அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 06 வெள்ளி, ஆடி – 21, ஷாபான் - 24 | ||||||||
இன்று: ஜப்பான் - ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள் (Hiroshima Peace Memorial Ceremony). | ||||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இச்செய்தித் தொகுப்பின் மூலம் இங்கு இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நமது பண்பாடு,கலாசாரம் முதலியவற்றை நமது அடுத்த தலைமுறையினருக்கு கற்று தருவது நமது கடமை. இதை மையமாகக் கொண்டு தமிழ் ஆர்வத்தை வளர்க்கவும், புலம் பெயர்ந்து வாழும் மக்களை இனைக்கும் பாலமாகவும் தொடங்கிய தினம் ஒரு குறள் செய்தித் தொகுப்பு - இன்றுடன் 665 நாட்கள் கடந்துவிட்டதை எண்ணி மகிழ்கிறோம். (crossed 50% of 1330 thirukkural). மேலும் இச்சேவையை மேம்படுத்த தங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
பதுக்கலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது மாநிலங்களே: பிரணாப் ... | ||||||||
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் 436 ரன்கள் குவித்து முன்னிலை ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1661 | போர்த்துக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. | |||||||
1806 | கடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது. | |||||||
1825 | பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது. | |||||||
1945 | இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் (Little Boy) என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர். | |||||||
1960 | கியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது. | |||||||
1961 | வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார். | |||||||
1964 | அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது. | |||||||
1991 | உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார். | |||||||
1996 | செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது. | |||||||
2002 | தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர். | |||||||
பிறப்புக்கள் - Births | ||||||||
1881 | அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (இ. 1955) | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
665 | எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் | |||||||
eNNiya eNNiyAngu eithu eNNiyAr thiNNiyar Agap peRin | ||||||||
Whate'er men think, ev'n as they think, may men obtain, | ||||||||
பொருள் | Meaning | |||||||
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள். | If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம். உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏர்ப்பூட்டு (பெ.) | Erppoottu | |||||||
பொருள் | Meaning | |||||||
1. முதலுழவு, பொன்னேர் (muthaluzhavu, ponNer) | 1. Ploughing for the first time in the season on an auspicious day. | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
Friday, August 6, 2010
Daily news letter 06-08-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment