Saturday, May 14, 2011

Daily news letter 14-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்.

முதன் முறையாக பிரதான எதிர்க்கட்சியாக அமையவிருக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு மேலும் பன்மடங்கு உயரவும், தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்  ஆகியவை மேலும் சிறந்த முறையில் பாதுகாக்கப்படவும் தேவையான முயற்சிகளை ஒன்றுசேர்ந்து எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை ௩௧ (31) , சனிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

ஓர் ஆந்தை தனது தலையை இரு புறமும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

நான்கு மாநில முதல்வர்கள் ராஜினாமா தினமலர் 

முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெப்துனியா

 ஜெயலலிதாவுக்கு பிரதமர் டெலிபோனில் வாழ்த்து தினத் தந்தி

ஒசாமா பின்லேடன் கொலையில் சர்வதேச விதிகள் மீறல்  தினகரன்

கருணாநிதி 12வது முறையாக வெற்றி தினமலர் 

பெட்ரோல் விலை, நாளை உயருகிறது தினத் தந்தி

கடப்பா இடைத் தேர்தல் ஜெகன் அமோக வெற்றி தினகரன்

ராஜஸ்தான் கேப்டன்: வாட்சன் விருப்பம் தினமணி

பிரதான எதிர்க்கட்சியாகிறது தேமுதிக தினமணி

நான் நினைத்தது போல அதிமுக வென்றது மிக மிக மகிழ்ச்சி-நடிகர் விஜய்  தட்ஸ்தமிழ்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1264 - இங்கிலாந்தின் இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி பிரான்சில் கைது செய்யப்பட்டான்.

1610 - பிரான்சின் நான்காம் ஹென்றி மன்னன் கொலை செய்யப்பட்டான். பதின்மூன்றாம் லூயி முடி சூடினான்.

1643 - பதின்மூன்றாம் லூயி இறக்க, அவனது 4-வயது மகன் பதினான்காம் லூயி இரான்சின் மன்னனானான்.

1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.

1811 - பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1861 - ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.

1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.

1900 - கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.

1939 - பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.

1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.

1955 - பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.

1965 - இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

1973 - ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1976 - யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

2004 - டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "மேரி டொனால்ட்சன்" என்னும் பெண்ணை திருமணம் புரிந்தார்.

பிறப்புக்கள்

1907 - அயுப் கான், பாகிஸ்தான் அதிபர் (இ. 1974)

1944 - ஜோர்ச் லூகாஸ், திரைப்பட இயக்குனர்

1948 - பொப் வூல்மர், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பயிற்றுநர் (இ. 2007)

1953 - நொரொடாம் சிகாமணி, கம்போடியாவின் மன்னர்

இறப்புகள்

1574 - குரு அமர் தாஸ், மூன்றாவது சீக்கிய குரு (பி. 1479)

1837 - ஆ. குமாரசாமிப்பிள்ளை (பி. 1784)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.15

பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal)

 

2.3.15

 

Appraising enemy's skills

Better than knowing, endeavour to overcome and befriend, build safeguards, but not hesitate to destroy defying foes

குறள் எண்  879

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

ilaithAga munmaram kOlga kaLainar

kaikollum kAzhththa idaththu.

Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence.

பொருள்

Meaning

நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

இன்றைய பொன்மொழி

நண்பனுக்காக உயிரைக்கொடுப்பது என்பது எளிது ஆனால் உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Friday, May 13, 2011

Daily news letter 13-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை ௩ய  (30) , வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

மின் விலாங்குமீன்கள் 660 வோல்ட் திறனுள்ள மின் அதிர்வுகளை உண்டாக்கவல்லவை.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

ராகுல் கைதுக்கு எதிர்ப்பு; உ.பி.யில் சாலை மறியல் 10000 ... தினமணி

அமெரிக்க பங்கு சந்தை மோசடி: ராஜரத்னம் குற்றவாளி என அறிவிப்பு! தட்ஸ்தமிழ்

கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை  தினத் தந்தி

தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான் வசிக்கிறார் தினத் தந்தி

ஜம்முவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். தேர்வு தினமலர்

ஆப்கன் நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் இன்று உரை தினமணி

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி மாயாவதி கடும் ... தினகரன்

முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெப்துனியா

பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம் : டீசல், சமையல் காஸ் தப்பியது தினமலர்

புதிய அணுமின்உலை : கிலானி திறப்பு தினமலர்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1648 - டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

1765 - யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான்.

1787 - ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார்.

1830 - எக்குவாடோர் விடுதலை அடைந்தது.

1846 - ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.

1861 - பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் அவதானிக்கப்பட்டது.

1880 - நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.

1888 - பிரேசில் அடிமைமுறையை இல்லாதொழித்தது.

1913 - நான்கு இயந்திரங்களினால் ஆன முதலாவது விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்ற ரஷ்யர் இயக்கினார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்ஹெல்மேனியா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.

1943 - இரண்டாம் உலகப் போர்: வட ஆபிரிக்காவில் ஜெர்மனிய மற்றும் இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.

1952 - இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.

1954 - சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.

1960 - உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.

1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.

1981 - ரோமில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1997 - இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

1998 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.

1998 - இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.

2006 - திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.

பிறப்புக்கள்

1882 - ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (இ. 1963)

1905 - பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இ. 1977)

1918 - பாலசரஸ்வதி, பரத நாட்டிய மேதை (இ. 1984)

1956 - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய குரு

1978 - மைக் பிபி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1898 - பி. ஆர். ராஜமய்யர், தமிழ் எழுத்தாளர் (பி. 1872)

1978 - வி. தெட்சணாமூர்த்தி, தவில் மேதை (பி. 1933)

2001 - ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.15

பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal)

 

2.3.15

 

Appraising enemy's skills

Better than knowing, endeavour to overcome and befriend, biuld safeguards, but not hesitate to destroy defying foes

குறள் எண்  877

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

vagaiyaRinthu thaRseithu thaRkAppa mAyum

pagaivarkaN  patta serukku

Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.

பொருள்

Meaning

செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

இன்றைய பொன்மொழி

உண்மையான அறிவாளி  தன ரகசியத்தை தானே வைத்துக் கொள்ள வேண்டும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India