அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||
ஆகஸ்டு – 30 திங்கள், ஆவணி – 14, ரமலான் - 19 | |||||||||
சிறப்பு நாள்: அனைத்துலக காணாமற்போனோர் நாள் அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஆகஸ்ட் 30ம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லாது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. | |||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் தீ? இரு பைலட்டுகள், 8 ஊழியர்கள் ... | |||||||||
இந்தியர்கள் உள்பட 70 நாடுகளுக்கு விசா இனி கிடையாது: இலங்கை முடிவு | |||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||
1574 | குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவாகிறார். | ||||||||
1835 | ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. | ||||||||
1897 | மடகஸ்காரில் அம்பிக்கி நகரை பிரான்ஸ் கைப்பற்றியது. | ||||||||
1945 | பிரித்தானியரிடம் இருந்து ஹொங்கொங்கை ஜப்பான் விடுவித்தது. | ||||||||
1984 | டிஸ்கவரி விண்ணோடம் (Space Shuttle) தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது. | ||||||||
1990 | தத்தர்ஸ்தான் ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | ||||||||
1991 | அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | ||||||||
1999 | கிழக்குத் தீமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். | ||||||||
இறப்புக்கள் | |||||||||
1957 | என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908) கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். 49 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் ஆண்டு காலச் சாதனையை கலைத்துறை மூலம் செய்து காட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். கூத்தாடிகளாக, குறை மனிதர்களாக, அரிதார வேலைக்காரர்களாகக் கருதி ஒதுக்கித் தள்ளப்பட்ட நடிகர் சமுதாயத்தில், அறிவு விளக்கேற்றி வைத்து மக்களுக்குத் தொண்டு செய்யப் பிறந்தவர்கள் என்ற நிலையை உருவாக்கியவர். | ||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | ||||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | |||||||||
685 | தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. | ||||||||
thokachchollith thUvAtha n-eekki n-akachcholli n-anRi payappathAn-th thUthu | |||||||||
In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, An envoy he who gains advantage for his lord. | |||||||||
பொருள் | Meaning | ||||||||
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். | He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign). | ||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||
அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்வரை உங்களுக்கு என்றைக்குமே விடிவுகாலம் தான் | |||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||
ஏவு (வி.) | Evu | ||||||||
பொருள் | Meaning | ||||||||
1. தூண்டிவிடு (thUNdividu) 2. கட்டவிழ்த்துவிடு (kattavizththuvidu) 3. கட்டளையிடு (kattaLaiyidu) 4. செலுத்து (seluthu) 5. தீயசக்திகளை எழுப்பு (theeyasakthikaLai ezuppu) 6. திருவருளால் தூண்டப்படு (thiruvaruLal thooNdappadu) 7. கூறு (kooru) | 1. Set on sb 2. Unleash, let loose 3. Order, command 4. Discharge, hurl, dart 5. Conjure and set on (as evil spirits) 6. Inspire (as god) 7. Say, utter |
| |||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||
No comments:
Post a Comment