Saturday, August 30, 2008

Daily news letter 30-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam (International Day of the Disappeared)

August 30,2008 ஸர்வதாரி ஆவணி - 14/ ஷாபான் – 28 (கலைவாணர் என்.எஸ்.கே நினைவுநாள்)
Today in History: August 30

The International Day of the Disappeared on August 30 is an annual commemoration day created to draw attention to the fate of individuals imprisoned at places and under poor conditions unknown to their relatives and/or legal representatives
1992 - The first Indian-built ALH (Advanced Light Helicopter) successfully flown in Bangalore
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_30
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)

197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.
Let those who list speak things that no delight afford,'Tis good for men of worth to speak no idle word.
Meaning :
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.
தினம் ஒரு சொல்
அறத்தவிசு - நீதிபதியின் இருக்கை, SEAT OF THE JUDGE
பொன்மொழி
தொண்டுதான் உண்மை அன்பைக் குறிக்கும்.
பழமொழி – Proverb

வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்

Friday, August 29, 2008

Daily news letter 29-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam ( National Sports Day of India)

August 29,2008 ஸர்வதாரி ஆவணி - 13/ ஷாபான் – 27
Today in History: August 29

1931 - Gandhi arrives in London for second Round Table Conference on India.
Birth days
1905 - Dhyan Chand, Indian hockey player (d. 1979)
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_29
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)

196. பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
Who makes display of idle words' inanity,Call him not man, -chaff of humanity!
Meaning :
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.
Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.
தினம் ஒரு சொல்
அற்கன் - சூரியன், SUN
பொன்மொழி
உலகிலுள்ள எல்லாச் சக்திகளையும்விட ஆன்மசக்தியே அதிக பலமுள்ளதாகும்.
பழமொழி – Proverb
பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

Thursday, August 28, 2008

Daily news letter 28-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 28,2008 ஸர்வதாரி ஆவணி - 12/ ஷாபான் – 26
Today in History: August 28

1898 - Pepsi was first made in New Bern, North Carolina, in the United States in the early 1890s by pharmacist Caleb Bradham. In 1898, "Brad's drink" was changed to "Pepsi-Cola" and later trademarked on June 16, 1903.
Birth days
1896 - Chembai Vaidyanatha Bhagavathar, great musician and Padma Bhushan awardee, was born at Chembai in Kerala.
1896 - Firak Gorakhpuri, Urdu poet and Gyanpeeth awardee, was born.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_28
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)

195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.
Gone are both fame and boasted excellence,When men of worth speak of words devoid of sense.
Meaning :
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
If the good speak vain words their eminence and excellence will leave them.
தினம் ஒரு சொல்
அளகம் - பெண்ணின் கூந்தல், WOMEN'S HAIR
பொன்மொழி
சுறுசுறுப்பானவர்களுக்கு கண்ணீர்விட நேரமில்லை.
பழமொழி – Proverb

சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

Wednesday, August 27, 2008

Daily news letter 27-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam - (Mother Teresa’s Birth day)

August 27,2008 ஸர்வதாரி ஆவணி - 11/ ஷாபான் – 25 (அன்னை தெரசா பிறந்த நாள்)
Today in History: August 27

1604 - Guru Granth Sahib was established in the Golden Temple of Amritsar.
1859 - Petroleum discovered in Titusville, Pennsylvania. World's first successful oil well.
Birth days
1910 - Mother Teresa, [Agnes Gonxha Bojaxhiu], nobel Prize awardee and social worker, was born in Skopje, Macedonia in Yugoslavia.
1908 - Don Bradman, Australian cricketer (d. 2001)
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_27
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)
194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.
Unmeaning, worthless words, said to the multitude,To none delight afford, and sever men from good.
Meaning :
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.
தினம் ஒரு சொல்
அழறு - சேறு, MUD
பொன்மொழி
நம்முடைய மனதைப் பொருத்தே நமது கருத்துக்கள் அமையும்.
பழமொழி – Proverb

மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

Tuesday, August 26, 2008

Daily news letter 26-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam - (திரு. வி, கல்யாணசுந்தரம் ( திரு. வி. க) பிறந்த நாள்)

August 26,2008 ஸர்வதாரி ஆவணி - 10/ ஷாபான் – 24 (திரு. வி, கல்யாணசுந்தரம் ( திரு. வி. க) பிறந்த நாள்)
Today in History: August 26
1303 - Alauddin Khilji captured Chittorhgarh after defeating Rana Bhim Singh. Before the capture, Padmini, the beautiful queen along with several hundred females, had sacrificed herself in fire (Jouhar Pratha). This whole battle was fought due to Padmini.
1858 - First news dispatch by telegraph.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_26
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)

193. நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains.
Meaning :
பயனற்றவகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."
தினம் ஒரு சொல்
அவிழகம் - மலர்ந்த பூ, FULL BLOWN FLOWER
பொன்மொழி
தொலைநோக்கும், செயல்திறனும் வெற்றிக்கு படிக்கட்டுகள்.
பழமொழி – Proverb
வருந்தினால் வாராதது இல்லை.

Monday, August 25, 2008

Daily news letter 25-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 25,2008 ஸர்வதாரி ஆவணி - 9/ ஷாபான் – 23 ( கிருபானந்த வாரியார் பிறந்த நாள் )
Today in History: August 25
1948 - Jana Gana Mana to be the provisional National Anthem till Constituent Assembly made a final decision.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_25
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)

192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more.
Meaning :
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.
தினம் ஒரு சொல்
அவிழ்மடல் - திறந்த அஞ்சல், book post
பொன்மொழி
பயன் கருதி செய்யப்படும் வேலை தொண்டாகாது.
பழமொழி – Proverb
பேராசை பெருநட்டம்.

Sunday, August 24, 2008

Daily news letter 24-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 24,2008 ஸர்வதாரி ஆவணி - 8/ ஷாபான் – 22
Today in History: August 24
1690 - Calcutta, India is founded.
1991 - Mikhail Gorbachev resigns as head of the Communist Party of the Soviet Union.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_24
இன்றைய குறள்

அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.
Words without sense, while chafe the wise,Who babbles, him will all despise.
Meaning :
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.
He who to the disgust of many speaks useless things will be despised by all.
தினம் ஒரு சொல்
அவாசி - தெற்கு திசை, SOUTH
பொன்மொழி
பிறருக்காக பிரார்த்தனை செய்பவருடைய பிரார்த்தனையே கேட்கப்படும்.
பழமொழி – Proverb
மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.