Saturday, May 21, 2011

Daily news letter 21-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௭  (7) , சனிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் கொடுந்தமிழ் நாடு என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

கனிமொழிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி தினத் தந்தி

சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்வு வெப்துனியா

மேற்கு வங்க முதல்வரானார் மமதா பிபிசி

வெற்றியுடன் வெளியேறியது ராஜஸ்தான் தினமணி

ஜுலை7-ந் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நக்கீரன்

கேரளாவில் பெட்ரோல் விலை குறைப்பு வெப்துனியா

இயற்கை உர பயன்பாட்டில் தமிழகம் முதலிடம் Inneram.com

நடிகர் தனுஷுக்கு தேசிய விருது பிபிசி

புதிய தலைமை செயலகத்தை கைவிட்டு கோட்டைக்கு மாறுவது ஏன்? தினகரன்

கடாபியின் மனைவியும் மகளும் டியூனீசியாவுக்குத் தப்பியோட்டம் தினக்குரல்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

996 - புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.

1502 - போர்த்துக்கீச மாலுமி ஜொவாவோ டா நோவா புனித ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார்.

1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.

1859 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.

1864 - ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.

1894 - 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.

1904 - பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.

1917 - அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.

1941 - இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.

1991 - எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1994 - யேமன் மக்களாட்சிக் குடியரசு யேமன் குடியரசில் இருந்து விலகியது.

1998 - 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.

பிறப்புகள்

கிமு 427 - பிளாட்டோ, கிரேக்கத் தத்துவவியலாளர் (இ. கிமு 347)

1919 - எம். என். நம்பியார், நடிகர் (இ. 2008)

1921 - அந்திரே சாகரொவ், ரஷ்ய இயற்பியலாளர் (இ. 1989)

1954 - டி. பி. எஸ். ஜெயராஜ், ஊடகவியலாளர்

1960 - மோகன்லால், தென்னிந்திய நடிகர்

1972 - நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் இசைக் கலைஞர்

இறப்புகள்

1991 - ராஜீவ் காந்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1944)

2000 - பார்பரா கார்ட்லண்ட், ஆங்கில நாவலாசிரியை (பி. 1901)

சிறப்பு நாள்

சிலி - கடற்படையினர் நாள்

இந்தியா - பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.16

உட்பகை  (utpagai)

 

2.3.16

 

SECRET FOE

குறள் எண்  885

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

uRalmuRaiyAn utpagai tHonRin iRalmuRaiyAn

aE-tham  palavum tharum.

Amid one's relatives if hidden hath arise,
'Twill hurt inflict in deadly wise.

பொருள்

Meaning

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.

இன்றைய பொன்மொழி

மழை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை, அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவது இல்லை    

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Friday, May 20, 2011

Daily news letter 20-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௬  (6) , வெள்ளிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

டார்வினின் புடைப்பு என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

ஜெயலலிதாவை சந்திப்பேன்: முதல்வர் ரங்கசாமி  தினமணி

23ந் தேதி தமிழக சட்டசபை மாலை சுடர்

கனிமொழிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா அல்லது சிறைவாசமா?-இன்று ...  தட்ஸ்தமிழ் 

நெய்வேலியில், ரூ.5907 கோடி மதிப்பிலான 2 அனல்மின் திட்டங்கள் தினத் தந்தி

அரியானாவில் சம்பவம்: ஆஸ்பத்திரியில், துப்பாக்கி சண்டை: 2 பேர் பலி  தினத் தந்தி 

ரஜினி உடல்நிலை: மருத்துவமனை விளக்கம் தினமலர்

சாயப் பட்டறைகள் பிரச்னை: பேச்சு நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவு தினமணி

கொல்கத்தா அணிக்கு 8-வது வெற்றி தினத் தந்தி

ரஜினிக்கு அர்ப்பணிக்கிறேன்: தனுஷ் தினகரன்

மம்தா அரசில் இணைகிறது காங்கிரஸ் தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.

1570 - உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.

1605 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.

1631 - முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியின் மாக்டெபூர்க் நகரை புனித ரோமப் பேரரசு கைப்பற்றி நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தனர்.

1813 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.

1869 - யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.

1873 - லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.

1882 - ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.

1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.

1902 - ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் எஸ்ட்ராடா பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.

1940 - முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.

1949 - குவோமிங்தான் அரசு தாய்வானில் இராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது.

1980 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.

1995 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர்.

1999 - புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.

2002 - கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.

பிறப்புக்கள்

1799 - பல்சாக், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1850)

1845 - அயோத்தி தாசர், தமிழறிஞர் (இ. 1914)

1860 - எடுவர்டு பூக்னர், ஜெர்மனிய வேதியியல் அறிஞர் (இ. 1917)

1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994)

1954 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (இ 2009)

இறப்புகள்

2005 - செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1943)

1506 - கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலியக் கடல் பயணி (பி. 1451)

1947 - பிலிப் லெனார்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)

2008 - பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965)

சிறப்பு நாள்

கமரூன் - தேசிய நாள்.

கிழக்குத் தீமோர் - விடுதலை நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.16

உட்பகை  (utpagai)

 

2.3.16

 

SECRET FOE

குறள் எண்  884  

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

manamANA utpagai tHonRin inamANA

Etham palavum tharum.

If secret enmities arise that minds pervert,
Then even kin unkind will work thee grievous hurt.

பொருள்

Meaning

மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.

The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.

இன்றைய பொன்மொழி

தன்னைப் புகழ்ந்து கொள்வதும் பிறரை இகழ்வதும் பொய்க்கு இணையானது.   

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India