Monday, November 9, 2009

Daily news letter 9-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 9, ஐப்பசி – 23, ஜில்ஹாயிதா – 21

அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம், தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

·         குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்தது - தமிழகத்தில் மழை ...

·         கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பதவி தப்பியது

·         வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்: 15 கிராமங்களில் ...

·         தொடரை வென்றது ஆஸ்திரேலியா

·         அருணாசல பிரதேசத்துக்கு சீனா சொந்தம் கொண்டாட முடியாது தவாங் ...

·         அடுத்தாண்டில் 7% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்- பிரதமர் ...

·         மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

·         'பன்றிக் காய்ச்சல் பிடியில் கோவை'

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1921 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1953 - கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

இறப்புகள்

2005 - கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர், (பி. 1921) .

2006 - வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (பி. 1920)

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), பிப்ரவரி 4, 1921; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார்.

மேலும் படிக்க: கே. ஆர். நாராயணன்

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். மொத்தம் 75 நூல்கள் எழுதியவர். பி.எஸ். செட்டியாரின் சினிமா உலகம் (கோவை), சக்திதாசன் பொறுப்பில் வந்த நவசக்தி (சென்னை), அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய கிராம ஊழியன் (துறையூர்), பிறகு ஹனுமான் (சென்னை) ஆகிய சிறுபத்திரிகைகளிலும் அவர் பொறுப்பேற்று இயங்கியிருக்கிறார்.

மேலும் படிக்க: வல்லிக்கண்ணன்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.8

சிற்றினஞ்சேராமை

2.1.8

Avoiding Mean Company

459

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து.

manan-alaththin aakum maRumaimatR Raqthum

inan-alaththin aemAppu udaiththu.

Although to mental goodness joys of other life belong,

Yet good companionship is confirmation strong.

பொருள்

Meaning

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.

இன்றைய பொன்மொழி

படுக்கபோகும் முன் கவலைகளை செருப்போடு சுழற்றி வைக்கவும்.

இன்றைய சொல்

Today's Word

எண்மை பெ.

eNmai

பொருள்

Meaning

1.  எளிமை, சுலபம்  (eLimai, sulapam)

2.  தாழ்மை (thAzmai)

1.  Easiness (of access).

2.  Lowness (of rank).

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Sunday, November 8, 2009

Daily news letter 8-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org/ Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 8, ஐப்பசி – 22, ஜில்ஹாயிதா – 20

அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம், தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.

முக்கிய செய்திகள்

·         எடியூரப்பா 6 மாதம் மட்டுமே பதவியில் நீடிக்க வேண்டும்

·         பாஜக புதிய தலைவர் பதவியேற்ற பின்னரே அத்வானி பதவி விலகுவார் ...

·         விவசாயிகள் முன்னேற விஞ்ஞானிகள் ஏணியாக செயல்பட வேண்டும் ...

·         புதிய அணை கட்ட தமிழகம் சம்மதித்ததா? இல்லவே இல்லை என கருணாநிதி ...

·         மாஜி முதல்வர் மதுகோடா இன்று கைதாவாரா?

·         மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி: தனியார் ...

·         யார்ட்லி விற்பனை உரிமை: விப்ரோ கையகப்படுத்தியது

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1977 - கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது..

பிறப்புக்கள்

1680 - வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1847)

1900 - ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர், (இ. 1976)

1902 - ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், (இ. 1977)

1927 - லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி (1927)

இறப்புகள்:

1958 - சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1878)

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

ந.பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : ந.பிச்சமூர்த்தி

தமிழில் வீரமாமுனிவர் என்றழைக்கப் படுகின்ற பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) தற்போது இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். (இத்தாலிய இயற்பெயர் - Costanzo Giuseppe Beschi,ஆங்கிலம் - Father Constantine Joesph Beschi) இவர் இயேசு சபையைச் சேர்ந்த, ஒரு பாதிரியார் ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு சேசுசபைப் பாதிரியாரானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்க்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

மேலும் படிக்க : வீரமாமுனிவர்

இன்றைய கண்டுபிடிப்பு: ஊடு கதிர் அலைகள் (X-rays, X-கதிர்கள்)

ஊடு கதிர் அலைகள் (X-rays, X-கதிர்கள்) மிகச் சக்தி வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் மீட்டரில் 10 ட்ரில்லியனில் ஒரு பங்கு வரை. இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரியக்கம் என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது.

மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், விமான தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது. இக்கண்டுபிடிப்பிற்காக ஜேர்மனியைச் சேர்ந்த Würzburg பல்கலைக்கழக இயற்பியலாளர் வில்ஹெம் கொன்ராட் ரொண்ட்ஜென் (Wilhelm Conrad Röntgen) அவர்களுக்கு 1901 இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.8

சிற்றினஞ்சேராமை

2.1.8

Avoiding Mean Company

458

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.

Manan-alam n-an-kudaiya rAyinum sAndRorkku

Inan-alam emAp pudaiththu

To perfect men, though minds right good belong,

Yet good companionship is confirmation strong.

பொருள்

Meaning

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.

இன்றைய பொன்மொழி

பிறரை சீர் திருத்தும் கடமையை விட தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை

இன்றைய சொல்

Today's Word

எண்மானம் பெ.

eNmAnam

பொருள்

Meaning

1.  எண்ணை எழுத்தால் எழுதுதல். (eNNai ezuththAl ezuthuthal)

1.  notation

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Saturday, November 7, 2009

Daily news letter 7-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 7, ஐப்பசி – 21, ஜில்ஹாயிதா – 19

அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம், தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.

முக்கிய செய்திகள்

·         கர்நாடக ஆட்சியை கலைக்க சிபாரிசு?

·         கர்நாடகாவில் 52 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா : அதிருப்தி மந்திரி கை ...

·         ரூ.2000 கோடி ஊழல் வழக்கு: மது கோடா கூட்டாளி கைது

·         மகாராஷ்டிர அமைச்சரவை இன்று பதவியேற்பு

·         எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்

·         சச்சினின் அபாரமான இன்னிங்ஸ்: பாண்டிங் புகழாரம்

·         தமிழகத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்க வேண்டும் சரத்பவாரிடம் ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.

1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1867 - மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934)

1888 - சி. வி. இராமன், இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1970).

1954 - கமல்ஹாசன், தமிழ் நடிகர்.

1969 - நந்திதா தாஸ், இந்திய நடிகர்.

1980 - கார்த்திக் -பாடகர், தமிழ்ப் பின்னனிப் பாடகர்.

இறப்புகள்

1862 - பகதுர்ஷா ஜஃபர், பேரரசர், விடுதலைப் போராட்ட வீரர்

1951 - என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைக் கலைஞர்.

1993 - திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906).

2000 - சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி, (பி. 1910).

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார்.

மேலும் படிக்க: மேரி க்யூரி

சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

மேலும் படிக்க: சர் சந்திரசேகர வெங்கட ராமன்

திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

மேலும் படிக்க: திருமுருக கிருபானந்த வாரியார்

கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க: கமல்ஹாசன்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.8

சிற்றினஞ்சேராமை

2.1.8

Avoiding Mean Company

457

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

Manan-alam mannuyirk kAkkam inan-alam

ellAp pukazum tharum.

Goodness of mind to lives of men increaseth gain;

And good companionship doth all of praise obtain.

பொருள்

Meaning

மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

இன்றைய பொன்மொழி

குறை கூறுவது என்பது பிறர் மூலம் நம்மை சிறுமை செய்வது கொள்வதாகும்.

இன்றைய சொல்

Today's Word

எண்மர் பெ.

eNmar

பொருள்

Meaning

1.  எட்டுபேர். (ettupaer)

1.  Eight persons

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, November 6, 2009

Daily news letter 6-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 6, ஐப்பசி – 20, ஜில்ஹாயிதா – 18

அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம் தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.

முக்கிய செய்திகள்

·    மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார்' ஷோபா அறிவிப்பு.

·         மேலும் 40 லட்சம் கலர் 'டிவி' கொள்முதல்

·         நிபந்தனைகளுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்' மாவோயிஸ்டுகள் ...

·         சச்சின் சதம் (175) வீண்

·         ஹவாலா மோசடி வழக்கில் கைதாகிறார் மது கோடா

·         திருப்பதி பிரமோற்சவம்

·         மராட்டியத்தில் புதிய அரசு நாளை பதவி ஏற்பு

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1913 - தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

1935 - எட்வின் ஆம்ஸ்ட்ரோங், பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.

1943 - இந்தியாவின் வங்காளத்தில் "நவகாளி"யில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.

1944 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் கொழுத்த மனிதன் அணுகுண்டு   போடுவதற்கு இது பயன்பட்டது.

 பிறப்பு: 1861 - ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (இ. 1939)

இறப்பு: 1893 - பீட்டர் சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1840)

இன்றைய சிறப்பு:

பண்பலை ஒலிபரப்பு: வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high fequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.

இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency) மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பாக்கம் (FM - Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு பண்பாக்கம் (AM - Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் AM ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.8

சிற்றினஞ்சேராமை

2.1.8

Avoiding Mean Company

456

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.

Manan-thUyArk kechchamn-an RAkum inan-thUyArkku

Illain-an RAkA vinai.

From true pure-minded men a virtuous race proceeds;

To men of pure companionship belong no evil deeds.

பொருள்

Meaning

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

இன்றைய பொன்மொழி

கல்வி கற்பதைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது.

இன்றைய சொல்

Today's Word

எண்மயம் பெ.

eNmayam

பொருள்

Meaning

1.  பிறப்பு, குலம், வலி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம், உணர்வு அகியவற்றின் அடியாகப் பிறந்த எட்டு வகைச் செருக்கு.

piRappu, kulam, vali, selvam, vanappu, siRappu, thavam, uNarvu, akiyavaRRin adiyAkap piRan-tha ettu vakaich serukku.

1.  The eight kinds of pride begotten respectively by birth, lineage, prowess, riches, loveliness, eminence, penance and knowledge.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Thursday, November 5, 2009

View this page: "AvvaiTamilSangam"

Click on http://groups.google.co.in/group/dinamorukural/web/avvaitamilsangam
- or copy & paste it into your browser's address bar if that doesn't
work.

Daily news letter 5-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 5, ஐப்பசி – 19, ஜில்ஹாயிதா – 17

அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம் தினம் ஒரு குறம் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.

முக்கிய செய்திகள்

·         ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்

·        அம்பானிகள் வழக்கு-2 நீதிபதிகள் விலகல்!

·        ஊக்கத்தொகையை உடனே வழங்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ...

·         கேரளாவில் மீண்டும் ஒரு படகு விபத்து

·        கர்நாடகா, மகாராஷ்டிராவில் கவர்னர்கள் கெடுபிடி : வேடிக்கை ...

·         மேலும் ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டார்

·         தமிழில் மேலுமொரு கார்ப்பரேட் நிறுவனம்

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1556 - முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.

1895 – தானுந்தின்* முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோர்ஜ் செல்டன் பெற்றார்.

1917 - அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார்.

2007 - சீனாவின் முதல் விண்வெளி செயற்கைகோள் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

பிறப்பு: 1870 - சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)

இறப்பு:1975 - எட்வர்ட் டாட்டம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1909)

இன்றைய சிறப்பு மனிதர்

சித்தரஞ்சன் தாஸ் (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார். மேற்கு வங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த இவர் 1919-1922 காலப் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானியரின் ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார். மோதிலால் நேருவுடன் இணைந்து Swaraj Party என்ற கட்சியை ஆரம்பித்தார்.

இவர் பல கவிதைகளையும் இயற்றியுள்ளார். இவராது கவிதைத் தொகுப்பு சாகர் சங்கீத் என்ற பெயரில் புகழ் பெற்றவை.

மேலும் படிக்க: சித்தரஞ்சன் தாஸ்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.8

சிற்றினஞ்சேராமை

2.1.8

Avoiding Mean Company

455

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

ManaththUymai seyvinai thUymai iraNdum

InaththUymai thUvA varum.

Both purity of mind, and purity of action clear,

Leaning no staff of pure companionship, to man draw near.

பொருள்

Meaning

ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.

இன்றைய பொன்மொழி

அச்சத்தை அகற்றுவதே மனிதனின் முதல் கடமை

இன்றைய சொல்

Today's Word

தானுந்து பெ.

thAnun-thu

பொருள்

Meaning

1.  கார் /  ஆட்டோமொபைல்

1.  Car / automobile.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Wednesday, November 4, 2009

Daily news letter 4-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 4, ஐப்பசி – 18, ஜில்ஹாயிதா – 16

அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம் தினம் ஒரு குறம் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.

முக்கிய செய்திகள்

·   பூகம்பத்துக்கு பயந்து தலைநகரை ஈரான் மாற்ற திட்டம்

·   இந்தியாவிடம் 200 டன் தங்கம் விற்பனை செய்ய ஐஎம்எஃப் முடிவு

·   சேலத்தில் நள்ளிரவில் சம்பவம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 ...

·   மராட்டிய கவர்னர் அவசர ஆலோசனை

·   2.8 கோடி நூல்கள் அச்சிடப்பட்டுவிட்டன: அடுத்த கல்வியாண்டில் ...

·   நீதிபதிகள் சொத்து விவரம் வெளியீடு

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1861 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1869 - அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.

1984 - டெல் கம்ப்யூட்டர்ஸ் உருவாக்கப்பட்டது

இறப்பு:

1995 - இட்சாக் ரபீன், இஸ்ரேல் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.8

சிற்றினஞ்சேராமை

2.1.8

Avoiding Mean Company

454

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு.

Manaththu LathupOlak kAtti oruvaRku

inaththuLa thAkum aRivu.

Man's wisdom seems the offspring of his mind;

'Tis outcome of companionship we find.

பொருள்

Meaning

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

இன்றைய பொன்மொழி

அன்பு கொடுப்பவரையும், பெறுபவரையும் குணமடையச் செய்கிறது.

இன்றைய சொல்

Today's Word

எண்மதி பெ.

eNmathi

பொருள்

Meaning

1.  எட்டாம் நாள் வளர்பிறை நிலா.

1.  Crescent moon eight days old.