அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 15, செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.vallalar.org/Tamil | ||||||||||||||||
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். மேலும் அறிய இந்த வலைத்தளம் உதவும். | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
தமிழ் நாடு சட்டப் பேரவைத் தொகுதிகள் மொத்தம் 234. ஆனால், அரசமைப்புச் சட்டப்பிரிவின் 333- ஆம் கூறுப்படி, ஆங்கிலோ-இந்திய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவதால் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 235.. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
வெளிநாட்டு வாழ்இந்தியர்கள் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் அறிவிப்பு | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1632 - கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. 1807 - 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார். 1831 - துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது. 1849 - பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது. 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது. 1867 - கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார். 1886 - ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார். 1974 - நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது. 2004 - பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன. 2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது. 2005 - யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது. 2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது. 2008 - பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது. பிறப்புக்கள் 1790 - ஜான் டைலர், 10வது அமெரிக்க ஜனாதிபதி (இ. 1862) 1918 - சாம் வோல்ற்றன், அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் (இ. 1992) 1927 - ஜோன் வேன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2004) இறப்புக்கள் 1985 - ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (பி. 1897) 2000 - சி. கே. சரஸ்வதி, தமிழ்த் திரைப்பட நடிகை சிறப்பு நாள் தாய்வான் - இளைஞர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.13 | இகல்(Igal) |
2.3.13 |
HATRED | |||||||||||||
குறள் எண் 851 | ||||||||||||||||
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் | ||||||||||||||||
igalenba ellA uyirkkum pagalennum paNbinmai pArikkum No-i | ||||||||||||||||
Hostility disunion's plague will bring, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும். | The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
எழுதப்படும் சொல்லிவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது – நல்லதையே பேசுங்கள். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஓகாரம் | vOkAram | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. மயில் |
1. peacock
| |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment