Saturday, October 31, 2009

Daily news letter 31-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 31, ஐப்பசி – 14, ஜில்ஹாயிதா – 12

Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Today in History

1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.

1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.

1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1875 - வல்லபாய் பட்டேல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1950)

1930 - மைக்கேல் கொலின்ஸ், அமெரிக்க விண்வெளிவீரர்

1933 - துரை இராஜாராம், தமிழக எழுத்தாளர்

இறப்புகள்

1975 - எஸ். டி. பர்மன், இந்திய இசையமைப்பாளர் (பி. 1906)

1984 - இந்திரா காந்தி, இந்தியப் பிரதம மந்திரி (பி. 1917).

1986 - ரொபேர்ட் மலிக்கென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1896)

2003 - செம்மாங்குடி சிறிநிவாச ஐயர், இந்திய கர்நாடக இசைப் பாடகர், (பி. 1908).

2005 - பி. லீலா, பின்னணிப் பாடகி

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

இந்திரா காந்தி (ஜனவரி 24, 1966 – மார்ச் 24, 1977) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

சர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31 1875 – டிசம்பர் 15 1950) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து பிரித்தானியர்களுக்கு எதிர் அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

துரை இராஜாராம் (பிறப்பு: அக்டோபர் 31, 1933) பி. ஏ. துரைசாமிப்பிள்ளையின் மகனாக பிறந்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல வைணவ மாநாடுகளில் கலந்துகொண்ட இவர் 1994 ஆம் ஆண்டு பண்ருட்டி வைணவ மாநாட்டிற்கு இவர் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

இவர் இயற்றிய வ. உ. சிதம்பரனார், விண்ணுலகில் பாரதியார் என்னும் நாடகங்களை சென்னை வானொலி ஒலிபரப்பியுள்ளது. கம்பராமாயணம், பதினெண் கீழ்க்கணக்கு, ஸ்ரீவசன பூஷணம், கம்பனின் சிற்றிலக்கியங்கள், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், மூவருலா, மஸ்தான் சாகிபு பாடல்கள் மற்றும் பல நூல்களுக்கு தெளிவுரை எழுதியுள்ளார்.

கலிஃபோர்னியாவில் உள்ள உலகக் கலை பண்பாட்டு இயக்கம் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சீனிவாச ஐயர் (பிறப்பு: ஜூலை-25, 1908 இறப்பு: 2003 ), கர்நாடக இசையுலகின் பீஷ்ம பிதாமகனாகக்கருதப்பட்டவர். தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடி அருகே திருக்கொடிக்காவல் கிராமத்தில்மிகப் பிரபலமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர்.

1948ம் ஆண்டில் மியூசிக் ஆகாடெமியின் சங்கீத கலாநிதி பட்டத்தைப் பெற்றார். இளம் வயதில் அந்தப் பட்டம்பெற்ற முதல் நபர். மத்திய அரசின் பத்மபூஷன் உள்பட நாட்டின் மிக உயரிய இசைவிருதுகளைப் பெற்றவர்.

மறைந்த திருவாங்கூர் மகாராஜா சுவாதித் திருநாள் எழுதிய கீர்த்தனைகளுக்கு இசை வடிவம் தந்தவர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான கலைஞராக இருந்தவர். திருப்பதி கோவிலின் ஆஸ்தான கலைஞராகவும் இருந்தவர். சங்கீத கலாபூஷன் உள்ளிட்ட பல்வேறுவிருதுகளைப் பெற்றுள்ளார்.

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.7

பெரியாரைத் துணைக்கோடல்

2.1.7

Gaining Great men's help

450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

pallAr pakaikoLaliR paththaduththa thee maiththae

na-llAr thodarkai vidal.

Than hate of many foes incurred, works greater woe

Ten-fold, of worthy men the friendship to forego.

பொருள்

Meaning

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.

இன்றைய பொன்மொழி

மனதிற்கு மனமே சாட்சி. மற்றதற்குத் தெய்வமே சாட்சி.

இன்றைய சொல்

Today's Word

எண்ணீர்  பெ.

eNNEr

பொருள்

Meaning

1.  (எள் + நீர்) இறந்தோர்க்கு இடும் படையல், திலோதகம்.

iRan-thorkku idum padaiyal, thilOthakam

1.  Water with sesame seeds offered to the dead as libation.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, October 30, 2009

Daily news letter 30-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 30, ஐப்பசி – 13, ஜில்ஹாயிதா – 11

Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Today in History

1502 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.

1945 - இந்தியா ஐநாவில் இணைந்தது.

1947 - உலக வர்த்தக மையத்தில் அடித்தளமான கேட் நிறுவனம் துவங்கப்பட்டது.

1973 - ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.

1985 - சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.

பிறப்புக்கள்

1821 - ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)

1908 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)

1909 - ஹோமி பாபா, இயற்பியல் ஆராய்ச்சியாளர் (இ. 1966)

இறப்புகள்

1910 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828)

1963 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

1973 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

முத்தூராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர் முத்துராமலிங்கம். தலை சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலை சிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப் பட்டு வருகின்றது.

ரா.கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு (சனவரி 5 - 1902 - அக்டோபர் 30, 1973) இந்திய அரசியல்வாதி. விடுதலைப் போராட்ட வீரர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு 1957 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும், 1962 இல் ராஜபாளையம் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மும்முறை வெற்றி பெற்றார். 15 ஆண்டுகள் சட்டப்பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தார் ரா.கி. சொந்த வாகனம் அவருக்கென்று ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாக பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுபணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்கையின் முக்கியமான செய்தி காந்தியடிகளின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜர் புகழாரம் சூட்டினார்.

வினோபாவின் பூமி தான கொள்கைகாக ஏழை அரிசனங்களுக்கு தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கினார்.

இந்திய அணுசக்தியின் சிற்பி ஹோமி ஜஹாங்கீர் பாபா(அக்டோபர் 30, 1909 – சனவரி 24, 1966). குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது. எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த 'தியரி'யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது.

1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது. 1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன. பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 'விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்' என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார்.

31 வயதில் 'மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி' விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும்.

இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' ( Bhabha Atomic Research Centre ) எனப் பெயரிடப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.7

பெரியாரைத் துணைக்கோடல்

2.1.7

Gaining Great men's help

449

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.

muthalilArk uuthiya millai mathalaiyAnj

sAr pilArk killai n-ilai.

Who owns no principal, can have no gain of usury;

Who lacks support of friends, knows no stability.

பொருள்

Meaning

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

இன்றைய பழமொழி

Today's Proverb

ஆறெல்லாம் பாலாய்ப்போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

aarellaam pAlAi pOnAlum n-Ai n-akkiththAn kudikkum.

Even if a river flows with milk, a dog can take in only one lick at a time (literal)

Meaning

What one learns is limited by ones capacity to understand.

இன்றைய சொல்

Today's Word

எண்ணிலார்  பெ.

eNNilar

பொருள்

Meaning

1.  பெரும் எண்ணிக்கையிலானோர் (perum eNNikkaiyilAnOr)

2.  பகைவர் (pakaivar)

1.  Innumerable people.

2.  Enemies, foes.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Thursday, October 29, 2009

Daily news letter 29-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 29, ஐப்பசி – 12, ஜில்ஹாயிதா – 10

Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Today in History

1863 - சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது

1929 - "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.

1966 - தேசிய பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது

1969 - உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.

1998 - டிஸ்கவரி விண்ணோடம், எஸ்.டி.எஸ்.,-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது

பிறப்பு:1985 - விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர்

இறப்பு:2007 - லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916)

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.7

பெரியாரைத் துணைக்கோடல்

2.1.7

Gaining Great men's help

448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.

idippArai illAtha eemarA mannan

keduppA rilAnung kaedum.

The king with none to censure him, bereft of safeguards all,

Though none his ruin work, shall surely ruined fall.

பொருள்

Meaning

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there is no one to destroy him.

இன்றைய பழமொழி

Today's Proverb

கான மயிலாட கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து

kAna mayilAda kaNdirun-tha vAn kOzhi, thAnum adhuvAgap pAvithu than pollach chiRagai virithu.

A turkey imagining it'll become a peacock simply by dancing (literal)

Meaning

A dancing turkey is still a turkey

இன்றைய சொல்

Today's Word

எண்ணியார்  பெ.

eNNiyar

பொருள்

Meaning

1.  சிந்தித்துச் செயலாற்றுவோர்  (sin-thithuch seyalAtRRuvOr)

1.  Those who think out something.