Thursday, March 31, 2011

Daily news letter 31-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ARAM SEYA VIRUMBU :- Avvai Tamil Sangam wants to collect record of Blood donors and keep a list on their website for emergency use. If you wish to donate, kindly let us know your Name, Contact number and blood group. Please send an email to avvaitamilsangam@gmail.com  

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 17, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilnool.com/

உலகின் மிகப் பெரிய தமிழ் நூல் அங்காடி தமிழ்நூல்.காம்

தெரிந்து கொள்ளுங்கள்  

முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியார். தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

முக்கிய செய்திகள் – Top Stories

ஆந்திரா: எதிர்கட்சி எம்.எல்.ஏ.வை அடித்த அமைச்சர் ராஜினாமா

லிபியா அதிபர் கடாபி பதவி விலகவேண்டும் உலக நாடுகள் தீர்மானம்

2ஜி ஊழல்: ஆசிப் பல்வா, அகர்வாலுக்கு சிபிஐ காவல்  

இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்பட மன்மோகன், கிலானி விருப்பம்

234 தொகுதிகளிலும் 2773 பேர் போட்டி

கேரளத்தில் ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி திட்டம்: உச்ச நீதிமன்றம் தடை

வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக!

 ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்

ஜெகன்மோகன் ரெட்டி தொகுதியில் இடைத்தேர்தல் மே 8-ந்தேதி ...

யாழ் பல்கலைக்கு முதல் பெண் துணைவேந்தர்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1492 - ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.

1885 - இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.

1889 - ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

1909 - பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது.

1918 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1951 - யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.

1959 - திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.

1966 - சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.

1970 - 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.

1979 - கடைசி பிரித்தானியப் படையினர் மோல்ட்டாவை விட்டு விலகினர். மோல்ட்டா விடுதலையை அறிவித்தது.

2004 - கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.

2007 - முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

பிறப்புக்கள்

1596 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (இ. 1650)

1732 - ஜோசப் ஹேடன், மேற்கத்திய இசையறிஞர் (இ. 1809)

1890 - வில்லியம் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 1971)

1914 - ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1998)

1934 - கார்லோ ரூபியா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர்

இறப்புக்கள்

1727 (ஜோர்ஜியன் நாட்காட்டியில்) - ஐசாக் நியூட்டன், அறிவியலாளர் (பி. 1643)

1917 - எமில் பேஹ்ரிங், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1854)

1945 - ஹான்ஸ் ஃபீஷர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1881)

2001 - கிளீஃபோர்ட் ஷல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1915)

சிறப்பு நாள்

மால்ட்டா - விடுதலை நாள் (1979)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.13

இகல்(Igal)

 

2.3.13

 

HATRED

குறள் எண்  853

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

igalennum evvanOi nE-kkin tavalillAth

thAvil viLakkam tharum

If enmity, that grievous plague, you shun,
Endless undying praises shall be won.

பொருள்

Meaning

மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.

To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.

இன்றைய பொன்மொழி

அமைதியிலும் , அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.    

இன்றைய சொல்(Today's Word)

ஓங்கல்

Vongal

பொருள்

Meaning

1.        உயர்ச்சி

2.        எழுச்சி

3.        மலை

4.        மலையுச்சி

5.        மரம்  

1.     height, elevation

 

2.     rising

 

3.     maountain

 

4.     mountain top

 

5.     tree

 

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: