Wednesday, March 9, 2011

Daily news letter ௦09-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 25, புதன் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.varalaaru.com/

வரலாறு வலைத்தளம் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் வரலாற்றை உரிய முறையில் ஆவணப்படுத்தி, இணைய வழி பகிர முன்னெடுக்கப்படும் ஒரு தன்னார்வ திட்டம் ஆகும். இது கல்கியின் பொன்னியின் செல்வனின் ஆர்வம் உள்ளோரின் ஒரு இணையக் குழுவாகத் தொடங்கியது. அந்த வரலாற்றுப் புதினத்தில் விபரிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதாக தொடங்கியத்து. வரலாறு.காம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக இன்றைப்படுத்தப்படுகிறது. நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவர்களின் தலையங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ளுங்கள்  

சென்னையில் உள்ள தி.நகர் பிட்டி தியாகராயர் நினைவாகவும் பாண்டி பசார் டபிள்யூ. பி. ஏ. செளந்திரபாண்டியன் நாடார் நினைவாகவும் பெயரிடபட்டவை.

முக்கிய செய்திகள் – Top Stories

தொகுதி பங்கீட்டில் சிக்கல் தீர்ந்தது தி.மு.க. 121, காங்கிரஸ் 63

மகளிர் தின பரிசு மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ்

லிபியாவில் விமானங்கள் பறக்க தடை: விரைவில் ஐநா தீர்மானம்  

சமாஜ்வாடி எம்.பி.க்கள் மக்களவையில் அமளி

ஹசன் அலிகான் கைது  

சென்செக்ஸ் 216 புள்ளிகள் உயர்வு

தாமஸ் நியமனம்; நான் காரணம் அல்ல: பிரதமர்

நியூசிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான் ராஸ் டெய்லர் அதிரடி சதம்

டெல்லியில், கல்லூரி மாணவி சுட்டுக்கொலை

நடுவரின் முடிவு மறுபரிசீலனை முறை குழப்பமாக உள்ளது: யுவராஜ்சிங்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1535 - பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் கலாபகசுத் தீவுகளில் தரையிறங்கியது.

1629 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.

1735 - ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னனுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஷ்யப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறினர்.

1801 - பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1804 - லூசியானா அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1814 - பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.

1893 - ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.

1902 - அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1902 - துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.

1911 - இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.

1922 - கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையானார்.

1948 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1977 - யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1982 - கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

1990 - ஹெயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

பிறப்புக்கள்

1933 - பழ. நெடுமாறன், தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்த் தேசிய ஆதரவாளர்

1933 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (இ. 1995)

1957 - ஒசாமா பின் லாடன், இஸ்லாமியப் போராளி

இறப்புக்கள்

1966 - ஃபிரிட்ஸ் சேர்னிக்கே, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1888)

2001 - சி. ஜே. எலியேசர், பேராசிரியர், பிரபல கணிதவியலாளர், தமிழ் அபிமானி. (பி. 1918)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.11

பேதைமை (paedhaimai)

2.3.11

Foolishness ( Improper Understanding)

Folly and improper understanding lead to suffering and shame.

குறள் எண்  837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
.

Ae-thilAr Arath thamar-pasip-par paethai

Perunselvam utRak kadai.

When fools are blessed with fortune's bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore.

பொருள்

Meaning

பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

இன்றைய பொன்மொழி

அன்பே மிகச் சிறந்த தர்மம். மனசாட்சியே வழிகாட்டி.             

இன்றைய சொல்(Today's Word)

ஒழியாவிளக்கு

ozhiyAvilakku

பொருள்

Meaning

1.        விடிவிளக்கு

 

1.     lamp that burns throughout the night

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: