Friday, April 1, 2011

Daily news letter 01-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ARAM SEYA VIRUMBU :- Avvai Tamil Sangam wants to collect record of Blood donors and keep a list on their website for emergency use. We are enclosing a template herewith. Please fill in the details if willing to donate blood and replace XXX with your name. We will keep a list citywise , statewise and countrywise to help the needy. Please pass on to your friends & relatives  as well.

Till today no. of registrations: 5 only..

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 18, வெள்ளி  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :-

 http://www.girijamanaalan-humour.blogspot.com/

ஆர். நந்தகோபால் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் கிரிஜா மணாளன், கிரிஜானந்தா, சிடுமூஞ்சி, உம்மணாமூஞ்சி எனும் புனைப் பெயர்களில் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள், கட்டுரைகள், ஆன்மீகத் துணுக்குகள் போன்றவைகளை எழுதியிருக்கிறார்.

தெரிந்து கொள்ளுங்கள்  

சிவகீதை என்பது இராமனுக்கு சிவபெருமான் உபதேசித்தருளியதாய்க் கூறப்படும் பாடல்களைக் கொண்டுள்ள நூலாகும்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

திமுக வெற்றி பெறுவதை தடுக்க முடியாது: மு.க.அழகிரி நக்கீரன்

ஜப்பானின் அணுகதிர் வீச்சு அமெரிக்காவுக்கும் பரவியது ... தினத் தந்தி

ஆ.ராசாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு தினமணி

உணவுப் பணவீக்கம் 9.5% தினமணி

2ஜி வழக்கில் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை? வெப்துனியா

மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு தினத் தந்தி

இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது ... தினமலர் -

கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி  தினமணி 

`தி.மு.க. கூட்டணிக்கு வைகோ ஆதரவு தர வேண்டும்' டாக்டர் ராமதாஸ் ...தினத் தந்தி

சென்செக்ஸ் 155 புள்ளிகள் உயர்வு  தினமணி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1826 - சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.

1867 - சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.

1891 - சிக்காகோவில் றிக்லி நிறுவனம் (Wrigley Company) ஆரம்பிக்கப்பட்டது.

1924 - அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார்.

1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1937 - யேமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.

1939 - எசுபானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜப்பானின் ஒக்கிநாவா தீவுகளில் இறங்கினர்.

1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது.

1948 - பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.

1949 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனத் தேசியக் கட்சியுடன் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன.

1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.

1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.

1979 - ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.

1981 - சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.

2001 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் சுலோபதான் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காக காவல்துறையினரிடம் சரணடைந்தார்.

2001 - நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.

2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.

பிறப்புகள்

1815 - ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், ஜேர்மனிய அரசியலாளர் (இ. 1898)

1865 - ரிச்சார்ட் சிக்மோண்டி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1929)

1875 - எட்கார் வாலஸ், ஆங்கில எழுத்தாளர் (இ. 1932)

1919 - ஜோசப் மறி, நோபல் பரிசு பெற்றவர்

1933 - குளோட் கொஹென்-டனூட்ஜி, நோபல் பரிசு பெற்றவர்

1940 - வங்காரி மாதாய், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்

இறப்புகள்

1960 - துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் மன்னர் (பி. 1895)

1968 - லேவ் லண்டாவு, நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908)

1976 - மக்ஸ் ஏர்ண்ஸ்ட், ஜெர்மனிய ஓவியர் (பி. 1891)

2007 - தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (பி. 1926)

சிறப்பு நாள்

ஏப்ரல் முட்டாள்கள் நாள்

மலேசிய தொலைக்காட்சி வானொலி நிலையம் தோற்றுவிக்கப்பட்ட நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.13

இகல்(Igal)

 

2.3.13

 

HATRED

குறள் எண்  854

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

inbahthuL inbam payakkum iga-lennum

thunbaththuL thunbang kedin

Joy of joys abundant grows,
When malice dies that woe of woes.

பொருள்

Meaning

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.

இன்றைய பொன்மொழி

உண்மையை உறுதியாய் பிடி; சுயநலம் கொள்ளாதே,    

இன்றைய சொல்(Today's Word)

ஓசம்

Vosam

பொருள்

Meaning

1.        விளக்கம், பிரகாசம்

1.     light, splendour, radiance

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: