. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | ||||
நவம்பர் – 12, ஐப்பசி – 26, ஜில்ஹாயிதா – 24 | ||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
முக்கிய செய்திகள் | ||||
|
| |||
· நீலகிரி நிலச்சரிவால் பாதித்த இடங்களுக்கு துணை ராணுவம் விரைந்தது· தமிழகமெங்கும் மழை பாதிப்பு: நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் கே ...· அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் மீரா குமார் ... | · பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு: இனி நொடிக்கு ஒரு பைசா!· பாக். அணியின் புதிய கேப்டன் முகமது யூசுப்· 2 யுத்தக் கப்பல்களையும் திரும்பப் பெற இந்தியா விருப்பம்· மும்பை அருகே கரை கடந்தது பையான் புயல் | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1833 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன. 1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர். 1906 - பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார். 1918 - ஆஸ்திரியா குடியரசாகியது. 1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது. பிறப்புக்கள் 1817 - பஹாவுல்லா, பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1892) 1866 - சுன் இ சியன், சீனாவின் புரட்சித் தலைவர் (இ. 1925) 1896 - சலீம் அலி, இந்திய பறவையியல் வல்லுநர் (இ. 1987) 1920 - வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (இ. 2006) | ||||
இன்றைய சிறப்பு மனிதர்கள்: | ||||
சலீம் அலி (நவம்பர் 12, 1896 - ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை. மேலும் படிக்க: சலீம் அலி
வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். மொத்தம் 75 நூல்கள் எழுதியவர். பி.எஸ். செட்டியாரின் சினிமா உலகம் (கோவை), சக்திதாசன் பொறுப்பில் வந்த நவசக்தி (சென்னை), அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய கிராம ஊழியன் (துறையூர்), பிறகு ஹனுமான் (சென்னை) ஆகிய சிறுபத்திரிகைகளிலும் அவர் பொறுப்பேற்று இயங்கியிருக்கிறார். மேலும் படிக்க: வல்லிக்கண்ணன்
பகாவுல்லா (நவம்பர் 12, 1817 – மே 29, 1892), பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். இவர் பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் மிர்சா உசேய்ன் அலி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். பஹாவுல்லா பல சமய நூல்களையும் எழுதினார். மேலும் படிக்க: பகாவுல்லா | ||||
| ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.9 | தெரிந்துசெயல்வகை | 2.1.9 | Action After Deliberations | |
462 | தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். therin-tha inaththodu thaern-theNNich seyvArkku arumporuL yAthuonRum il. With chosen friends deliberate; next use the private thought; Then act. By those who thus proceed all works with ease are wrought. | |||
பொருள் | Meaning | |||
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை. | There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends. | |||
இன்றைய பொன்மொழி | ||||
எதிரிகளை ஒழிக்க அவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எத்தாப்பு பெ. | eththAppu | |||
பொருள் | Meaning | |||
1. ஆடை (Adai) | 1. Garment, vesture | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment