Saturday, August 2, 2008
Daily news letter 2-8-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam
Adiperukku is a unique South Indian and specially a Tamil state festival celebrated on the 18th day of the Tamil month of Adi. The festival coincides with the annual freshes of the rivers and to pay tribute to water's life-sustaining properties. It is celebrated near River basins, water tanks, lakes and wells etc of Tamilnadu when the water level in the rises significantly heralding the onset of Monsoon.FOR MORE INFO VISIT http://en.wikipedia.org/wiki/Adiperukku
==================================================================
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.14. வெ·காமை – (Against Covetousness )
171. நடுவின்றி நன்பொருள் வெ·கின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
With soul unjust to covet others' well-earned store,Brings ruin to the home, to evil opes the door.
Meaning :
மனச்சான்றை ஒதுக்கிவிட்டு பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
தினம் ஒரு சொல்
அருக்காணி - அபூர்வம், அருமை, RARENESS, PRECIOUSNESS
பொன்மொழி
அன்பாக நடந்து கொள்; உதவி செய்; தொண்டு செய்
பழமொழி – Proverb
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
Friday, August 1, 2008
Daily news letter 1-8-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)
170. அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅ·து இல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
No envious men to large and full felicity attain;No men from envy free have failed a sure increase to gain.
Meaning :
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
தினம் ஒரு சொல்
அருக்கன் - சூரியன் , SUN
பொன்மொழி
ஒழுங்காக இருப்பதுதான் கடவுளின் முதல் கட்டளை
பழமொழி – Proverb
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
Thursday, July 31, 2008
Daily news letter 31-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)
169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
To men of envious heart, when comes increase of joy,Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.
Meaning :
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
தினம் ஒரு சொல்
அரிமா - சிங்கம், LION
பொன்மொழி
ஆன்மாதான் உங்களின் உண்மையான இயல்பு
பழமொழி – Proverb
கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
Wednesday, July 30, 2008
Daily news letter 30-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)
168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.
Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain.
Meaning :
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவன் விட்டுவிடும்.
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
தினம் ஒரு சொல்
அரிப்புக் கூடை - சல்லடை, SIEVE
பொன்மொழி
பகைவனின் புன்சிரிப்பைவிட, நண்பனின் கோபம் நன்று
பழமொழி – Proverb
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
Tuesday, July 29, 2008
Daily news letter 29-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam
July 29 2008 ஸர்வதாரி ஆடி-14/ ரஜப் – 25 (J.R.D.டாட்டா பிறந்த தினம்)
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)
167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
From envious man good fortune's goddess turns away,Grudging him good, and points him out misfortune's prey.
Meaning :
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவள் அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
தினம் ஒரு சொல்
அரிணம் - மான், DEER
பொன்மொழி
அவசரம் ஆளை மட்டுமல்ல, அறுவடையையும் கெடுக்கிறது
பழமொழி – Proverb
ஆடிச்செவ்வாய் தேடிக்குளி; அரைத்த மஞ்சள் பூசிக் குளி
Sunday, July 27, 2008
Daily news letter 27-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.13 அழுக்காறாமை (Avoid Envy)
166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
Who scans good gifts to others given with envious eye,His kin, with none to clothe or feed them, surely die
Meaning :
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
தினம் ஒரு சொல்
அரிசம் - மகிழ்ச்சி, JOY, PLEASURE
பொன்மொழி
சரியாக சிந்திக்க தெரிந்துகொண்டால், ஜகத்தையே மாற்றிவிடலாம்
பழமொழி – Proverb
சொல்வல்லவனை வெல்லல் அரிது.