அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 08 புதன், ஆவணி – 23, ரமலான் - 28 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
இன்று: உலக எழுத்தறிவு நாள் அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
மன்மோகன் சிங், ப.சிதம்பரத்திடம் அதிமுக எம்.பி.க்கள் முறையீடு | லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் பதவி ஏற்பு விழா: பாஜக புறக்கணிப்பு | ||||||||||
ஆசிய கோப்பையில் சூதாட்டமா? சல்மான் பட், அக்மலிடம் செல்போன் ... | |||||||||||
ஸ்டிரைக்: மத்திய அரசு பணிகள் பாதிப்பு-வங்கிகள் செயல்படவில்லை | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1655 | சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான். | ||||||||||
1831 | 4ம் வில்லியம் பிரித்தானியாவின் மன்னனாக முடிசூடினான். | ||||||||||
1888 | லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. | ||||||||||
1930 | ஸ்கொட்ச் நாடா முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது. | ||||||||||
1941 | இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் நகரின் மீது ஜேர்மனி படையெடுத்தது. | ||||||||||
1951 | பசிபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின. | ||||||||||
1991 | யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1913 | ஆர். மகாதேவன், தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (மே 5, 1957) தேவன் அல்லது ஆர். மகாதேவன், பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும். | ||||||||||
இறப்புகள் | |||||||||||
2008 | குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1935) குன்னக்குடி வைத்தியநாதன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், இசையமைப்பாளர். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.7 | மன்னரைச் சேர்ந்தொழுதல் (mannaraich Sern-ththozuthal) | 2.2.7 | Company of the ruler | ||||||||
Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power | |||||||||||
692 | மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும். | ||||||||||
Mannar vizaipa vizaiyAmai mannarAl Manniya aakkan-th tharum. | |||||||||||
To those who prize not state that kings are wont to prize, The king himself abundant wealth supplies. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும். | For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பாவத்தைக் கண்டு அஞ்சுவதைப் போல் வேறெதையும் கண்டு அஞ்சாதே. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்பு (பெ.) | aeRpu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பெற்றுக்கொள்ளூதல், ஏற்றுக்கொள்ளுதல் (petRRukkoLLuthal, aetRRukkoLLuthal) 2. பொருத்தம் (poruththam) | 1. Acceptance, assumption 2. Fitness, appropriateness. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment