அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 22 புதன், மார்கழி–7, முஹர்ரம் – 15 | |||||||||||
Home Away from Home – Avvai Tamil Sangam's mission on group housing. Click the below link for more details http://atsnoida.blogspot.com/2010/12/re-for-those-interested-avvai-tamil.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
5-வது நாளாக உண்ணாவிரதம்: சந்திரபாபு நாயுடு உடல் நிலை பாதிப்பு | ஸ்பெக்ட்ரம் விவகாரம் எம்.பி.க்கள் குழு விசாரணைக்கு பா.ஜனதா ... | ||||||||||
நடைமுறைக்கு மாறாக வீட்டுக்கே சென்று நீரா ராடியாவிடம் சிபிஐ 4 ... | பா.ஜ., ஆபீசுக்கு ராஜ் தாக்கரே திடீர் விசிட்: பால் தாக்கரே ... | ||||||||||
பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்கொய்தாவினருக்கு எதிராக ... | |||||||||||
சமையல் கியாஸ் விலை உயர்வு எவ்வளவு? அடுத்த வாரம் அறிவிக்கப்படும் | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1807 | வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது. | ||||||||||
1849 | ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது. | ||||||||||
1851 | இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது. | ||||||||||
1937 | லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது. | ||||||||||
1989 | கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது. | ||||||||||
1990 | மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1666 | குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (இ. 1708) குரு கோவிந்த் சிங் (டிசம்பர் 22, 1666 - அக்டோபர் 7, 1708) சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். ஒன்பதாவது சீக்கிய குருவின் மகனான இவர் இந்தியாவின் பீகாரில் பட்னாவில் பிறந்தவர். 1675 முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். சீக்கிய மதநூலான குரு கிரந்த் சாகிப்பை சீக்கியமதத்தின் வாழும் குருவாக்கினார். | ||||||||||
1887 | இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920) சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.5 | படை செருக்கு(padai cherukku) | 2.3.5 | Pride of Warriors | ||||||||
The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice. | |||||||||||
778 | இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். | ||||||||||
Izaiththathu ikavAmaich sAvArai yAre Pizaithathu oRukkiR pavar. | |||||||||||
Who says they err, and visits them scorn, Who die and faithful guard the vow they've sworn? | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது. | Who would reproach with failure those who seal their oath with their death?. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
அதிகப் பேச்சும், அதிக உணவும் உயிருக்கே ஆபத்து. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒட்டாரம்(பெ) | ottAram | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பிடிவாதம் (pidivAtham) | 1. Obstinacy, stubbornness. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment