Saturday, September 13, 2008

Daily news letter 12-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 13,2008 ஸர்வதாரி ஆவணி – 28/ ரம்ஜான் – 12
Today in History: September 13

1922 - The temperature (in the shade) at Al 'Aziziyah, Libya reaches a world record 57.7°C (135.9°F).
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_12
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)

209. தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
Beware, if to thyself thyself is dear,Lest thou to aught that ranks as ill draw near!
Meaning :
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
If a man love himself, let him not commit any sin however small.
தினம் ஒரு சொல்
ஆடுஉ - ஆண்மகன் - MALE
பொன்மொழி
அன்பை கடன் கொடு, அது அதிக வட்டியுடன் உனக்கு திரும்பக் கிடைக்கும்.
பழமொழி – Proverb
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. (இது பொருள் கடன் பற்றியது)

Friday, September 12, 2008

Daily news letter 12-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 12,2008 ஸர்வதாரி ஆவணி – 27/ ரம்ஜான் – 11 (திருஒணம் பண்டிகை)
Today in History: September 12 -ONAM FESTIVAL ( We wish the people from the god’s own land a happy Onam festival )

1905 - Anglo-Japanese treaty provides for Japan to help safeguard India at London.
1948 - Invasion of the State of Hyderabad by the Indian Army on the day after the Pakistani leader Jinnah's death to limit damage control.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_12
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin
)
208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று.
Man's shadow dogs his steps where'er he wends;Destruction thus on sinful deeds attends.
Meaning :
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீயசெயல்களில் ஈடுபடுபவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.
தினம் ஒரு சொல்
ஆடவை - நடன அரங்கம் - dancing hall
பொன்மொழி
உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.
பழமொழி – Proverb
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய

Thursday, September 11, 2008

Daily news letter 11-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam ( Bharathiyar & Mohd Ali Jinnah’s Death Anniversary day)

September 11,2008 ஸர்வதாரி ஆவணி – 26/ ரம்ஜான் – 10 (பாரதியார் நினைவு நாள்)
Today in History: September 11

1906 - Mahatma Gandhi coins the term Satyagraha to characterize the Non-Violence movement in South Africa.
BIRTH
1895 - Vinoba Bhave (real name Vinayak Narhari Bhave), great Gandhian Acharya, was born at Ganoda village of Maharashtra.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_11
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)

207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
From every enmity incurred there is to 'scape, a way;The wrath of evil deeds will dog men's steps, and slay.
Meaning :
ஒருவர் நேரடியான பகைக்கு தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீயவினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.
தினம் ஒரு சொல்
ஆட்டகம் - குளியலறை, BATHROOM
பொன்மொழி
நேரத்தை அறுவடை செய்வது தொழில்தான்.
பழமொழி – Proverb
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

Wednesday, September 10, 2008

Daily news letter 10-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

====================
Kunnakudi Vaidhyanathan is no more :
Our condolences go to members of his bereaved family and we pray to give them the courage and fortitude to bear this irreplaceable loss.

===================

September 10,2008 ஸர்வதாரி ஆவணி – 25/ ரம்ஜான் - 9
Today in History: September 10

1955 - Parliament approved the Punjab Re-organisation Bill for the formation of Haryana and Punjab as two independent states.
BIRTH
1920 - Calyampudi Radhakrishna Rao was born at Hadagali in Karnataka. In 1945 he put forward the ''theory of estimation" in statistics. His formulae and therorems, for instance the "Cramer-Rao inequality", "The Fisher-Rao theorem" and "Rao-Black Wellistaion" are now part of any standard textbook of statistics. For his significant contributions, Rao received the S. S. Bhatnagar Award, the Meghnad Saha Medal and many more.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_10
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)

206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
What ranks as evil spare to do, if thou would'st shunAffliction sore through ill to thee by others done.
Meaning :
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
Let him not do evil to others who desires not that sorrows should pursue him.
தினம் ஒரு சொல்
ஆஞ்சி - அச்சம், FEAR
பொன்மொழி
கற்றுக்கொள்வதால் அறிவாளி மேலும் அறிவு பெறுகிறான். ( கற்றது கடுகளவு கல்லாதது கடலளவு )
பழமொழி – Proverb

கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.

Tuesday, September 9, 2008

Daily news letter 9-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 9,2008 ஸர்வதாரி ஆவணி – 24/ ரம்ஜான் - 8
Today in History: September 9

1791 - Washington, D.C., the capital of the United States, is named for President George Washington.
1949 - Hindi was accepted as the national language of India.
Birth:
"Kalki (Tamil: கல்கி) was the pen name of R. Krishnamurthy (Tamil: ரா. கிருஷ்ணமூர்த்தி) (September 9, 1899–December 5, 1954), an Indian freedom fighter, novelist, short-story writer, journalist, satirist, travel writer, script-writer, poet, critic, and connoisseur of the arts.”
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_9
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)
205. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
Make not thy poverty a plea for ill;Thy evil deeds will make thee poorer still.
Meaning :
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டிஇருக்கும்.
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.
தினம் ஒரு சொல்
ஆசேகம் - நனைத்தல், MOISTENING
பொன்மொழி
உன் வாழ்க்கையை இன்னொருவர் வாழ்க்கையோடு ஒப்பிடாமல் வாழ்.
பழமொழி – Proverb
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

Monday, September 8, 2008

Daily news letter 8-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam ( Sivanantha saraswathi / Virgin Mary’s (Mary of Nazareth) Birthday)

September 8,2008 ஸர்வதாரி ஆவணி – 23/ ரம்ஜான் - 7
Today in History: September 8
2000 - Dr. Surinder K. Vasal, Indian maize breeder, and Dr. Evagelina Villegas, Mexican cereal chemist, jointly awarded the World Food Prize-2000 for their decades-long scientific quest to produce quality protein maize for developing countries.
Birth:
1887 -Swami Sivananda, (1887-1963), religious leader, Hindu universalist renaissance guru, author of 200 books and founder of Divine Life Society with 400 branches worldwide, was born in the quiet village of Pattamadai, District Tirunelveli.
1933 - Asha Bhosle, famous playback singer, was born.For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_8
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)

204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Though good thy soul forget, plot not thy neighbour's fall,Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.
Meaning :
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டுவிடும்.
Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.
தினம் ஒரு சொல்
ஆசுகம் - 1.அம்பு,ARROW 2. காற்று, WIND
பொன்மொழி
இறைவன் மீது பக்தி கொள்வது மானிடப் பிறவிகளுக்கு அழியாத செல்வம்
பழமொழி – Proverb
சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.