. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||
நவம்பர் – 3, ஐப்பசி – 17, ஜில்ஹாயிதா – 15 | |||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com
அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.
| |||
முக்கிய செய்திகள் | |||
|
| ||
· இலங்கை அகதிகளுக்கு ரூ.12 கோடி நிதி : முதல்வர் உத்தரவு· எடியூரப்பாதான் முதல்வர்: ராஜ்நாத் சிங்· மகாராஷ்டிரம்: முதல்வர், துணை முதல்வர் இன்று பதவியேற்பு· ஆஸ்திரேலியா அருகே படகு கடலில் மூழ்கி 23 பேர் பலி | · சுப்ரீம் கோர்ட்டின் 21 நீதிபதிகள் சொத்து கணக்கை வெளியிட்டனர் · விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்· ஒரு நாள் போட்டித் தொடர்: 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி. · சிங்களர்களின் ஆக்கிரமிப்பில் வீடுகள்: இலங்கைத் தமிழர்கள்... | ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1493 - கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார். 1838 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது. 1957 - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது. 1963 - தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது. 1963 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1964 - வாஷிங்டன் டீசி மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். பிறப்புக்கள் 1618 - ஔரங்கசீப், இந்தியாவின் மொகாலய சக்கரவர்த்தி, (இ. 1707). 1911 - ஏ. கே. செட்டியார், தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி (இ. 1983) 1933 - அமர்த்தியா சென், இந்தியப் பொருளாதார நிபுணர், நோபல் பரிசு பெற்றவர் இறப்பு 2006 - ஈ. வி. சரோஜா, தமிழ்த் திரைப்பட நடிகை, (பி. 1935). | |||
இன்றைய சிறப்பு மனிதர்கள்: | |||
அமர்த்தியா குமார் சென் (பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார். மேலும் படிக்க கிளிக் செய்யவும்: அமர்த்தியா சென்
ஏ. கே. செட்டியார் (நவம்பர் 3, 1911 - செப்டம்பர் 10, 1983) தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர். இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். மேலும் படிக்க கிளிக் செய்யவும்: ஏ. கே. செட்டியார்
ஈ. வி. சரோஜா (1935 - நவம்பர் 3, 2006) ஒரு பழம்பெரும் தென்னிந்திய நடிகை. 2002 ஆம் ஆண்டில் இவர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து முத்தமிழ்ப் பேரவையின் நாட்டிய செல்வம் விருதினைப் பெற்றார். திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக 2002-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது 2004 இல் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் படிக்க கிளிக் செய்யவும்: ஈ. வி. சரோஜா | |||
| |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.8 | சிற்றினஞ்சேராமை | 2.1.8 | Avoiding Mean Company |
453 | மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். manaththAnAm mAn-tharkku kuNarchchi inaththAnAm innAn enappadunj sol. Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is known. | ||
பொருள் | Meaning | ||
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும். | The power of knowing is from the mind; (but) his character is from that of his associates. | ||
இன்றைய பொன்மொழி | |||
சிறு தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் பெருந்தவறுகளை தவிர்க்க முடியாது. | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எண்பெருந்துணைவர் பெ. | eNpetun-thuNaivar | ||
பொருள் | Meaning | ||
1. அரசனுடைய எட்டு வகை உதவியாளர்/ பணியாளர் (கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைதலைவர், யானைவீரர், இவுளிமறவர் Arasanudaiya ettu vakai uthaviyALar/ paNiyALar | 1. The eight groups of attendants necessary for a monarch (such as the men In the divisions of the army, administrator of the treasury, local government etc.) | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment