Sunday, November 8, 2009

Daily news letter 8-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org/ Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 8, ஐப்பசி – 22, ஜில்ஹாயிதா – 20

அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம், தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.

முக்கிய செய்திகள்

 

 

·         எடியூரப்பா 6 மாதம் மட்டுமே பதவியில் நீடிக்க வேண்டும்

·         பாஜக புதிய தலைவர் பதவியேற்ற பின்னரே அத்வானி பதவி விலகுவார் ...

·         விவசாயிகள் முன்னேற விஞ்ஞானிகள் ஏணியாக செயல்பட வேண்டும் ...

·         புதிய அணை கட்ட தமிழகம் சம்மதித்ததா? இல்லவே இல்லை என கருணாநிதி ...

·         மாஜி முதல்வர் மதுகோடா இன்று கைதாவாரா?

·         மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி: தனியார் ...

·         யார்ட்லி விற்பனை உரிமை: விப்ரோ கையகப்படுத்தியது

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1977 - கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது..

பிறப்புக்கள்

1680 - வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1847)

1900 - ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர், (இ. 1976)

1902 - ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், (இ. 1977)

1927 - லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி (1927)

இறப்புகள்:

1958 - சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1878)

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

 

ந.பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : ந.பிச்சமூர்த்தி

 

தமிழில் வீரமாமுனிவர் என்றழைக்கப் படுகின்ற பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) தற்போது இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். (இத்தாலிய இயற்பெயர் - Costanzo Giuseppe Beschi,ஆங்கிலம் - Father Constantine Joesph Beschi) இவர் இயேசு சபையைச் சேர்ந்த, ஒரு பாதிரியார் ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு சேசுசபைப் பாதிரியாரானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்க்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

மேலும் படிக்க : வீரமாமுனிவர்

இன்றைய கண்டுபிடிப்பு: ஊடு கதிர் அலைகள் (X-rays, X-கதிர்கள்)

ஊடு கதிர் அலைகள் (X-rays, X-கதிர்கள்) மிகச் சக்தி வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் மீட்டரில் 10 ட்ரில்லியனில் ஒரு பங்கு வரை. இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரியக்கம் என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது.

மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், விமான தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது. இக்கண்டுபிடிப்பிற்காக ஜேர்மனியைச் சேர்ந்த Würzburg பல்கலைக்கழக இயற்பியலாளர் வில்ஹெம் கொன்ராட் ரொண்ட்ஜென் (Wilhelm Conrad Röntgen) அவர்களுக்கு 1901 இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.8

சிற்றினஞ்சேராமை

2.1.8

Avoiding Mean Company

458

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.

Manan-alam n-an-kudaiya rAyinum sAndRorkku

Inan-alam emAp pudaiththu

To perfect men, though minds right good belong,

Yet good companionship is confirmation strong.

பொருள்

Meaning

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.

இன்றைய பொன்மொழி

பிறரை சீர் திருத்தும் கடமையை விட தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை

இன்றைய சொல்

Today's Word

எண்மானம் பெ.

eNmAnam

பொருள்

Meaning

1.  எண்ணை எழுத்தால் எழுதுதல். (eNNai ezuththAl ezuthuthal)

1.  notation

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: