கணினி வாங்கிய புதிதில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களையும் தேடித்தேடி படித்து என் தங்கத்துக்கு சொல்லித்தருவது என்வேலையாக இருந்தது. இப்போதும் தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் சிறு குழந்தைகளின் பெற்றோராக இருப்பவர்களுக்கு அந்த உரல்(url) களை தந்து நேரம் கிடைக்கும் போது பார்க்கச் சொல்வேன்.அவற்றில் சில இங்கே,
http://www.tamilvu.org/ -- -- இதில் தமிழ்நாட்டினை விட்டுவெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது.அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலிஅமைப்பும் கூடிய இப்பகுதி எளிதாக தமிழ்படிக்க குழந்தைகளுக்கு உதவும்.
மேலும் சில தமிழ்வகுப்புகள்...
http://www.mazalais.com/tamil.html
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/
http://www.southasia.upenn.edu/tamil/index.html
----------------------------------------------------------------
சில சமயங்களில் உங்கள் கணினியில் சில எழுத்துருக்கள் (font) இல்லாததால் சில தமிழ் தளங்களில் எழுதி இருப்பவை வாசிக்க முடியாமல் போகலாம் ... அப்போது அங்கே இருப்பதை நீங்கள் அப்படியே காப்பி செய்து இந்த சுரதா ரீடரில் ஒட்டி பிறகு டேப் (TAB) என்கிற எழுத்துருவை தேர்ந்துடுத்தால் கீழே கண்ட பெட்டியில் சரியான எழுத்துருவில் தெரியும்.. அல்லது வேறு எழுத்துருவைத்தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.
--------------------------
உங்களுக்கு எந்த ஒரு தமிழ் வார்த்தையின் சரியான பொருள் தெரியவேண்டுமா இந்த டிஜிட்டல் டிக்ஸனரியில் தட்டுங்கள்.. வந்துவிழும் ..
நீங்கள் யுனிக்கோடு ஃபாண்ட் வைத்திருந்தால் தமிழிலேயே கிடைக்கும்... அதற்கு டிஸ்ப்ளே ஆப்சனில் i have a unicode font installed இதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
விக்ஷனரியையும் இதில் சேர்க்கிறேன் அங்கிருந்தும் நீங்கள் தமிழ் சொற்களுக்கு பொருள் அறிந்து கொள்ளலாம்..
Friday, April 18, 2008
Subscribe to:
Posts (Atom)