அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 07 சனி, ஆடி – 22, ஷாபான் - 25 | ||||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இச்செய்தித் தொகுப்பின் மூலம் இங்கு இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நமது பண்பாடு,கலாசாரம் முதலியவற்றை நமது அடுத்த தலைமுறையினருக்கு கற்று தருவது நமது கடமை. இதை மையமாகக் கொண்டு தமிழ் ஆர்வத்தை வளர்க்கவும், புலம் பெயர்ந்து வாழும் மக்களை இனைக்கும் பாலமாகவும் தொடங்கிய தினம் ஒரு குறள் செய்தித் தொகுப்பு - 665 நாட்கள் கடந்துவிட்டதை எண்ணி மகிழ்கிறோம். (crossed 50% of 1330 thirukkural). மேலும் இச்சேவையை மேம்படுத்த தங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
அமித் ஷாவுக்கு 2 நாள் சிபிஐ காவல்: குஜராத் உயர் நீதிமன்றம் ... | ||||||||
இந்தியாவில் 6ஆயிரம் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் மத்திய ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1832 | இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. | |||||||
1906 | கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. | |||||||
1927 | ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது. | |||||||
1944 | திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.1955 | |||||||
1960 | கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. | |||||||
1976 | வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது. | |||||||
பிறப்புக்கள் - Births | ||||||||
1925 | எம். எஸ். சுவாமிநாதன், இந்திய அறிவியலாளர். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (ஆகஸ்ட் 7, 1925, கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா) இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அழைப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர். இவரின் பெயரில் அமைந்த எம். எஸ். சுவாமினாதன் ஆய்வு நிறுவனம் (MS Swaminathan Research Foundation) என்னும் நிறுவனத்தின் அமைப்பாளரும் இவரே. | |||||||
இறப்புக்கள் – Deaths | ||||||||
1941 | இரவீந்திரநாத் தாகூர், மகாகவி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861) இரவீந்தரநாத் தாகூர், புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைத்தனர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக பிரபலம் அடைந்தது. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
667 | உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. | |||||||
uruvukaNdu eLLAmai veNdum uruLperun-thaerkku achchAni annAr udaiththu. | ||||||||
Despise not men of modest bearing; Look not at form, but what men are: For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!. | ||||||||
பொருள் | Meaning | |||||||
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். | Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
எந்த முயற்சியிலும் முதல் அடி எடுத்து வைப்பதுதான் கடினமானது. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏரணம் (பெ.) | EraNam | |||||||
பொருள் | Meaning | |||||||
1. தருக்கநூல் (tharukkan-ool) | 1. Logic | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment