Friday, April 8, 2011

Inru Ungal Kural - Newsletter from Avvai Tamil Sangam 8-4-11

நண்பர்களே,
 
இன்று அவ்வை தமிழ் சங்கம் அளிக்கும் மடல் "தினம் ஒரு குறள்" அல்ல. இன்றைய தினம் நாம் வேண்டுவது  " இன்று உங்கள் குரல்" .
 
இம்மடல் மூலம் நாங்கள் எங்களின் ஆதரவை இந்திய ஊழல் தடுப்பு சுதந்திரப் போராட்டதிற்கு வழங்குவதுடன் உங்களின் அருகாமையில்  நடக்கும் இந்த போராட்டத்தில் அரை மணியாவது கலந்து கொண்டு நாளைய ஊழலற்ற இந்தியாவை அமைக்கும் பணியில் உங்கள் பங்கை அளிக்கவும்.
 
நொய்டா மற்று சுற்றுப்பகுதியில் வசிப்போர் செல்லவேண்டிய இடம் கங்கா ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்.
 \
We at Avvai Tamil sanam support this move by Mr.Anna hazare and request every members to spend atleast half an hour at the sturuggle site to show your support to this Cause. Those living near Noida can reach Ganga Shopping Complex to show your support.
 
ATS
 

Thursday, April 7, 2011

Daily news letter 07-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நீங்கள் ரத்த தானம் தர விரும்பினால் உங்களின் பெயர், ஊர், ரத்த வகை  மற்றும் தொலைபேசி எண்களை எங்களிடம் அனுப்பச் சொல்லி கேட்டிருந்தோம். இந்த முயற்சி, தானம் தர விரும்புவோரின் பட்டியலை தயாரித்து நம் வலை தளத்தில் வெளியிடவும், அவசர காலத்தில் தேவைப்படுவோர் இப்பட்டியல் மூலம் தானம் கொடுப்போரை தொரடுகொள்ளவும் வழி செய்யவும் ஆகும்.

இதுவரை 8 பேர் மட்டுமே தங்கள் தகவல்களை கொடுத்துள்ளனர். இந்த முயற்சி உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் உதவும் எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட இடம் சார்ந்த பட்டியல் அல்ல. எனவே உலகின்  எம்மூலையில் இருந்தாலும் தயவு செய்து தானம் தர முன்வருவோர் தங்கள் தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

முன்பே  தமது விருப்பத்தை தெரிவித்தோர் மீண்டும் தெரிவிக்க தேவையில்லை.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 24 ( ௨௪), வியாழன், திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilheritage.org/

சமகால மின்னூடகத்தின் வழியே தமிழ் மரபை நிலைநிறுத்தலும், அறிந்துகொள்ளுதலும். Tamil Heritage Foundation (THF) is a global initiative to preserve and understand Tamil heritage in Digital Media.

தெரிந்து கொள்ளுங்கள்  

தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைப் பின்பற்றி உள்ளது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது தினமலர்  

இந்தியாவுக்கு நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் ... தினமணி

தமிழகத்தில் உச்சகட்ட பிரசாரம்  தினத் தந்தி -

சத்ய சாய் பாபாவின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது தினமலர்

புதுச்சேரியில் ராகுல் காந்தி இன்று பிரசாரம் தினமணி

துணை கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார், ஜெயவர்த்தனே தினத் தந்தி

நடிகை சுஜாதா மரணம்  தினத் தந்தி

கேப்டன் தோனிக்கு புதுப் பொறுப்பு! தினமணி

சாதிக்பாட்சா தற்கொலை: சி.பி.ஐ.விசாரணை தொடங்கியது  நியூஇந்தியாநியூஸ்

பாகிஸ்தான் அணியில் இருந்து அக்மல், யூனிஸ் கான், ரசாக் நீக்கம்  தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.

1541 - பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.

1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.

1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

1906 - வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.

1927 - முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.

1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1939 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது.

1943 - யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.

1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.

1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.

1964 - ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.

1978 - நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.

1983 - ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

1992 - ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.

1994 - ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.

2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.

2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

பிறப்புகள்

1889 - கப்ரியேலா மிஸ்ட்ரல், நோபல் பரிசு பெற்ற சிலி எழுத்தாளர் (இ. 1957)

1920 - ரவி சங்கர், சிதார் கலைஞர்

இறப்புகள்

1761 -தோமஸ் பேயிஸ், ஆங்கிலேய கணிதவியலாளர் (பி. 1702)

சிறப்பு நாள்

உலக சுகாதார நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.13

இகல்(Igal)

 

2.3.13

 

HATRED

குறள் எண்  859

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
.

igalkANAn Akkam varunkAl athanai

migalkANum kedu tharaRkku

Men think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power.

பொருள்

Meaning

ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase

இன்றைய பொன்மொழி

சிந்தனை இல்லாமல் முன்னேற்றம் இருக்க முடியாது   

இன்றைய சொல்(Today's Word)

ஓட்டரு (வி)

VOttaru

பொருள்

Meaning

1.        ஓடி வா    

come running    

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Wednesday, April 6, 2011

Daily news letter 06-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

1 நீங்கள் ரத்த தானம் தர விரும்பினால் உங்களின் பெயர், ஊர், ரத்த வகை  மற்றும் தொலைபேசி எண்களை எங்களிடம் அனுப்பச் சொல்லி கேட்டிருந்தோம். இந்த முயற்சி, தானம் தர விரும்புவோரின் பட்டியலை தயாரித்து நம் வலை தளத்தில் வெளியிடவும், அவசர காலத்தில் தேவைப்படுவோர் இப்பட்டியல் மூலம் தானம் கொடுப்போரை தொடர்பு கொள்ள வழி செய்யவும் ஆகும்.

இதுவரை 6  பேர் மட்டுமே தங்கள் தகவல்களை கொடுத்துள்ளனர். இந்த முயற்சி உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் உதவும் எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட இடம் சார்ந்த பட்டியல் அல்ல. எனவே உலகின்  எம்மூலையில் இருந்தாலும் தயவு செய்து தானம் தர முன்வருவோர் தங்கள் தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

 

2. ஈகரை வலைதளம் வழங்கும் மாபெரும் கவிதைப் போட்டி

கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :1. காதல்   2. சமுதாயம்    3, அரசியல்

விதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com . மேலும் விபரங்களுக்கு இங்கு செல்லுங்கள்.... http://www.eegarai.net/t55497-4

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 23 ( ௨௩), புதன் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.eegarai.net/ 

உலகத் தமிழர்களின் உறவுப் பாலம்.  

தெரிந்து கொள்ளுங்கள்  

ஒருவரின் பெயருடன் தாயின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

அதிமுக கூட்டணி தலைவர்கள் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ...  தினகரன் 

ஜப்பான் உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை தினமலர்

கள்ள ஓட்டு போட்டால் ஒரு வருடம் ஜெயில்  தினத் தந்தி 

சாய்பாபா நலம்பெற உலகமெங்கும் பிரார்த்தனை தினமணி

சாதனைக்காக வாக்களியுங்கள்: சோனியா காந்தி பிரசாரம்  தினமணி 

இலங்கை கேப்டன் சங்கக்கரா பதவி விலகினார் தினத் தந்தி

சோனியா: தமிழர் பிரச்சினைக்கு முன்னுரிமை பிபிசி

வீட்டு கடன் வட்டி உயர வாய்ப்பு இல்லை  தினகரன் 

மதுரை கலெக்டர், எஸ்.பி., மீது வழக்கு:மு.க. அழகிரி ஆவேசம்  தினமலர்

சென்செக்ஸ் 15 புள்ளிகள் சரிவுடன் நிறைவு வெப்துனியா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

1782 - தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். முதலாம் ராமா மன்னனாக முடி சூடினான்.

1814 - நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை வடக்கு வேர்ஜீனியாவில் நடத்தினர்.

1869 - செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது.

1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.

1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.

1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை ஜெர்மனி முற்றுகையிட்டது.

1965 - "ஏளி பேட்" (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.

1973 - பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1998 - இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.

2005 - குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அதிபரானார்.

பிறப்புகள்

1483 - ரஃபாயெல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520)

1815 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1876

1911 - பியோதர் லைனென், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1979)

1920 - எட்மண்ட் பிஷர், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்

1928 - ஜேம்ஸ் வாட்சன், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1949 - ஹோர்ஸ்ட் ஸ்டோர்மர், நோபல் பரிசு பெற்றவர்

1963 - ரஃப்வேல் கோர்ரியா, ஈக்குடோர் நாட்டின் அதிபர்

இறப்புகள்

1520 - ரஃபாயெல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483)

1961 - ஜூல்ஸ் போர்டெட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1870)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.13

இகல்(Igal)

 

2.3.13

 

HATRED

குறள் எண்  858

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

igalirkku ethirsaaithal Akkam athanai

migalUkkin vU-kkumAm kedu

Men think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power.

பொருள்

Meaning

இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.

இன்றைய பொன்மொழி

பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.  

இன்றைய சொல்(Today's Word)

ஓசு (பெ)

VOsu

பொருள்

Meaning

1.        உடல் வலிமை   

bodily strength   

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India