. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
நவம்பர் – 7, ஐப்பசி – 21, ஜில்ஹாயிதா – 19 | ||||
அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம், தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும். To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை. | ||||
முக்கிய செய்திகள் | ||||
|
| |||
· கர்நாடக ஆட்சியை கலைக்க சிபாரிசு?· கர்நாடகாவில் 52 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா : அதிருப்தி மந்திரி கை ...· ரூ.2000 கோடி ஊழல் வழக்கு: மது கோடா கூட்டாளி கைது· மகாராஷ்டிர அமைச்சரவை இன்று பதவியேற்பு | · எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்· சச்சினின் அபாரமான இன்னிங்ஸ்: பாண்டிங் புகழாரம்· தமிழகத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்க வேண்டும் சரத்பவாரிடம் ... | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது. 1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது. பிறப்புக்கள் 1867 - மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934) 1888 - சி. வி. இராமன், இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1970). 1954 - கமல்ஹாசன், தமிழ் நடிகர். 1969 - நந்திதா தாஸ், இந்திய நடிகர். 1980 - கார்த்திக் -பாடகர், தமிழ்ப் பின்னனிப் பாடகர். இறப்புகள் 1862 - பகதுர்ஷா ஜஃபர், பேரரசர், விடுதலைப் போராட்ட வீரர் 1951 - என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைக் கலைஞர். 1993 - திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906). 2000 - சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி, (பி. 1910). | ||||
இன்றைய சிறப்பு மனிதர்கள்: | ||||
மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். மேலும் படிக்க: மேரி க்யூரி
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும். முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும். மேலும் படிக்க: சர் சந்திரசேகர வெங்கட ராமன்
திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். மேலும் படிக்க: திருமுருக கிருபானந்த வாரியார்
கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் படிக்க: கமல்ஹாசன் | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.8 | சிற்றினஞ்சேராமை | 2.1.8 | Avoiding Mean Company | |
457 | மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். Manan-alam mannuyirk kAkkam inan-alam ellAp pukazum tharum. Goodness of mind to lives of men increaseth gain; And good companionship doth all of praise obtain. | |||
பொருள் | Meaning | |||
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும். | Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men. | |||
இன்றைய பொன்மொழி | ||||
குறை கூறுவது என்பது பிறர் மூலம் நம்மை சிறுமை செய்வது கொள்வதாகும். | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எண்மர் பெ. | eNmar | |||
பொருள் | Meaning | |||
1. எட்டுபேர். (ettupaer) | 1. Eight persons | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Saturday, November 7, 2009
Daily news letter 7-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment