையாக இமய மலையே நின்றாலும் அதைத்தட்டி வீழ்த்தத் துணிந் தான். ஒரு நாள், ஈசனார் வீற்றிருக்கும் இமய மலையைக் கடந்து செல்ல மாட்டாது இறங்கிற்று அவன் விமானம். 'ஐயனே! இது கயிலாய மலை! இதைக்கடந்து விமானம் செல்லாது' என்று அறிவுறுத்தினான் அவன் +வலவன். அம் மொழி அரக்கர் கோன் செவியில் ஏறிற்றா? கயிலாயம் என்ற சொல்லைக் கேட்ட பொழுது அவனுள்ளம் கசிந்ததா? கெடுமதியால் அவன் கடுகடுத்தான்; ++ தருக்கும் செருக்கும் தலைக்கொண்டான். அந்தோ! ஆணவத் தின் கொழுந்தாகிய அரக்கன் வெள்ளிமா மலையை அள்ளியெறிய முயன்றானே! ஈசனையே அசைத்து விடலாம் என்று எண்ணினானே!

+ வலவன்-வான ஊர்தியை இயக்கும் பாகன் இவனை ஆங்கிலத்தில் Pilot என்பர்.

"கடுகிய தேர் செலாது; கயிலாயம் ஈது

 கருதேல் உன்வீரம் ஒழிநீ

முடுகுவ தன்றுதன்மம் என நின்ற பாகன்

      மொழிவானை நன்று முனியா

விடுவிடு என்றுசென்று விரைவுற் றரக்கன்

      வரையுற் றெடுக்க முடிதோள்

நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்

      நினைவுற்றது என்தன் மனனே"

      - திருநாவுக்கரசர் தேவாரம்


அவன் கற்றதனால் யாது பயன்? வரம் பெற்றதனால் என்ன நலன்? செருக்குற்றவர் சீரழிவர் என்பதற்கு அரக்கர்கோன் ஒரு சான்றாயினன்; அசைத்துப் பெயர்த்த கயிலாய மலையின்கீழ் அகப்பட்டுக் கதறினான்; தவறு செய் ததை உணர்ந்து பதறினான்; இன்னிசை பாடினான். கருணையே உருவான எம்பெருமான் அரக்கன் செய்த பிழையையும் பொறுத்தான்; நாளும் வாளும் தந்து நல்லருள் புரிந்தான்.

"ஆழ்ந்தகன்ற அருங்கடலே! ஆண்டவன் அளித்த வாளின் வன்மையால் புறப் பகையை யெல் லாம் அடக்கினான் அவ் வரக்கன். ஆயினும், அகப் பகையாகிய காமத்தை அடக்கும் வலிமை பெற்றா னில்லையே! ஆண்மையுள் எல்லாம் சிறந்த ஆண்மை -பேராண்மை-என்பது அது வன்றோ? பிறன் மனை நோக்காத ஆண்மையைப் பேராண்மை என்று வள்ளுவரும் பாடினாரே! போராண்மை பெற்ற இராவணன் பேராண்மை பெற்றான் அல்லன்; இன்பத் துறையில் எளியன் ஆனான்; மற்றொருவன் மனைவியை-மாசிலாக் கற்பினாளை-வஞ்சித்துக் கவர்ந்தான்! அறம் மறுக, ஆண்மை மாசுற, அம் மங்கையை அசோக வனத்தில் சிறை வைத்தான் கல்லும் கரைந்துருகக் கற்பின் செல்வி கண்ணீர் வடித்தாள். அவள் அழுத கண்ணீர் அரக்கர் குலத்தை அறுக்கும் படையாயிற்று; வில்லின் செல்வனாகிய இராமனை இலங்கைக்கு வரவழைத்தது. பொன் னகரினும் சிறந்த இலங்கைமா நகரம் போர்க் களமாயிற்று. அரக்கரெல்லாம் அழிந்தனர். அறப் பகையால் இராவணனும் ஆவி துறந்தான். அல்லற்பட்டு ஆற்றாது சீதை அழுத கண்ணீர் அரக்கர் கோமானை அழித்தது.

"கோடிப் பெருந்துறையே! நன்றி செய்த உன்னை மீண்டும் நாடி வந்தான் இராமன்; என்றும் நீ செய்த நன்மையை உலகம் உணருமாறும், இராவணனைக் கொன்ற பழி தீருமாறும் உன் கரையருகே ஈசனுக்கு ஓர் ஆலயம் எடுத்தான்; பூசனை புரிந்தான். இராமன் எடுத்த அவ் வாலயம் இராமேச்சுரம் என்று பெயர் பெற்றது.

"தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்

பூவியலும் முடி பொன்றுவித்த பழி போயற

ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் மேவிய சிந்தையினார்கள்

தம்மேல்வினை வீடுமே."+       + தேவாரத் திருப்பாசுரம்

என்று எம்பிரான் சம்பந்தன் பாடிய பாட்டைப் படித்தேன்; என் தீவினையெல்லாம் தீருமாறு உன்னை அடுத்தேன். அரக்கர் தலைவனைக் கெடுத்த அகந்தை என்னும் நோய் அடியேனை அணுகாமல் காத்தருளல் வேண்டும். காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக் குற்றமும் அகற்றிக் கயிலாய நாதனிடம் என்னைக் கடிதனுப்ப வேண்டும். இராமனுக்கு அருள் புரிந்த இராமலிங்கப் பெருமானை நாடுகின்றது என் நெஞ்சம்! சென்று வருகின்றேன்" என்று கோடிக் கரையில் விடைபெற்றுக் கோயிலை நோக்கி நடந் தார் நாவரசர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3,20

கள்ளுண்ணாமை

(kaL  uNNAmai)

2.3.20

Avoiding Drunkkenness

Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity

குறள் எண்  927

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

uLotRi uLLUrr nakappaduvar enjnjAnRum

kaLotRRiki kaNsAi pavar.

Who turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen's jest, when they the fault espy.

பொருள்

Meaning

மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.

இன்றைய பொன்மொழி

பத்து மனிதனின் கண்களைவிட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது.    

Member to Members

Posted on 5-7-2011 URGENT REQUIREMENT FOR THE FOLLOWING POSITIONS AT GR NOIDA /NOIDA (PH-II) FOR A WELL REPUTED ORGANIZATION DEALING WITH INDUSTRIAL AND DATACOM PRODUCTS: [TThanks to Mr.Hariharan - harih_1968@yahoo.com  for sending this info]

·         SALES MANAGER / SALES ENGINEER – BE (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED INDUSTRIES.  LOCATION GREATER NOIDA / NOIDA / GUJARAT (RESIDENT ENGINEER)

·         MARKETING SERVICES MANAGER  – BE / B.TECH (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED / INDUSTRIEAL PRODUCTS INDUSTRIES.

·         SUPPLY CHAIN HEAD / MANAGER – HAVE GOOD EXPOSURE IN PURCHASE, LOGISTICS, VENDOR MANAGEMENT.  IF ADDITIONAL QUALIFICATION IN MATERIAL MANAGEMENT, IT WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 7 YEARS EXPERIENCE IN SCM ESP IN PURCHASE FUNCTION IN INDUSTRIAL / DATACOM PRODUCTS MANUFACTURING INDUSTRY

·         PRODUCTION HEAD / MANAGER - HAVE GOOD EXPOSURE IN PRODUCTION AND ALLIED FUNCTIONS.  BE / B.TECH (ELECTRICAL, ELECTRONICS & COMMUNICATIONS) IF ADDITIONAL QUALIFICATION DIPMLOA / DEGREE IN OPERATIONAL MANAGEMENT, WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 10 YEARS EXPERIENCE IN MANUFACTURING OF INDUSTRIAL / DATACOM PRODUCTS / POWER SUPPLY MANUFACTURING INDUSTRY

·         DESIGN ENGINEER – BE / B.TECH / DIPLOMA (MECH) FOR THEIR PHASE-II NOIDA.   EXP : 2 – 6 YEARS

·         QUALITY ENGINEER – BE/B.TECH/DIP (MECH) WITH RELAVANT EXPERIENCE IN R&D / Q&A DEPT.  LOCATION: NOIDA (PH-II)

·         ITI (ALL TRADES) WITH 4 – 7 YEARS EXP. WITH ASSEMBLY KNOWLEDGE IN PRODUCTION LINE TO WORK AT PHASE-II NOIDA LOCATIONS.

COMPENSATION AND BENEFITS:  ATTRACTIVE BENEFITS BESIDES BEST SALARY PACKAGE IN THE INDUSTRY.  GOOD CAREER PROGRESSION AND BEST WORKING ENVIRONMENT.

ALL CANDIDATES (MANAGERS / ENGINEERS) SHOULD HAVE VERY FLAIR IN ENGLISH LANGUAGE.

Interested candidates please EMAIL your CV mentioning position and location and industry you are looking for on the SUBJECT.  Other details along with  your resume including your current package and contact details, etc. in strict confidence to: goldenjobsoffer@yahoo.in. 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enbling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India