அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 10 வெள்ளி, கார்த்திகை–24, முஹர்ரம் – 3 | |||||||||||
இன்று : மனித உரிமைகள் நாள் உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பா.ஜனதா கூட்டணி ஆட்சி காலத்தில்தான் அதிக குளறுபடிகள் நடந்தன காங்கிரஸ் ஆட்சியில் ஆதாயம் பெற்றவர் டாடா: பாஜக குற்றச்சாட்டு | |||||||||||
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண பட்ஜெட்டில் அறிவிப்புகள் ... | |||||||||||
`வடகொரியாவை அடக்கி வையுங்கள்' அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்க ... | பிரச்சார் பாரதி தலைவர் பதவி நீக்கம் உறுதி புகார்களை சுப்ரீம் ... | ||||||||||
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ... | ரூ.20 கோடி பேரம் பேசினார் நித்யானந்தா சாமியார் தொடர்ந்து ... | ||||||||||
4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 12 வீரர்களை தவிர அனைவரும் ஏலம் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1684 | ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது. | ||||||||||
1868 | உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது. | ||||||||||
1901 | முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. | ||||||||||
1902 | அஸ்வான் அணை திறக்கப்பட்டது. | ||||||||||
1902 | தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது. | ||||||||||
1906 | அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும். | ||||||||||
1948 | மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது. | ||||||||||
1975 | ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். | ||||||||||
1981 | தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது. | ||||||||||
1984 | தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1750 | திப்பு சுல்தான், மைசூர் இராச்சியத்தின் மன்னன் (இ. 1799) திப்பு சுல்தான் மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தான் மே 4 ,1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் இறந்தது குறிப்பிடத்தக்கது. | ||||||||||
1878 | ராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (இ. 1972) சி. இராஜகோபாலாச்சாரி (10 திசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். சுருக்கமாக இராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர்.வழக்கறிஞர்,எழுத்தாளர்,அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.4 | படை மாட்சி(padai mAtchi) | 2.3.4 | Glory of Defence | ||||||||
Character and valour of the personnel and the importance of discipline and coherence. | |||||||||||
769 | சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. | ||||||||||
siRumaiyum sellAth thuniyum vaRumaiyum illAyin vellum padai. | |||||||||||
Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victory. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும். | An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
வாழ்க்கையின் சரியான திக்கிலே செல்பவன் தோல்வி அடைவதில்லை. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐவனம் (பெ) | Aivanam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. மலைநெல் (malai n-el) | 1. Mountain paddy, wild rice | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment