Monday, April 26, 2010

Daily news letter 26-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 26,  சித்திரை – 13,  ஜமாதில் ஆவ்வல் – 10

இன்று: அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) ஆண்டு தோறும் ஏப்ரல் 26 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. "மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும்" இந்நிகழ்வு 2001 இல் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) ஆரம்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்: பாராளுமன்ற கூட்டு குழு ... 

நடுவானில் தடுமாறிய கொச்சி விமானம் 

லலித் மோடி சஸ்பெண்ட்! 

அன்னியச் செலாவணி மோசடியில் நித்யானந்தா?

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூனில் நிறைவடையும்: மு.க ...

வெட்டுத் தீர்மானத்தைச் சந்திக்க அரசு தயார்: மாயாவதி ... 

தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு 

இந்தியன் வங்கி லாபம் ரூ. 1555 கோடி 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் 27 வீரர்களுக்கு தொடர்பு 

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சாம்பியன்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1802

நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.

1805

ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.

1865

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.

1945

இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.

1962

நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.

1964

தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.

1986

உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

1994

உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.

பிறப்புகள்

1564

வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616)

1762

சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)

இறப்புகள்

1920

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

1897

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்

1977

எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.23

மடியின்மை (சோம்பல் படாமை)

(madi inmai)

2.1.22

Freedom from Sloth

Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts.

608

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.

Madimai kudimaikkaN thangkin-than onnArkku

Adimai pukuththi vidum

If sloth a dwelling find mid noble family,

Bondsmen to them that hate them shall they be

பொருள்

Meaning

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

இன்றைய பொன்மொழி

பேராசை முடிகிற இடத்தில் தான் சந்தோசம் ஆரம்பிக்கிறது.

இன்றைய சொல்

Today's Word

 ஏகாந்தம் (பெ.)

EgAn-tham

பொருள்

Meaning

1.     (அமைதி நிறைந்த) தனிமை (thanimai)

2.     தனிமையான இடம் (thanimaiyAna idam)

3.     இரகசியம்(ragasiyam)

4.     நிச்சயம்(n-ichayam)

5.     ஒன்றேயாகிய இலக்கு (onReyAgiya ilakku)

1.     Solitude, loneliness

2.     Solitary place

3.     Secret

4.     Certainty

5.     Sole end

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: