Thursday, March 10, 2011

Daily news letter 10-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Daily news letter 10-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 26, வியாழன்  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.poovulagu.org

பூவிலகின் நண்பர்கள் இயக்கம் சூழலியல், இயற்கை பாதுகாப்பு, பேண்தகு வளர்ச்சி தொடர்பாக அறிவியல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் "ஒரு சுயோச்சையான, மக்கள் நலன் அமைப்பு". தமிழகத்தில் இது செயற்படுகிறது. தீர்வு பரிந்துரைகள், விழுப்புணர்வு ஏற்படுத்தல், கல்வி, சட்ட அலோசனை வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்களை இவ் அமைப்பு கொண்டுள்ளது.

தெரிந்து கொள்ளுங்கள்  

என் குருநாதர் பாரதியார் எனும் நூலை எழுதிய ரா. கனகலிங்கம் பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதி திராவிடர் ஆவார்.

முக்கிய செய்திகள் – Top Stories

காங். தொகுதிகள் எவை? இன்று ஐவர் குழு பேச்சுவார்த்தை

கடற்கொள்ளையர் பிடியில் 79 இந்தியர் : அரசு பதிலில் பா.ஜ., அதிருப்தி

"மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு கடாஃபி பொறுப்பேற்க வேண்டும்'  

சென்செக்ஸ் 217 புள்ளி உயர்வு

லஞ்சம்: வட்டாட்சியர், பெண் வி.ஏ.ஓ. கைது

சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா இன்று ஆரம்பம்

கூட்டணியின் நலன் கருதியே விட்டுக் கொடுத்தோம்: ராமதாஸ்

5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

மேற்கு வங்கத்திலும் "தமிழ்நாட்டு சிக்கல்!'

கடற்கொள்ளையர் பிடியில் 79 இந்தியர் : அரசு பதிலில் பா.ஜ., அதிருப்தி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1535 - பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் கலாபகசுத் தீவுகளில் தரையிறங்கியது.

1629 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.

1735 - ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னனுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஷ்யப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறினர்.

1801 - பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1804 - லூசியானா அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1814 - பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.

1893 - ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.

1902 - அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1902 - துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.

1911 - இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.

1922 - கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையானார்.

1948 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1977 - யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1982 - கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

1990 - ஹெயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

பிறப்புக்கள்

1933 - பழ. நெடுமாறன், தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்த் தேசிய ஆதரவாளர்

1933 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (இ. 1995)

1957 - ஒசாமா பின் லாடன், இஸ்லாமியப் போராளி

இறப்புக்கள்

1966 - ஃபிரிட்ஸ் சேர்னிக்கே, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1888)

2001 - சி. ஜே. எலியேசர், பேராசிரியர், பிரபல கணிதவியலாளர், தமிழ் அபிமானி. (பி. 1918)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.11

பேதைமை (paedhaimai)

2.3.11

Foolishness ( Improper Understanding)

Folly and improper understanding lead to suffering and shame.

குறள் எண்  838

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்
.

maiyal oruvan kaLiththatRAl paethai-than

kai-onru udaimai peRin

When folly's hand grasps wealth's increase, 'twill be
As when a mad man raves in drunken glee.

பொருள்

Meaning

அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.

இன்றைய பொன்மொழி

கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்.             

இன்றைய சொல்(Today's Word)

ஒழுக்கவி (பெ)

o-zu-kkavi

பொருள்

Meaning

1.        தினமும் கோவிலில் படைக்கும் சமைத்த உணவு

 

1.     daily offering of food in a temple  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: