9, Bhagawan Dass Road, New Delhi 1
For More Info Contact:-
SWATI VASHISHTHA- 9971545172
T.T.SRINIVASAN - 8800532767
P. KULASEKARAN- 9868248831
தமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....
புதுடில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த தமிழ் அன்பர்களுக்கு.....
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை" எனும் பாரதியின் சொற்களை கொள்கையாய் கொண்டு வெளிவரும் "தினமணி" நடுநிலை நாளிதழ் புதிதில்லியிலிருந்தும் பதிப்பிடப்ப்படுகிறது. இன் நாளிதழை நீங்கள் பெற விரும்பினால் 011-23705701-05, 9711700590 என்ற எண்களுக்கோ அல்லது credelhi@dinamani.com எனும் மின் அஞ்சலுக்கோ தொடர்பு கொள்ளவும்.
உங்கள் பகுதியில் உள்ள தமிழ் அமைப்புக்கள்,முக்கிய நபர்கள், வழிபாட்டு தலங்கள்,பிரசித்தி பெற்ற தலங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை இப்பதிப்பில் வெளியிட 9013084695/8860654391/99711115251/9013084685 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௩௧ (31) , சனிக்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
பில்லி டிப்டன் எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது. | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
மும்பை ஜவேரி பஜாரில் வெடிகுண்டு வைத்த ஸ்கூட்டர் கண்டுபிடிப்பு தினகரன் | மும்பை குண்டுவெடிப்பில் இந்தியாவுக்கு உதவத் தயார்: அமெரிக்கா தினமணி | |||||||||||||||
கறுப்புப்பணத்தை ஒழிக்க கடுமையான சட்டம்: பிரதிபா பாட்டீல் தினமணி | இந்தோனேஷியாவில் எரிமலை குமுறுகிறது _ வீரகேசரி | |||||||||||||||
கனிமொழியை நலம் விசாரித்த ரஜினி நியூஇந்தியாநியூஸ் | ||||||||||||||||
சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ராஜினாமா ஏற்கப்பட்டது தட்ஸ்தமிழ் | சச்சினுக்கு ஸ்டிராஸ் பாராட்டு மாலை சுடர் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
தமிழ் நூல் படிப்போம் | ||||||||||||||||
Acknowledgements: Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்) 20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....12.கடற்கரையிலே கம்பர்பாண்டி நாட்டுக் கடற்கரையிலுள்ள பழம் பதிகளில் ஒன்று தருப்பசயனம் என்னும் திருப்புல்லணை. திருப்புல்லாகிய தருப்பையைத் தலையணையாக வைத்து, கருங்கடலை நோக்கிக் கருணையங் கடலாகிய இராமன் வரங்கிடந்தமையால் திருப் புல்லணை என்னும் பெயர் அப்பதிக்கு அமைந்த தென்பார். வானர சேனையுடன் நாடும் மலையும் கடந்து வந்த இராமன் இலங்கைக்கு எதிரேயுள்ள அக்கடற்கரையை அடைந்தான்; குறுக்கே நின்ற கடலைக் கடந்து எவ்வாறு அரக்கர் நாட்டுக்குச் செல்வது என்றெண்ணிக் கவலையுற்றான். அந்த மனப்பான்மையோடு அவ் வீரன் நின்ற நிலையையும் நெடுங்கடல் அவனை வரவேற்ற நீர்மையையும் கவிக் கண்ணாற் கண்ட கம்பர் பேசுகின்றார்:-"கருங்கடலே! அரக்கர் வாழும் இலங்கையின் நாற்புறமும் அரணாக நின்று அருங்காவல் புரிகின் றாயே! அவ் வரக்கர் அறநெறி துறந்தவர் என்பதை நீ அறியாயோ? 'இரக்கமற்றவர் அரக்கர்' என்ற வாய்மொழியும் கேட்டிலையோ? உன் காவலால் அன்றோ அன்னார் நிறுவிய வல்லரசு பின்னமின்றி வாழ்கின்றது? 'மா நீர் சூழ்ந்த இலங்கைக்கு மாற்றார் எவரேனும் வரமுடியுமா?' என்று அரக்கர் மார் தட்டிப் பேசுகின்றார்களே! 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்று மிஞ்சி அறைகின்றார்களே! உன் துணை யுடைமையா லன்றோ இப்படித் துள்ளுகின்றார்கள்?அறப் பெருங்கடலே! அரக்கர் வேந்தன் மறக்கள வேள்வி செய்பவன் என்பதை நீ மறந்தனையோ? பஞ்சவடிச் சோலையில் அவன் செய்த பாதகச் செயலை நீ அறியாயோ? மாசற்ற சீதையை நெஞ்சார வஞ்சித்துக் கவர்ந்தானே அந்நிருதர் வேந்தன்! தன்னந் தனியளாய்த் தவச்சாலையில் இருந்த கற்பின் செல்வியை எடுத்துச் சென்று சிறைச்சாலையில் வைத்த அவன் சிறுமையை நீ அறியாயோ? அசோக வனத்தில் சோகமே வடிவாயமைந்த அம் மங்கை, கணவனைத் திக்கு நோக்கித் தொழுவதும், விக்கி விம்மி அழுவதும், மக்கி மடிந்து விழுவதும் கண்டு இரக்கமற்ற அரக்கி யரும் தளர்ந்து ஏங்குகின்றார்களே! அவள் வடிக்கும் கண்ணீர் இலங்கைக் கோட்டையை இடித்து நொறுக்காமல் விடுமோ? 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்' என்பது ஆன்றோர் மொழியன்றோ?"அலைகடலே! அம் மங்கையின் கணவன் - செங்கமலக் கண்ணன்-வெஞ்சிலை வீரன், இதோ! உன் கரையில் வந்து நிற்கின்றான். அவன் பெருமையை அறிந்துதான் முன்னிலும் அதிகமாய் முழங்கு கின்றாயோ? சீதநீர்த் துளிகளைத் திரைக் கரத்தால் எடுத்து அவன் திருவடியில் தெளிக்கின்றாயோ? கோமகன் வந்தான் என்று குதிக்கின்றாய் போலும்? ஐயோ! அவ் வண்ணலின் நிலையை நீ அறிந்தாய் அல்லையே! ஆழிசூழ் உலமெல்லாம் அரசாளும் உரிமை துறந்து, பூழிவெங் கானம் போந்த புண்ணி யன் அவன்; கானகத்தில் கற்படை மனையாளைப் பறிகொடுத்துக் கடுந்துயர் உழந்த காதலன். மானம் அவன் மனத்தை அறுக்கின்றது. அரக்கர் நகரில் சிறைப்பட்ட சீதையின் சோகம் அவன் உள்ளத்தை உருக்குகின்றது; தூது சென்ற அனுமனிடம் அவள் சொல்லியனுப்பிய செய்தியை நினைந்து நினைந்து நெஞ்சம் துடிக்கின்றான் அவன்; அவள் குறிப்பிட்ட கால அவதி நெருங்குகின்றதே என்று மறுக்கம் உறுகின்றான்; காடும் மலையும் கடந்து வருகையில் சால நாள் கழிந்ததே என்று கவலைப்படுகின்றான்."மறிகடலே! நிலப்பரப்பின் எல்லை கண்ட வீரன் இப்போது நீர்ப் பரப்பின் தொல்லை கண்டு துளங்கு கின்றான்; உறக்கம் நீத்த கண்களோடு உன்னைப் பார்க்கின்றானே! + உன்னை நோக்கி அவலமே வடிவ மாக நிற்கும் அண்ணலை மணிவண்ணன் என்பார்கள்; தாமரைக் கண்ணன் என்பார்கள். ஆயினும் மனத்துயரால் மணிவண்ணத்தின் ஒளி மழுங்கி விட்டதே! இரவும் பகலும் உறங்காத கண்கள் செங் கமலத்தின் செவ்வி யிழந்தனவே!* அவன் அகத்தில் அடங்கிய ஆறாத் துயரம் முகத்தில் நன்றாய்த் தெரிகின்றதே! தூங்காத கண்களில் இன்னும் துலக்க மாகத் தோன்றுகின்றதே!+ "பொங்கிப் பரந்த பெருஞ்சேனைபுறத்தும் அகத்தும் புடைசுற்றச்சங்கிற் பொலிந்த கையாளைப்பிரிந்த பின்பு தமக்கினமாம்கொங்கிற் பொலிந்த தாமரையின்குழவும் துயில்வுற்று இதழ்குவிக்கும்கங்குற் பொழுதும் துயிலாதகண்ணன் கடலைக் கண்ணுற்றான்"--கம்பராமாயணம் - கடல் காண் படலம்"முத்து விளைக்கும் முந்நீரே! அறவோனாகிய அப் பெருமானைக் கண்டு நீ அன்பு கொண்டாய்; மெல்லிய தென்றலால் வரவேற்றாய்; அழகிய முத்துக்களைக் கையுறையாக உன் கரையிலே வைத்தாய்; அந்தோ! வந்தவன் மனநிலையறியாது நடந்து கொண்டாயே! உன் வரவேற்பு வெந்த புண்ணில் வேல் எறிந்தாற்போல் அவ் வள்ளலை வாட்டி வருத்துகின்றதே; எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்துவிட்டாயே! நீ விடுத்த மெல்லிய பூங்காற்று அவன் மேனியை வெதுப்புகின்றதே! நஞ்சுபோல் நலிகின்றதே! அதற்கும் மேலாக உன் முத்துக்கள் சீதையின் முறுவலை நினைப்பூட்டி, கனலோடு காற்றும் கலந்தாற்போல் கடுவேகத்தை அவன் மனத்தில் ஊட்டி விட்டனவே!"தூர மில்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்லவீர வில்லி நெடுமானம் வெல்ல நாளும் மெலிவானுக்குஈர மில்லாத நிருதரோடு என்ன உறவுண்டு உனக்கு ஏழைமூரல் முறுவல் குறிகாட்டி முத்தே! உலகை முடிப்பாயோ?" ++ கம்பராமாயணம் - கடல் காண் படலம்"தென் கடல் முத்தே! நீரிலே பிறந்து, நீரிலே வளர்ந்த உனக்கு ஈரமில்லாத அரக்கரோடு எப்படி உறவு உண்டாயிற்று? உனக்கும் அவர்க்கும் ஒருவித உடன்பாடும் இல்லையே! பண்பாடற்ற அரக்கரோடு சேர்ந்து ஐயன் மனத்தைப் புண்படுத்தி விட்டாயே! தன்னோடு சீதை கானகம் நோக்கிப் புறப்படும் பொழுது,"முல்லையும் கடல்முத்தும் எதிர்ப்பினும்வெல்லும் வெண்ண கையாய்!"என்று ஐயன் சொல்லியதை இங்கு நினைப்பூட்டி எல்லையற்ற இடர் தந்தாயே! இப்பொழுது அவ்வீரன் மனம் முறுகி நிற்கின்றது; வீணாகக் காலம் கழிகின்றதே என்ற விறுவிறுப்பு எழுகின்றது; பரபரப்புண்டாகிறது. வரைகடந்த சீற்றத்தால் அவான் வரிசிலை யெடுத்து வளைப்பானாயின் இவ் வுலகம் என்னாகும்? சரமாரியால் சராசர மெல்லாம் சாம்பராய் விடுமே!"நித்திலம் விளைக்கும் நெடுங்கடலே! உன் முகத்தைக் கண்டு பெருங்கோபமும் தாபமும் பிறந்தா லும்அவற்றை அடக்கும் திறம் உடையவன் அவ் வீரன்.செம்மை சான்ற நெறி திறம்பி, ஒருபோதும் வெம்மை விளைக்க அவன் ஒருப்படமாட்டான். 'பொறுத்தார் பூமியாள்வார்; பொங்கினார் காடாள் வார்'என்னும் முதுமொழியின் உண்மை யறிந்து வாழ்பவன் அவன்; 'என்றும் அறம் வெல்லும்; பாவம் தோற்கும்' என்ற கொள்கையை நன்றாக மனத்திற் கொண்டவன்; அரக்கர் செய்த தீமைக் காக அனைத்துலகையும் ஒழிக்க ஒருபோதும் கருத மாட்டான். இத் தகைய வீரனுக்குத் துணைபுரித லன்றோ உனக்குப் பெருமை தரும்? காலத்திற் செய்த நன்றி சிறிதெனினும் அது ஞாலத்தின் மாணப் பெரிது என்பது பொய்யாமொழி யன்றோ? அறவோரை ஆதரிக்கும் ஆழியே வாழி! அல்லோரை அழித்தொழிக்கும் ஆழியே, வாழி!" என்று வாழ்த்தி வணங்கினார் கவிஞர். | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.21 | சூது | 2.3.21 | Gambling | |||||||||||||
குறள் எண் 932 | ||||||||||||||||
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் | ||||||||||||||||
onReithi nooRizhakkum sudharkkum uNdAnkol nanReithi vAzhvathor aaRu | ||||||||||||||||
Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ | Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ? . | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
மிகக்கொடிய பகைவனிடத்தும் செம்மையான மொழியையே பயன்படுத்த வேண்டும். | ||||||||||||||||
Member to Members | ||||||||||||||||
1. Iyer boy (Veg. Non-smoker & Non drinker.) looking for a suitabale girl in the age of 35 years & above. Interested person can contact Mr.Hariharan at khh23pink@yahoo.com or at 9871436002 2. If you know some details about this book please send info to rmk@aryacom.com . Raga chikitcha:- I am on the look out for a book titled: Raga chikitcha" Many Hundreds of years before our forefathers have written the effect of various ragas and their medicinal aspect in curing various diseases. Some one can help me to get a copy or inform the site to get further details. Meena Venki 3. இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும். 4. . தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்,பண்பாடு ஆகியன வளர்க்க வெவ்வேறு சங்கங்கள்/குழுக்கள் பல இடங்களில் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி இச்சங்கங்கள் வெவ்வேறு இடங்களிருந்து புலம் பெயரும் தமிழர்களுக்கு பல உதவிகள் செய்யவும் உதவமுடியும். உலகெங்கிலும் உள்ள இச்சங்கங்கள் / குழுக்கள் / பற்றிய தகவல்களை நம் அனைவரின் நலனிற்காக தொகுத்து அளிக்கும் பணியினை அவ்வை தமிழ்ச் சங்கம் செய்ய விரும்புகிறது. உங்களின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள சங்கங்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற மின்-அஞ்சலுக்கு எழுதவும். சங்கம் பற்றிய தகவல், அதன் பணிகள், முகவரி, தொலைபேசி எண்கள், மின்-அஞ்சல், வலைத்தள முகவரி, தொடர்பு அதிகாரியின் பெயர் ஆகியவை அவசியம் வேண்டும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
இன்று பெருந்தலைவர் காமராஜ் பிறந்த தினம். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை
சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௩ய (30) , வெள்ளிக்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
தூங்கெயில் கதவம் என்பது சங்க காலத்தில் கடவுள் அஞ்சி என்ற அரசனால் கட்டப்பட்ட, வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு. | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
பத்மநாப சுவாமி கோயிலில் பொக்கிஷங்களை பாதுகாக்க நிபுணர் குழு ... தினகரன் | 'பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது' வெப்துனியா | |||||||||||||||
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : பேச்சில் மீண்டும் தோல்வி தினமலர் | ||||||||||||||||
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதீப் பதவியேற்பு தினத் தந்தி | ||||||||||||||||
மரபணு சோதனைக்கு என்னை கட்டாயப்படுத்த கூடாது: என்.டி.திவாரி நக்கீரன் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
தமிழ் நூல் படிப்போம் | ||||||||||||||||
Acknowledgements: Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்) 20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....
11.கடற்கரையிலே கண்டி மன்னன்இலங்கை என்று வழங்கும் ஈழநாடு இயற்கை வளம் வாய்ந்த நாடு. அங்குச் சிங்களவரோடு தமிழரும் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றார்கள். பரராஜசிங்கன் என்ற அரசன் அந் நாட்டை ஆண்டு வந்த காலத்தில் கடுமையான பஞ்சம் வந்துற்றது. பசியின் கொடுமையால் குடிகள் படாத பாடு பட்டனர். மன்னன் மனம் பதைத்து வாடினான்; காவிரி நாட்டை நோக்கினான்; தடையின்றிக் கொடுக்கும் தகைமை வாய்ந்த சடையப்ப வள்ளலின் உதவியை நாடினான். உடனே அவர் களஞ்சியத்தி லிருந்த நெல் கப்பலேறியது; யாழ்ப்பாணத் துறையில் வந்து மலைபோற் குவிந்தது. அதை கண்டான் அரசன்; கடற்கரையில் நின்று களிப்புடன் பேசலுற்றான்:-"தென் இலங்கைத் திருநகரே! சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழும் இந் நாட்டில் என்றும் இல்லாத பஞ்சம் இன்று வந்து சேர்ந்தது. மாதம் மூன்று மழையுள்ள நாட்டில் பத்து மாதமாக ஒரு துளி மழையில்லையே! பயிர் முகங் காட்டும் கழனிகள் எல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. வாழும் உயிர்கள் எல்லாம் வற்றி உலர்ந்து வானத்தையே நோக்கி நிற்கின்றன. காவலன் என்று பேர் படைத்த நான், நாடு படுந் துயரத்தைக் கண்டு நலிவுற்றேன்; கண்டிமா நகரிலுள்ள கண்கண்ட தெய்வமாகிய கண்ணகியை வேண்டினேன்.'தாயே! பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில், வானம் பொய்யாது, வளம் பிழைப்பறியாது என்று இளங்கோவடிகள் பாடினாரே! கற்புத் தெய்வமாகிய நீ கோயில் கொண்டிருக்கும் நாட்டிலே இக் கொடுமை நிகழலாமா? நெஞ்சறிய ஒரு பிழையும் நான் செய்தறியேனே! வஞ்சமின்றி வாழும் என் குடிகள் பஞ்சத்தின் வாய்ப்பட்டு வருந்துதல் தகுமோ? அன்னையே! நானும் இந் நாடும் உன் அடைக்கலம்' என்று முறை யிட்டேன். அன்றிரவு சற்றுக் கண்ணயர்ந்தேன்; ஒரு காட்சி கண்டேன். எண்ணறந்த கப்பல்கள் தமிழ் நாட்டிலிருந்து நெல் மூடைகளைக் கொணர்ந்து இந்த யாழ்ப்பாணக் கரையிலே இறக்கிக்கொண்டிருக்கக் கண்டேன்; கண் விழித்தேன். கப்பலும் இல்லை; நெல்லும் இல்லை; கனவிற் கண்ட காட்சி என்று உணர்ந்தேன்; கவலையுற்றேன். ஆயினும், அக் கனவு வீணாகப் போகவில்லை. ஈழநாட்டின் துயரம் தீர்ப்பது சோழநாட்டின் உரிமையன்றோ என்று சிந்தித்தேன். சோழநாடு காவிரி பாயும் வளநாடு. குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் பலர் அந் நாட்டில் வாழ்கின்றனர். இல்லையென்று சொல்லாமல் எல்லை யின்றிக் கொடுக்கும் நல்லார் பலர் அங்குள்ளார்கள். அவர்களுள் தலைசிறந்தவர் வாடாத பாமாலை பெற்ற வள்ளல்; சடையாது கொடுக்கும் சடைய வள்ளல். அவரிடம் இந் நாட்டின் சார்பாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு ஆறாம் நாளில் வந்தது ஆயிரம் கப்பல். அதோ! குன்று போலக் குவிந்திருக்கின்றதே அவர் அனுப்பிய நெல்! அந்த நெல்லிலே ஒரு கல்லுண்டா? கலப்புண்டா? பதருண்டா? பச்சை யுண்டா? அதை அள்ளிப் பார்ப்பவரெல்லாம் துள்ளி மகிழ்கின்றார்களே! இன்றுதான் இந் நாட்டார் முகத்தில் புன்னகை தவழக் கண்டேன்; என் மனக் கவலை விண்டேன்."தகை சான்ற தனி நகரே! தக்கோர் வாழும் நாடு தமிழ்நாடு என்று அறிவின்மிக்கோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதன் உண்மையை இன்று அறிந்தேன். தமிழ் நாட்டு வள்ளல், காலத்தில் உதவி செய்து நம்மை காப்பாற்றினார். கருணையே உருவாகிய அப் பெருமானுக்கு என்ன கைம்மாறு செய்ய வல்லோம்? உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவ ரல்லரோ? உயிர் தந்த ஒருவனை 'அம்மையே, அப்பா, ஒப்பிலாமணியே' என்று நாம் எந் நாளும் போற்றுவோம். அவ் வள்ளலார் குலம் வாழையடி வாழைபோல் நீடூழி வாழ்க என்று வாழ்த்துவோம். அவர் நாட்டிலுள்ள காவிரியாறு இன்று போலவே என்றும் வளமுறத் திகழும் வண்ணம் ஆண்டவன் திருவருளை வேண்டுவோம்."அருள் பூத்த தமிழ் நகரே! காவிரி நாட்டின் கண்ணெனத் திகழும் தில்லையம்பதியிலே எம்மை யாளுடைய ஈசன்-மும்மைசால் உலகுக்கெல்லாம் முதல்வன்-ஆனந்தக் கூத்தாடுகின்றான். அப் பெருமான் ஆடுகின்ற அம்பலத்தை, 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' என்று ஆன்றோர் பாடினர். காவிரியாற்றின் நடுவே கருணைமா முகிலாகிய திருமால் ஆனந்தமாய்க் கண்வளர்கின்றார். அவர் பள்ளிகொள்வதற்கு என்ன தடை? நாடு செழித்திருக்கின்றது; அறம் தழைத்திருக்கின்றது; எல்லோரும் இன்புற்று வாழ்கின்றார்கள். ஆதலால், காக்கும் கடமையுடைய பெருமாள் கவலையற்றுத் திருவரங்கத்திலே கண்வளர்கின்றார். காவிரி நாட்டிலுள்ள அமைதியைக் காட்டுகின்றது அவர் திருக்கோலம். எனவே, ஆனந்தக் கூத்துக்கும் ஆனந்த சயனத்துக்கும் அடிப்படையான காரணம் சோழ நாட்டு வளமே யன்றோ? இத் தகைய வள நாட்டில் +தரும தேவதைபோல் விளங்கும் வள்ளல் தழைத்து ஓங்கி வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.+"இரவு நண்பகல் ஆகி லென், பகல்இருள றாஇர வாகிலென்,இரவி எண்திசை மாறி லென்கடல்ஏழும் ஏறிலென், வற்றிலென்?மரபு தங்கிய முறைமை பேணியமன்னர் போகிலென்; ஆகிலென்? வளமை இன்புறு சோழ மண்டலவாழ்க்கை காரண மாகவே,கருது செம்பொனின் அம்ப லத்திலேகடவுள் நின்று நடிக்குமே!காவி ரித்திரு நதியி லேஒருகருணை மாமுகில் துயிலுமே!தருவு யர்ந்திடு புதுவை யம்பதிதங்கு மானிய சேகரன்,சங்க ரன்தரு சடையன் என்றொருதரும தேவதை வாழவே!"- பெருந் தொகை, 1135 ."கலைமணக்கும் தலைநகரே! செந்தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் தொந்தம் மிகவுண்டு. ஈழநாட்டு ஆதியரசருள் ஒருவன் பாண்டி மன்னன் திரு மகளை மணந்து வாழ்ந்தான். சேரநாட்டரசன் வஞ்சிமா நகரில் நடத்திய கண்ணகி விழாவில் இந் நாட்டுக் கஜபாகு மன்னன் கலந்து கொண்டான். அன்று தொட்டு கண்டி முதலாய பல நகரங்களில் பத்தினித் திருநாள் நடைபெற்று வருகின்றது; அன்றியும், இந் நாட்டுக் கடற்கரையிலுள்ள கோணமலையில் திருக்கோயில் அமைத்து அதைத் +திருக்கோணமலை யாக்கியவர் தமிழர் அல்லரோ? கருங்கடலை நோக்கி வளைந்துள்ள மலையைக் கோணமலை என்று பெயரிட் டழைத்த தமிழரின் அறிவு நலம் வியக்கத்தக்க தன்றோ?--------------திருக்கோணமலை இப்போது Trincomalle (டிரிங்காமலி) என மருவி வழங்குகின்றது."தமிழ் மணக்கும் திருநகரே! இவையெல்லாம் உண்மையே எனினும், நீயே இலங்கை நாட்டின் தொன்னகரம்; தமிழர் வாழும் நன்னகரம். உன் கடற்கரையிலே குவிந்துகிடந்த பெருமணலைக் கண்டு, மணவை என்று முன்னையோர் உனக்குப் பெயரிட்டார்கள். இப்போது யாழ்ப்பாணம் என்ற அழகிய பெயரைத் தாங்கி நிற்கின்றாய் நீ! யாழ்ப் பாணர் என்பார் தமிழ்நாட்டுப் பழங்குலத்தார். செவிக்கினிய யாழிலே பண்ணொடு பாட்டிசைத்து இசையின்பம் விளைவித்தவர் அவரே! நாளும் இன் னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர் காலத்தில் யாழ்ப்பாணர் குலத்திலே திருநீலகண்டர் என்னும் இசைவாணர் தலைசிறந்து விளங்கினர். தேவாரப் பாட்டைப் பண்முறையில் அமைத்துப் பாடியவர் அவரே! இத் தகைய பெருமை வாய்ந்த யாழ்ப் பாணர்கள் உன்பால் வந்து குடியேறினார்கள்; கடற்கரையில் அமர்ந்து பண்ணார்ந்த பாட்டிசைத்தார்கள் மேடும் காடுமாய்க் கிடந்த உன்னைப் பண்படுத்தி னார்கள். அப்போது நீ புதுப்பெயர் பூண்டாய். யாழ்ப்பாணர் திருத்திய காரணத்தால் யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றாய். அன்று முதல் உன் இசையும் இயலும் வளர்ந்தோங்கி வருகின்றன."வசை தீர்த்த வளநகரே! தமிழ் நாட்டு வள்ளல் அனுப்பிய நெல், இத் தமிழ் நகரத்தில் வந்து சேர்ந் தது சாலப்பொருத்த முடையதன்றோ? இந் நெல்லை அள்ளும்பொழுதும், அளக்கும்பொழுதும், உண வாக்கி உண்ணும்பொழுதும் தமிழ் அன்னத்தால் உயிர்வாழ்கின்றோம் என்ற உணர்ச்சி ஒவ்வொரு வருக்கும் உண்டாகும். அவ்வுணர்ச்சியால் எழுகின்ற நன்றி, ஈழநாட்டுக்கு என்றும் நலமளிப்பதாகும்."இசைவாணர் கண்ட மணிநகரே! உன்னால் இந் நாட்டுக்கு வந்த துன்பம் தீர்ந்தது. வயிறார உணவுண்ணும் உயிர்கள் எல்லாம் உன்னை வாயார வாழ்த்துக! உன் திசைநோக்கி வணங்குக!" என்று கைக்கூப்பித் தொழுது விடைபெற்றான் கவலை தீர்ந்த கண்டி மன்னன் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.21 | சூது | 2.3.21 | Gambling | |||||||||||||
குறள் எண் 931 | ||||||||||||||||
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் | ||||||||||||||||
veNdaRkka venridinum soothinai venRathuvum thoNdiRpon meenvizhunki atRu | ||||||||||||||||
Seek not the gamester's play; though you should win, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும். | Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாயில்களும் திறந்து வரவேற்பு அளிக்கும். | ||||||||||||||||
Member to Members | ||||||||||||||||
1. If you know some details about this book please send info to rmk@aryacom.com . Raga chikitcha:- I am on the look out for a book titled: Raga chikitcha" Many Hundreds of years before our forefathers have written the effect of various ragas and their medicinal aspect in curing various diseases. Some one can help me to get a copy or inform the site to get further details. Meena Venki 2. இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும். 3. . தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்,பண்பாடு ஆகியன வளர்க்க வெவ்வேறு சங்கங்கள்/குழுக்கள் பல இடங்களில் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி இச்சங்கங்கள் வெவ்வேறு இடங்களிருந்து புலம் பெயரும் தமிழர்களுக்கு பல உதவிகள் செய்யவும் உதவமுடியும். உலகெங்கிலும் உள்ள இச்சங்கங்கள் / குழுக்கள் / பற்றிய தகவல்களை நம் அனைவரின் நலனிற்காக தொகுத்து அளிக்கும் பணியினை அவ்வை தமிழ்ச் சங்கம் செய்ய விரும்புகிறது. உங்களின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள சங்கங்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற மின்-அஞ்சலுக்கு எழுதவும். சங்கம் பற்றிய தகவல், அதன் பணிகள், முகவரி, தொலைபேசி எண்கள், மின்-அஞ்சல், வலைத்தள முகவரி, தொடர்பு அதிகாரியின் பெயர் ஆகியவை அவசியம் வேண்டும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||