Saturday, December 12, 2009

Daily news letter 12-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 12,  கார்த்திகை – 26,  ஜுல்ஹேஜ் – 24

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் (NGO) இணைந்து நொய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும்.  இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.

The unfortunate truth is that life can be taken away in seconds. The other truth is that, through organ donation it can be given in seconds too.

முக்கிய செய்திகள்

·         ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி.க்களிடம் மன்மோகன் சிங் உறுதி

·      சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிவு

·         சந்திரசேகர ராவ் டிஸ்சார்ஜ்

·      தமிழ்நாட்டுக்கு புயல் எச்சரிக்கை

·         உ.பி., மே.வங்கத்தையும் பிரிக்க மத்திய அரசு சம்மதிக்க வேண்டும்

·      3 நாள் வேலைநிறுத்தம் முடிந்தது பள்ளி வேன்கள் இன்று முதல் ஓடும்

·         திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 'கல்யாண மஸ்து'

·      பயங்கரவாதத்தின் பயிற்சி களம் பாகிஸ்தான் என்கிறார் ஹிலாரி

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1911

இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது

1963

ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.

1991

ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

பிறப்புக்கள்

1949

ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர்

1981

யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வீரர்

றப்புக்கள்

1940

தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)

இன்றைய  சிறப்பு மனிதர்கள்

தியாகி விஸ்வநாததாஸ் (1886 - டிசம்பர் 12, 1940) நாடக நடிகர்களிலேயே தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடும் தலைவர்களுடன் நட்புணர்வு கொண்டவர்.   இவரது உணர்ச்சி மிகுந்த தேசபக்தி நாடகத்தினால் அண்ணல் காந்தியடிகளால் பாராட்டப் பெற்றவர். 1919 இல் பஞ்சாப் படுகொலை நடந்தபோது "பஞ்சாப் படுகொலை பாரிர் கொடியது பரிதாபமிக்கது" என்று பாடி தேசப்பற்றை மக்களுக்கு ஊட்டியவர். இவரின் நாடகங்களுக்கு அரசாங்கம் விதித்த தடையை மீறி சிறைத் தண்டனை பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவருக்கிருந்த தேசபக்தியைக் கண்டுஆங்கிலேய அரசு அஞ்சியது.

 

ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாசி ராவ் காயக்வாட் [மராட்டியில் शिवाजीराव गायकवाड / சிவாசிராவ் காயக்வாட்] ஒரு புகழ்பெற்ற தமிழ்த்திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

kokkokka kUmpum paruvaththu matRathan

kuththokka seerththa idaththu

As heron stands with folded wing, so wait in waiting hour;

As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

பொருள்

Meaning

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity

இன்றைய பொன்மொழி

கடமை தவறாமையை கதிரவனிடம் கற்றுக் கொள்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்பொழுது (பெ.)

ethirpozuthu

பொருள்

Meaning

1.     வருங்காலம் (varungkAlam)

2.     (இலக்கணம்) வினையின் எதிர்காலக் குறிப்பு

vinaiyin ethirkAlak kuRippu

1.     future

2.     future tense.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, December 11, 2009

Daily news letter 11-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 11,  கார்த்திகை – 25,  ஜுல்ஹேஜ் – 23

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

·         ஆந்திராவில் 105 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

·         செம்மொழி மாநாட்டுக்காக ரூ.300 கோடிக்கு கட்டமைப்பு வசதி : ஸ்டாலின்

·         எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்த ரெட்டி ...

·         தமிழக இன்ஜினியர்கள் பார்வை கேரள அரசு கடும் கண்டனம்

·         நியாயம் கிடைக்க போர் தொடுப்பதில் தவறில்லை : நோபல் பரிசு பெற்ற ...

·         கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் இருந்து தமிழகத்திற்கு ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1816

 இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது.

1946

 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1882

 சுப்பிரமணிய பாரதி, இந்தியக் கவிஞர் (இ. 1921)

1931

 ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (இ. 1990)

1935

 பிரணப் முக்கர்ஜி, இந்திய அரசியல்வாதி

1958

 ரகுவரன், நடிகர் (இ. 2008)

1969

 விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க ஆட்டக்காரர்

றப்புக்கள்

2004

 எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916)

இன்றைய  சிறப்பு மனிதர்கள்

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன. அவையாவன:

 

பத்ம பூசண் - 1954

சங்கீத கலாநிதி - 1968

ராமன் மகசேசே விருது - 1974

பத்ம விபூசண் - 1975

காளிதாச சன்மான் - 1988

நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது - 1990

பாரத ரத்னா – 1998

 

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

 

விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.

 

ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் (Rajneesh Chandra Mohan Jain, டிசம்பர் 11, 1931 - ஜனவரி 19, 1990) இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றினார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. புத்தர், கிருஷ்ணர், குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற பல்வேறு சமய ஞானிகளின் பங்களிப்புத் தொடர்பாகவும் இவர் கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

eythaR kariyathu iyain-thakkAl an-n-ilaiyae

seythaR kariya seyal.

When hardest gain of opportunity at last is won,

With promptitude let hardest deed be done.

பொருள்

Meaning

கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).

இன்றைய பொன்மொழி

விடாமுயற்சியை கடல் அலைகளிடம் கற்றுக் கொள்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்ப்பாடு (பெ.)

EthirppAdu

பொருள்

Meaning

1.     காணும்படி நேரிடுதல், சந்தித்தல்

1.  encounter, meeting

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India