அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 15 வெள்ளி, புரட்டாசி –29, ஜில்ஹாயிதா – 6 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
இன்று: உலகத் தர நிர்ணய நாள் உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) என்பது ஆண்டு தோறும் அக்டோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ.), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம்] (ஐ.டி.யூ.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
எடியூரப்பாவுக்கு கிடைத்து இருப்பது தற்காலிக வெற்றி குமாரசாமி ... | |||||||||||
டேபிள் டென்னிஸ் சரத்கமலுக்கு வெண்கலப்பதக்கம்
| |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1863 | அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் (ஹன்லி)ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது. | ||||||||||
1878 | தோமஸ் எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார். | ||||||||||
1932 | டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. | ||||||||||
1951 | மெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார். | ||||||||||
1970 | அன்வர் சதாத் எகிப்தின் அதிபரானார். | ||||||||||
1990 | பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் நோபல் பரிசு பெற்றார். | ||||||||||
1997 | நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது. | ||||||||||
2001 | நாசாவின் கலிலியோ விண்கலம் ஜுப்பிட்டரின் சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது. | ||||||||||
2003 | மக்கள் சீனக் குடியரசு முதற்தடவையாக சென்ஷோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1542 | பேரரசர் அக்பர், முகலாயப் பேரரசன் (இ. 1605) ஜலாலுதீன் முகமது அக்பர் என்பவர் 1556 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறது இவர் இயற்பெயர் ஜலாலுதீன். | ||||||||||
1931 | அப்துல் கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர் ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். | ||||||||||
1931 | வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (இ. 2003) வீரமணி ஐயர் (அக்டோபர் 15, 1931 - அக்டோபர் 8, 2003), ஈழத்துக் கவிஞர். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.10 | அவையஞ்சாமை (avai anjamai) | 2.2.10 | Stage- fright | ||||||||
Rage before Councils | |||||||||||
724 | கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். | ||||||||||
katRRArmun katRRa selachchollith thAmkatRRa mikkAruL mikka koLal. | |||||||||||
What you have learned, in penetrating words speak out before The learn'd; but learn what men more learn'd can teach you more. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். | (Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உன் கடமையைச் சரிவரச் செய்யாமல் உரிமைக்குப் போராடக் கூடாது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறுவெயில் (பெ.) | aeRuveyil | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. முற்பகல் வெயில் (muRpakal veyil) | 1. Increasing heat and sunshine as the sun advances towards the meridian | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment