Saturday, November 14, 2009

Daily news letter 14-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 14, ஐப்பசி – 28, ஜில்ஹாயிதா – 26

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·         நீலகிரி மாவட்டத்தில் மழைச் சேதம் ரூ.300 கோடி முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ...

·         இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சரத் பொன்சேகா பரபரப்பு புகார்

·         செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணையதள மாநாடு

·         கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் கவிதை ...

·         மும்பை தாக்குதலுக்கு முன்னதாக தில்லியில் தங்கியிருந்தார் ...

·         அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆசிய நாடுகளுக்கு விஜயம்

·         20 ஓவர் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.

1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.

1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.

1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது

1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)

1930 - எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)

சிறப்பு நாள்:

இந்தியா: குழந்தைகள் நாள் (மறைந்த நேருவின் 121 வது பிறந்த நாள்)

உலக நீரிழிவு நோய் நாள்

இன்றைய சிறப்பு:

 

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது.

 

குழந்தைகள் நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.

 

உலக நீரிழிவு நோய் நாள், நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ், இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.

அந்த வகையில் உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்பு உணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: உலக நீரிழிவு நோய் நாள்

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.9

தெரிந்துசெயல்வகை

2.1.9

Action After Deliberations

464

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.

theLivi lathanaith thodangkAr iLivennum

aeethappAdu anjsu pavar.

A work of which the issue is not clear,

Begin not they reproachful scorn who fear.

பொருள்

Meaning

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.

இன்றைய பொன்மொழி

கோபத்தை விட்டவன் துயரப்பட மாட்டான்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்கழறு வி.

ethirkazaRu

பொருள்

Meaning

1.  பதில் கூறு (pathil kURu)

2.  ஒத்திரு (oththiru)

1.  Answer back

2.  Resemble

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: