அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 14 வியாழன், புரட்டாசி –28, ஜில்ஹாயிதா – 5 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
இன்று: உலகத் தர நிர்ணய நாள் உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) என்பது ஆண்டு தோறும் அக்டோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ.), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம்] (ஐ.டி.யூ.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
நோபல் அமைதி பரிசு அரசியல் அமைப்பை மாற்றாது; சீன அரசு திட்டவட்டம் | |||||||||||
பஞ்சாப் மந்திரி நீக்கம் முதல்-மந்திரியுடன் கருத்து வேறுபாடு ... | |||||||||||
இந்தியா முழுவதும் 11 ஐகோர்ட்டு நீதிபதிகள் இடமாற்றம்: நீதிபதி ... | சிலியில் சுரங்கத்தில் சிக்கிய 33தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு | ||||||||||
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்தியா வெற்றி ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1758 | ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா பிரஷ்யாவை வெற்றி கொண்டது. | ||||||||||
1806 | முதலாம் நெப்போலியன் புரூசிய இராணுவத்தை தோற்கடித்தான். | ||||||||||
1888 | Roundhay Garden Scene என்ற முதலாவது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயாரித்தார். | ||||||||||
1925 | டமாஸ்கசில் பிரெஞ்சுக்காரர்களுக்கெதிரான போராட்டம் ஆரம்பமாயிற்று. | ||||||||||
1926 | சிறுவர் நூல் வின்னீ-த-பூ (Winnie-the-Pooh) வெளியிடப்பட்டது. | ||||||||||
1933 | நாசி ஜெர்மனி தேசங்களின் அணியில் இருந்து விலகியது. | ||||||||||
1948 | இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது. | ||||||||||
1962 | கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது. | ||||||||||
1964 | ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். | ||||||||||
1968 | விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1643 | முதலாம் பகதூர் ஷா, இந்தியாவின் முகலாய மன்னன் (இ. 1712) | ||||||||||
1942 | சிவசங்கரி, தமிழக எழுத்தாளர் சிவசங்கரி (பிறப்பு ஒக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1981 | கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர் (பி. 1906) கே. பி. ஹரன் (அக்டோபர் 17,1906 - அக்டோபர் 14, 1981) தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தலைசிறந்த பத்திரிகையாளராக இருந்தவர். | ||||||||||
2005 | சுந்தர ராமசாமி, தமிழ் எழுத்தாளர் (பி. 1931) சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள். | ||||||||||
2009 | சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (பி. 1924) சி. பி. முத்தம்மா (Chonira Belliappa Muthamma, கொனெரி பெல்லியப்பா முத்தம்மா, ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009) இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.10 | அவையஞ்சாமை (avai anjamai) | 2.2.10 | Stage- fright | ||||||||
Rage before Councils | |||||||||||
723 | பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். | ||||||||||
pakaiyakaththuch chAvAr eLiyAr ariyar Avaiyakaththu anjA thavar. | |||||||||||
Many encountering death in face of foe will hold their ground; Who speak undaunted in the council hall are rarely found. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர். | Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உன் அண்டை வீட்டுக்காரனை நேசிப்பது போல் உன் விரோதியையும் நேசி. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறுவரிசை (பெ.) | aeRuvarisai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. முறைப்படுத்தப்பட்ட வரிசையில் கீழிருந்து மேல் செல்லுதல் (muRaippaduththappatta varisaiyil keezirun-thu mael selluthal.) | 1. Ascending order. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment