இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் தேச மக்களுக்கு எங்கள் அனுதாபங்களை தெரிவிக்கிறோம். இச் சுனாமி மற்றும் பூகம்பப் பேரிழிவில் உயிரிழந்தோர்க்கு எங்கள் அஞ்சலிகள் ..
இயற்கையின் சீற்றம் நமக்கு சொல்லும் ஒரு பாடம். "நீ என்னை அழித்தால், நான் உன்னை அழிப்பேன்" என்பது. எனவே. நம்மால் முயன்றதை செய்து இயற்கையை காப்போம். ஆளுக்கு ஒரு மரம் அகிலம் வளம் பெரும்.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 28, சனி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்) – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.thiratti.com/ | ||||||||||||||||
திரட்டி.காம், தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டும் திரட்டிகளில் ஒன்று. புதுவையைச் சேர்ந்த வெங்கடேஷ் அவர்களால் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்றிருக்கும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளில் திரட்டி.காம் தனித்துவமாக பதிவுகளை மட்டும் திரட்டாமல். இணைய வானொலி, இணைய விளையாட்டு, குழந்தை நலம், சினிமா, தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற சேவைகளையும் வழங்குகிறது. கண்கவரும் முகப்பை உடையது. | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
பழனி பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் | ||||||||||||||||
பெல்காமில் 3 நாட்கள் நடைபெறும் உலக கன்னட மாநாடு தொடங்கியது ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History நிகழ்வுகள் 1664 - நியூ ஜேர்சி பிரித்தானியாவின் குடியேற்ற நாடானது. 1894 - முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்பட்டது. 1913 - ஆஸ்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது. 1918 - 215 ஆண்டுகளாக ரஷ்யாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது. 1930 - மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார். 1954 - சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது. 1968 - மொரீசியஸ் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது 1992 - மொரீசியஸ் பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது. 2006 - தென்னாபிரிக்கா ஒரு நாள் சர்வதேச துடுப்பாட்டமொன்றில் 438/9 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலியாவை (434) வென்று சாதனை படைத்தது. பிறப்புக்கள் 1925 - லியோ எசக்கி, நோபல் பரிசு பெற்ற ஜப்பானியர் 1984 - ஷ்ரேயா கோஷல், பாடகர் இறப்புக்கள் 1991 - றாக்னர் கிறனிற், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900) 2006 - சுந்தரிபாய், தமிழ்த்திரைப்பட நடிகை சிறப்பு நாள் மொரீசியஸ் - தேசிய நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.11 | பேதைமை (paedhaimai) | 2.3.11 | Foolishness ( Improper Understanding) | |||||||||||||
Folly and improper understanding lead to suffering and shame. | ||||||||||||||||
குறள் எண் 840 | ||||||||||||||||
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் | ||||||||||||||||
kazhA-akkAl paLLiyuL vaithatRAl sAnRor kuzhA-athup pethai pugal. | ||||||||||||||||
Like him who seeks his couch with unwashed feet, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும். | The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
வீழ்வது வெக்கமல்ல ஆனால் வீழ்ந்து கிடப்பதுதான் வெக்கம். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒழுகிசை (பெ) | ozhukisai | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. நீரோட்டம் போன்ற இனிய செய்யுளிசை |
1. Pleasant flowing rhythm | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment