Friday, August 15, 2008
Daily news letter 15-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!! வாழிய பாரத மணித் திருநாடு !!!
==============================================================
August 15,2008 ஸர்வதாரி ஆடி-31/ ஷாபான் – 13
Today in History:August 15
We wish the people of India “Peace and prosperity” on the occasion of their Independence Day.
1948 - The Republic of Korea is established south of the 38th parallel north.
1960 - Republic of the Congo (Brazzaville) declares its independence from France.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_15 & http://www.indianage.com/search.php
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.15. புறங்கூறாமை (Against Slander)
184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
In presence though unkindly words you speak, say notIn absence words whose ill result exceeds your thought.
Meaning :
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
தினம் ஒரு சொல்
அலத்தகம் - செம்பஞ்சுக்குழம்பு, RED LAC USED BY WOMEN FOR DYING FEET, LIPS ETC,
பொன்மொழி
உடல் நலத்தோடு இருக்கும் ஏழை, பணக்காரனுக்கு ஈடாவான்.
பழமொழி – Proverb
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை
Thursday, August 14, 2008
We wish the people of Pakistan “Peace and prosperity” on the occasion of their Independence Day
Today in History:August 14
1896 - Gandhiji published ""The Green Pamphlet"" at Rajkot and then toured to Bombay, Madras, Poona and Calcutta educating Indians in regard to grievances of South African Indians
1947 - Pakistan was partitioned from India. Gandhiji hailed the following day as one of rejoicing for deliverance from British bondage.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_13 & http://www.indianage.com/search.php
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.15. புறங்கூறாமை (Against Slander)
183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும்.
'Tis greater gain of virtuous good for man to die,Than live to slander absent friend, and falsely praise when nigh.
Meaning :
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.
தினம் ஒரு சொல்
அலகின்மாறு - துடைப்பம், BROOM
பொன்மொழி
உண்மையான அடக்கமே, எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பு.
பழமொழி – Proverb
நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
Wednesday, August 13, 2008
Daily news letter 12-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Today in History:August 13
August 13 is designated International Lefthanders Day by Lefthanders International. People who are left handed use their right brain, which appears to help in geometry, and related subjects. There also appears to be a connection between lefthandedness and intelligence.
1951 - First test flight of 'Hindustan Trainer-2' (H.T.2) which was indigenously designed and manufactured in India.
1954 - Radio Pakistan broadcasts National Anthem of Pakistan for the first time
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/August_13
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.15. புறங்கூறாமை (Against Slander)
182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
Than he who virtue scorns, and evil deeds performs, more vile,Is he that slanders friend, then meets him with false smile.
Meaning :
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
தினம் ஒரு சொல்
அல்கந்தி - அந்திப்பொழுது., DUSK
பொன்மொழி
உழைப்பில்லாமல் எதையும் பெற இயலாது.
பழமொழி – Proverb
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
Tuesday, August 12, 2008
Daily news letter 12-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Today in History:August 12
1928 - The Olympic Games hosted by Amsterdam fully realized Pierre de Coubertin's vision: 'the nations of the world in friendly competition'. After a succession of Olympics dominated by North America and Western Europe, Amsterdam welcomed more than 3,000 competitors.
1981 - The IBM Personal Computer is released
For more info http://en.wikipedia.org/wiki/August_12
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.15. புறங்கூறாமை (Against Slander)
181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
Though virtuous words his lips speak not, and all his deeds are ill.If neighbour he defame not, there's good within him still.
Meaning :
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."
தினம் ஒரு சொல்
அரூபி - உருவம் இல்லாதவர், ONE WHO HAS NO PHYSICAL FORM
பொன்மொழி
பிறருடைய தவறுகளைப் பார்த்து அறிவாளி, தன்னைத்தானே திருத்திக்கொள்வான்
பழமொழி – Proverb
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
Monday, August 11, 2008
Daily news letter 11-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
August 11,2008 ஸர்வதாரி ஆடி-27/ ஷாபான் – 9
Today in History:August 11
The last total solar eclipse of the millenium was seen in northern parts of India and France. This eclipse lasted for 2 min and 23 sec.
For more info http://en.wikipedia.org/wiki/August_10
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.14. வெ·காமை – (Against Covetousness )
180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
From thoughtless lust of other's goods springs fatal ill,Greatness of soul that covets not shall triumph still.
Meaning :
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.
தினம் ஒரு சொல்
ஞாலம் - 1.பூமி, Earth, 2. உலகம், World
பொன்மொழி
ஞானம் என்ற நெருப்பு எல்லா கர்மத்தையும் சாம்பலாக்கிவிடும்.
பழமொழி – Proverb
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
Sunday, August 10, 2008
Daily news letter 10-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Today in History:August 10
Birth anniversary of Pandit Vishnu Narayan Bhatkhande (August 10, 1860 – September 19, 1936) was an Indian classical musician widely acclaimed to have brought in a renaissance in Indian music. He reorganized the ragas in Hindustani music into the currently used Thaat scale from the previous classifications of Raag (male), Ragini (female), and Putra (children) ragas.
For more info http://en.wikipedia.org/wiki/August_10
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.14. வெ·காமை – (Against Covetousness )
179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
Good fortune draws anigh in helpful time of need,To him who, schooled in virtue, guards his soul from greed.
Meaning :
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.
தினம் ஒரு சொல்
அருவி வெட்டுதல் ( இலங்கை) - அறுவடை, HARVESTING
179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு.
Good fortune draws anigh in helpful time of need,To him who, schooled in virtue, guards his soul from greed.
Meaning :
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.
தினம் ஒரு சொல்
அருவி வெட்டுதல் ( இலங்கை) - அறுவடை, HARVESTING
பொன்மொழி
அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதுஇல்லை
பழமொழி – Proverb
ஆழமறியாமல் காலை இடாதே.
அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதுஇல்லை
பழமொழி – Proverb
ஆழமறியாமல் காலை இடாதே.