அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
மார்கழி–19, திங்கள், திருவள்ளுவராண்டு 2041 "இந்த புது வருடம் உங்களுக்கு மிக மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துக்கள் " BOOK YOUR FLAT QUICKLY TO AVAIL THE INAUGURAL OFFER. | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||
திருவள்ளுவராண்டு பற்றிய ஒரு விளக்கம் | |||||||||||
திருவள்ளுவர் ஆண்டு என்பது ஆண்டுகளை வரிசையாக, தொடர்ச்சியாக குறிக்க எழுந்த காலம் காட்டும் முறை. இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். 2010 ஆண்டு என்று கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவதை 2041 ஆம் ஆண்டு என்று திருவள்ளுவர் ஆண்டு முறையில் குறிப்பிடப்படும். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவெடுத்தார்கள். இப்படி முடிவெடுத்தவர்கள் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவ நாதம் ஆகியோர் ஆவர். | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள். 1496 - லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை. 1754 - அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார். 1815 - ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் ரஷ்யாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின. 870 - புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின. 957 - முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது. 1958 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. 1966 - இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் டாஷ்கெண்டில் ஆரம்பமாயின. 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது. 1977 - ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது. பிறப்புகள் 1740 - கட்டபொம்மன், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் (இ. 1799) 1956 - மெல் கிப்சன், அவுஸ்ரேலிய நடிகர் 1969 - மைக்கேல் சூமாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த பார்முலா 1 ஓட்டுனர் இறப்புகள் 2005 - ஜே. என். டிக்சித், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1936) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.6 | நட்பு(Natpu) | 2.3.6 | Friendship | ||||||||
THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP. | |||||||||||
788 | நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி | ||||||||||
natPpirKku veEtruKkai yaathenin kotPpinRi ollumVaai oonRum nilai. | |||||||||||
And where is friendship's royal seat? In stable mind, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும். | Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை ஆகும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒப்பான் | opPaan | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நேர்மையாளன் | a person of rectitude | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment