Saturday, April 23, 2011

Daily news letter 23-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

1.    மகளிர் தின விழா -24-4-2011  காலை 9.30  மணி முதல் மாலை 5.00  மணி வரை

இடம்:- தில்லி தமிழ் சங்க வளாகம்.

போட்டிகள்:- கோலம , கட்டுரை, இசை, பேச்சு, சமையல் மற்றும் விளையாட்டு  போட்டிகள்.

விவரங்களுக்கு டெல்லி தமிழ்ச்  சங்கம் – 011-26174217, 26193964

2.    Gayathri Fine Arts in association with Asthika Samaj, Keshav Puram is conducting Chitthirai Vaibhavam Festival from 17th April 2011 to 24th April 2011. On the week days daily it is from 7:00 pm to 9:00 pm at Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Delhi

3.    Sri Ramanavami utsavam - Upanyasam on Kamba Ramayanam by Trichi Sri.Kalyana Raman - 19.4.201125 .4.2011 - Timing 7 pm -9 pm at  Mayur Vihar Phase -1 Subha sidhi vinayak temple.

23/4/2011Vali Moksham / 24/4/2-11 Kandeen Deviyai / 25/4/2011 Sri Rama Pattabhishekam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை க ய   (10) , சனி , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

யானைடாக்டர் என்று அழைக்கப்பட்ட மரு. வி. கிருஷ்ணமூர்த்தி உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

லோக்பால் குழு: ஹெக்டே இன்று முடிவு அறிவிப்பு  தினமணி 

ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா  தினமணி

மேற்கு வங்காளத்தில், 50 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல்  தினத் தந்தி 

எகிப்து அதிபர் தேர்தலில் இந்திய ஓட்டு இயந்திரங்கள்  தினகரன்

சாய்பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் தினகரன்

சென்செக்ஸ் 118; நிப்டி 25 புள்ளிகள் உயர்வு வெப்துனியா

2ஜி ஊழல்-5 தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுப்பு தட்ஸ்தமிழ்

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி நக்கீரன்

கோத்ரா ரயில் எரிப்பு கலவரம்: மோடி ஆதரவு என புது சர்ச்சை தினமலர்

டெஸ்ட் போட்டிகளிருந்து ஓய்வு: மலிங்கா அதிரடி; இலங்கை அதிர்ச்சி!! தட்ஸ்தமிழ்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

 

1635 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1639 - புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.

1660 - சுவீடன், மற்றும் போலந்து ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

1867 - சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.

1896 - நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் (Koster and Bial's Music Hall) "வாட்வில்லி" குழுவினரால் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் விட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறினார்

1948 - அரபு-இஸ்ரேல் போர், 1948: இஸ்ரேலின் முக்கிய துறைமுகம் ஹைஃபா பாலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

1966 - முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.

1982 - கொங்க் குடியரசு அமைக்கப்பட்டது.

1984 - எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

1990 - நமீபியா ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது.

1993 - இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.

1993 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

1993 - எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.

பிறப்புகள்

1791 - ஜேம்ஸ் பியூக்கானன், ஐக்கிய அமெரிக்காவின் 15வது அதிபர் (இ. 1868)

1858 - மாக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் (இ. 1947)

1867 - ஜொகான்னெஸ் ஃபிபிகர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1928)

1897 - லெஸ்டர் பியர்சன், நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் (இ. 1972)

1902 - ஹால்டோர் லாக்ஸ்னெஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1998)

1938 - எஸ். ஜானகி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1977 - கால் பென், குஜராத்தி-அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1616 - வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564)

1951 - சார்ல்ஸ் டோவ்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)

1992 - சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921)

1993 - லலித் அத்துலத்முதலி, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் (பி. 1942)

2007 - போரிஸ் யெல்ட்சின், முன்னாள் ரஷ்ய அதிபர் (பி. 1931)

2009 - ரூபராணி ஜோசப், இலங்கை மலையகப் பெண் எழுத்தாளர்

சிறப்பு நாள்

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.14

பகைமாட்சி (Pagai maatchi)

 

2.3.14

 

NOBLE HOSTILITY

பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority  an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match

குறள் எண்  866

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

kANAch sinaththAn kazhilerung kAmaththAn

peNAmai PeNap padum

Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.

பொருள்

Meaning

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.

இன்றைய பொன்மொழி

விரைவில் உயர்வது பெரிதன்று; எப்பொழுதும் உயர்ந்துகொண்டே இருக்கவேண்டும் அதுவே பெரிது   

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: