. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
செப்டம்பர்- 19, புரட்டாசி - 3, ரமலான்- 29 | ||||
| ||||
Today in History | ||||
1893 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். அவரது சொற்பொழிவு (வீடியோகளில் ஒன்று) அவ்வை தமிழ்ச் சங்க இணையத்தளத்தில் உங்களுக்காக upload செய்யப்பட்டுள்ளது. 1980 - கே. பி. சுந்தராம்பாள், தமிழிசை, நாடகக் கலைஞர் (பி. 1908) 1893 - நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது. 1957 - ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது. | ||||
|
| |||
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த "அவ்வையார்" படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி.சுந்தராம்பாள். | தேசியவாதியான அவர், பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது "பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே" என்ற பாடலையும், கஸ்தூரிபாய் கால மானபோது "உன்னை மறந்திடப்போமா" என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது "உத்தமராம் காந்தியை" என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.
அவரது பாடல்களில் பிரசித்தமான ஒன்றான பழம் நீயப்பா - ஞானப் பழம் நீயப்பா பாடல் உங்களுக்காக: www.youtube.com/watch?v=Bf8S1KC84kk | |||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.4 | கேள்வி | 2.1.4 | Listening To Instruction | |
411 | செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. selvaththuL selvam sevichchelvam achchelvam selvaththuL ellAm thalai. Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent. | |||
பொருள் | Meaning | |||
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும். | Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும், கெட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.
n-allavan uRavai n-Alu paNam koduththu-ch sampAthikkavENdum, kettavan uRavai paththu-p paNam koduththu n-EkkavENdum. | Pay 4 times to buy the friendship of a good man, pay 10 times to annul your friendship with a bad man. | |||
இன்றைய சொல் | Today's Word | |||
எகினன் (பெ.) | ekinan | |||
பொருள் | Meaning | |||
1. பிரமன் (piraman) | 1. Brahma( who rides on a swan). | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||