குறளும் பொருளும் - 1152 காமத்துப்பால் – கற்பியல் – பிரிவாற்றாமை இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. Translation: It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embrace. பொருள்: அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது. Explanation: His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation. உங்களுக்குத் தெரியுமா? ஒருநிலக் கொள்கை என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக இருந்தது எனக்கூறும் கொள்கை. "நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...) 6 ஐ விட 5 பெரிதா? ஆடு கூடி கூடி அலைந்தால் மழை வரும். கறுப்பு எறும்பு தனது முட்டையைத் தூக்கிச் சென்றால் மழை வரும். தட்டான் தாழப்(கீழே) பறந்தால் மழை வரும். கோழி சிறகை விரித்து மண்ணில் பதுங்கினால் மழை வரும். கழுதை இரண்டு காது தூக்கினால் மழை வரும். தவக்களை கத்தினால் மழை வரும். நரி ஊருக்குள் வந்தால் மழை வரும் என்றெல்லாம் பல நம்பிக்கைகள் உண்டு. இவை நம்பிக்கைகள் மட்டுந்தானா? எப்படி இந்த இனங்கள் நம்மைவிட அறிவு மிகுந்துள்ளன? கடந்த சுனாமியில் காட்டு விலங்குகள் அதிகம் அழியவில்லையமே? ஏன் .... இதுதான் இயற்கையுடன் ஒத்துவாழ் என்பதின் ரகசியம். உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல் பட்டால் சிறு எறும்பும் தலை காக்க உதவும். அப்படி என்ன சிறந்த சக்தி அவைகளிடம் உள்ளது? நமக்கிருக்கும் 6 புலன்களில் 5 தானே அவையிடத்தில்.... அந்த 5ல் சிலவற்றின் மாபெரும் சக்தி பற்றிப் பார்ப்போம். கேட்கும் சக்தி: மனிதனின் கேட்கும் சக்தி 20-20000 Hz. யானை, மாடு போன்ற விலங்கினகளுக்கு 16Hz இலிருந்து கேட்கும் சக்தி உள்ளது. மாடுகளால் 40000 hz வரை கேட்க முடியும். உங்களுக்கு தெரியுமா? பூகம்பத்தின் அதிர்ச்சி அலை, கடலலை ஆகியவை 16 hz அதிர்வைக் கூட கொடுக்கின்றன. எனவே விலங்குகள் நம்மைவிட அதிகம் இந்த பேரழிவை அதிகம் உணர்கின்றன. அதுமட்டுமின்றி குறைந்த ஒலி அதிர்வெண்கள் அதிகமாக இருக்கும் சமயத்தில் நமக்கு ஒருவித மன உலைவு, வயிறு புரட்டல் ஆகியன உருவாகும். விலங்குகள் இதை ஒரு அச்சமாகஉணர்ந்து விலகி ஓடுகின்றன. நாம் சோடா குடிக்க ஓடுகிறோம். புத்திசாலிகள் அல்லவா? இடி, புயல், சூறாவளி ஆகியவை குறைந்த அதிர்வெண் ஒலியை ( low frequency sound) உருவாக்கும். விலங்குகள் இதை அறிந்து மழையோ, புயலோ வரும் எனப் பயந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. கழுதை இந்த ஒலியை நன்றாகக் கேட்பதர்க்குத்தான் காதலி உயர்த்துகிறதோ? ஆடுகள், கோழி ஆகியவை தன்னை காப்பாற்றிக் கொள்ளத்தான் இங்குமங்கும் ஓடுகிறதோ? அறிவியல் தெரியாவிட்டாலும், ஒலி கேட்காவிட்டாலும் , அறிவு இயலைப் பயன்படுத்தி மனிதன் சில அறிவு உரைகளைச் சொன்னான். இன்றோ நாம் எங்க வீட்டு நாய் பேசுது, படம் வரையுது, பாட்டு கேக்குது, TV பாக்குது என்று சந்தோசப்படுகிறோம். அவை நமக்குச் சொல்லும் சிக்னல்களை அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு ஆறாம் அறிவு தர முயற்சிக்கிறோம். உணரும் சக்தி: ஒலி மட்டுமல்ல, பாரமானிமுக்கம் ( barometirc presure),நீர் நிலைநீர்ம அழுத்தம் ( hydrostatic presure ஆகியவற்றில் ஏற்படும் வித்தியாசத்தை உணர்ந்து பறவைகளும், வண்டுகளும், மீன் இனங்களும் கூட இதை அபாய மணியாக கருதி தன்னைக் காக்க உடனே தனது கூட்டிற்கோ அல்லது வேறிடத்திற்கோ செல்கின்றன. சுறா மீன்கள் நீரின் ஆழமான பகுதிகளுக்கு சென்று விடுகின்றன. இது ஒரு அனிச்சை செயலாக தானே நடக்கிறது. அப்படியென்றால் ஏன் நாம் விலங்குகளை மட்டும் அபாயமணிக் கருவியாக உபயோகப்படுத்தக் கூடாது என நீங்கள் கேட்கலாம். மேலே குறிப்பிட்டது விலங்குகளின் சக்தி அல்லது அப்போதை மாறுபட்ட நிலையை ஒரு அபாயமாக கருதும் ஒரு திறன். இது நமக்கும் இருக்கலாம் ஆனால் நாம் உபயோகப் படுத்துவதில்லை. அவை தன்னைக் காக்க உபயோகப் படுத்துகின்றன. அன்றைய மனிதனின் அறிவு இயல், இவற்றை கூர்மையாக கவனித்து மொழிபெயர்த்தது. மேற்கண்ட (குருட்டு) நம்பிக்கைகளை சொன்னது. நாம் இன்று வானிலையாளர்களை நம்புகிறோம் (அவர்களைப் பற்றி ஜோக் அடித்துக்கொண்டும்....) அறிவியலை நம்புகிறோம்.. இனி மழையோ, இடியோ வரும்போது வீட்டு விலங்குகள் எப்படி நடந்து கொள்கின்றன எனக் கவனியுங்கள். உடனே அவ்விலங்குகளுக்கும் சேர்த்து டீ குடுப்பது, பக்கோடா குடுப்பது என அதையும் கெடுக்காதீர்கள். அன்றைய மனிதன் வீட்டு விலங்குகளை தன் துணையாகவும், பலமாகவும் இருப்பதிர்க்காக உபயோகித்தான், இன்றோ, எங்க ரோமிக்கு ( நாய் என்று சொல்லக் கூடாதாம்) யாரையாவது புசுசாப் பார்த்தா வெக்கம்... ஓடி ஒளிஞ்சுக்கும் என பெருமைப் பட்டுக் கொள்கிறோம். திருடன் வந்தால் முதலில் ஒளிவது 'ரோமி' யாகத்தான் இருக்கும் போலும். நாயை, காதலியின் சைக்கிள் மணியின் ஒலியை கண்டுபிடிக்கவும், காதலுக்கு தூதாகவும், காவலாகவும் உபயோகிக்கிறோம். அதன் ஒரிஜினல் திறமையான புயலின் ஒலியை அறியும் தன்மையை அடக்கிவிட்டோம்... ஆனாலும் 6 தான் பெரிது. ஐந்தோடு ஒன்று சேர்த்தால். ( ஐந்தறிவு விலங்குகளின் திறமையை மொழியாக்கம் செய்ய முடிந்தால்). ஐந்தைக் கழித்தால், ஒன்றுதான் மிச்சம். Jobs Available தினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன · நிருபர்கள் ( Reporters) · முதுநிலை நிருபர்கள் (Senior Reporters) · உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors) · முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors) தகுதிகள்: · பட்டதாரி · 45 வயதிற்கு உட்பட்டவர் · நல்ல தமிழ் நடையில் எழுதுதல் · ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல் · பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 16/17-4-2012 7 PM | Stein Auditorium, India habitat Centre, Lodhiroad, New Delhi | Swathi Smriti 2012 Bi Century celebration of Maharaja Swathi Thirunaal | Rasikapriya | 9818192497, 9810429874 | 22-4-2012 8 AM – 10 AM | Hare Krishna Mandhir (ISKON Temple), Opp to NTPC Office, Sector 33, Noida | Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on "Ramanum Krishnanum". | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | | 22-4-2012 11:15 AM | Loka kala Manch auditorium (Lodhi Road – near ram mandir) | Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Ramanujars' Bagavadh Gita bashyam | | | 21/22-4-2012 7-9 PM | Delhi Tamil Sangam RK Puram. NDelhi | Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Rama Brahmam | Delhi Tamil Sangam & Nadha Brahmam | | Accomadation available for rent 1st Floor, Sector 23, Noida. 1 BHK (equivalent to2BHK). Please contact Sundar – 9717222579 Advisors around us · For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com · For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956. · HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |