அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –27, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள் (டெல்லி சுற்றுப்பகுதியில்) Tyagaraja Festival By Gayathri Fine Arts in association with Thala Bhakthi and Asthika Samaj Shyama shatri Day at Subha Sidhi Vinakar Kovil mayur Vihar Ph-1 for detailed information visit http://www.avvaitamilsangam.org/Calender.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
கிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது. 55 - ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது. 1531 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது. 1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார். 1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது. 1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது. 1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது. 1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். 1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது. 1964 - சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது. 1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது. 1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன. 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார். 1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது. 2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது. பிறப்புகள் 1847 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931) 1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007) 1924 - வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் நாட்டுக்கூத்து நடிகர் (இ. 1989) இறப்புகள் 1713 - ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664) 1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860) 19?? - சி. சுந்தரலிங்கம், அடங்காத் தமிழன், ஈழத் தமிழ் அரசியல்வாதி 2007 - சாகரன், தமிழிணைய ஆர்வலர் (பி. 1975) சிறப்பு நாள் ஜப்பான் - நிறுவன நாள் ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974) கமரூன் - இளைஞர் நாள் ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள் பொஸ்னியா - விடுதலை நாள் வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.8 | பழமை ( pazhamai) | 2.3.8 | Intimacy of Friendship | ||||||||
பழமையான பாரம்பரிய நட்பு - Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever. | |||||||||||
815 | செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை | ||||||||||
seiThemanJ sArAch siriyavar punkeNmai eithalin eithAmai nanRu | |||||||||||
It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது. | It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருமா | orumaa | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. the fraction 1/20 | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment