"இந்த புது வருடம் உங்களுக்கு மிக மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துக்கள் "
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||
மார்கழி–17, சனி, திருவள்ளுவராண்டு 2041 INVESTMENT IDEA FOR THE YEAR 2011 | |||||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||||
திருவள்ளுவராண்டு பற்றிய ஒரு விளக்கம் | |||||||||||||
திருவள்ளுவர் ஆண்டு என்பது ஆண்டுகளை வரிசையாக, தொடர்ச்சியாக குறிக்க எழுந்த காலம் காட்டும் முறை. இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். 2010 ஆண்டு என்று கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவதை 2041 ஆம் ஆண்டு என்று திருவள்ளுவர் ஆண்டு முறையில் குறிப்பிடப்படும். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவெடுத்தார்கள். இப்படி முடிவெடுத்தவர்கள் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவ நாதம் ஆகியோர் ஆவர். இன்றுமுதல் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் தினசரி மடல் திருவள்ளுவராண்டை பயன்படுத்த துவங்குகிறது. உங்கள் கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும் | |||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||||
கிமு 45 - ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. 1801 - பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது. 1872 - இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1872 - முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது. 1877 - இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார். 1901 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. 1912 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது. 1949 - ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது. 1958 - ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது. 1995 - உலக வணிக அமைப்பு உருவாக்கம். 1999 - யூரோ நாணயம் அறிமுகம்.
பிறப்புகள் 1943 - செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர் 1978 - பரமஹம்ஸ நித்யானந்தர், இந்திய ஆன்மிகவாதி | |||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||||
2.3.6 | நட்பு(Natpu) | 2.3.6 | Friendship | ||||||||||
THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP. | |||||||||||||
788 | உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே | ||||||||||||
UduKkai Izhanthavan kaipola aAnge iduKkan kalaivaThaam naTpu | |||||||||||||
As hand of him whose vesture slips away, | |||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. | (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly). | ||||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||||
செய்யத் துணிபவனுக்கும் எண்ணத் துணிபவனுக்குந்தான் வெற்றி கிட்டுகிறது. | |||||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||||
ஒத்திசைவு | Othisaivu | ||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||
பொருத்தம் , இணக்கம் | aggreableness | ||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||
No comments:
Post a Comment