அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (14) , சனிக்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
பேரவைத் தலைவரானார் டி. ஜெயகுமார்: முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தினமணி | சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவந்தது ஏன்? கலைஞர் விளக்கம் நக்கீரன் | |||||||||||||||
ஏமனில் இருந்து இந்தியர்கள் திரும்ப அரசு அறிவுறுத்தல் தினமலர் | முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ருசிகர பேச்சு தினத் தந்தி | |||||||||||||||
உறவு சீர்குலைந்த நிலையில் அமெரிக்க மந்திரி ஹிலாரி கிளிண்டன் ... தினத் தந்தி | ஹெட்லிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை : ராணா வக்கீல் வாதம் தினமலர் | |||||||||||||||
லிபியாவில் திரிபோலிநகர் மீது 4-வது நாளாக நேட்டோ ராணுவம் ... தினத் தந்தி | அப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்று: பா.ஜ.க. வெப்துனியா | |||||||||||||||
ரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா? - டாக்டர்கள் ... தட்ஸ்தமிழ் 5 மாணவிகள் முதலிடம்; 500-க்கு 496 தினமணி | வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ்சிங், கம்பீர் நீக்கம் ... தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1503 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. 1737 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார். 1905 - ரஷ்ய-ஜப்பானியப் போர்: சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது. 1815 - சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது. 1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். 1974 - வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிந்தது. 1987 - மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் ஆகஸ்ட் 13, 1988இல் விடுவிக்கப்பட்டார். 1991 - எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1998 - பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. பிறப்புகள் 1923 - என். டி. ராமராவ், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1998) 1980 - ம. சிவசுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர் இறப்புகள் 1884 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறிஸ்தவ ஊழியர் (பி. 1822) 1972 - எட்டாம் எட்வேர்ட், ஐக்கிய இராச்சியத்தின் முடி துறந்த மன்னர் (பி. 1894) சிறப்பு நாள் அசர்பைஜான், ஆர்மீனியா - குடியரசு நாள் பிலிப்பீன்ஸ் - தேசிய கொடி நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
குறள் எண் 891 | ||||||||||||||||
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. | ||||||||||||||||
aatRRuvAr aatRRal ikaLAmai potRRuvAr potRRaluL ellAm thalai. | ||||||||||||||||
The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty will. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும். | Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
அமைதியாயிரு நீ எவரையும் வசப்படுத்தி கொள்ள முடியும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||