அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 21 சனி, ஆவணி – 5, ரமலான் - 10 | ||||||||
Tribute to Mother Teresa on her Centenary Birth Anniversary Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (10am to 2pm) "CANCER PREVENTION & TESTING CAMP" by Avvai Tamil Sangam in Association with | ||||||||
"கோடை விழா" – Summer Festival Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (3:00pm onwards) சிற(ரி)ப்பு நிகழ்ச்சி – புதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : சிரிப்பு தரும் சிந்தனைகள் சிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு.K.ராமமூர்த்தி (ஓய்வு), தில்லி உயர் நீதிமன்றம் சாதனையாளர் விருதுகள் (Award ceremony for the achievers in different fields) கருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்) | ||||||||
Invitation Attached… | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
எம்.பி.,க்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு : "இது போதாது' என ஆவேசம் | ||||||||
அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள்-கருத்துக் ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1821 | ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. | |||||||
1831 | கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். | |||||||
1842 | டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது. | |||||||
1911 | லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. | |||||||
1959 | ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது. | |||||||
1991 | லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | |||||||
1991 | சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது. | |||||||
2007 | சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது. | |||||||
பிறப்புக்கள் | ||||||||
1906 | ப. ஜீவானந்தம், பொதுவுடமைவாதி (இ. 1963) ப. ஜீவானந்தம் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். | |||||||
1946 | நாராயண மூர்த்தி, இந்தியத் தொழிலதிபர் நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.5 | வினை செயல்வகை(vinai seyalvakai) | 2.2.5 | Mode of Action( Ways to Perform) | |||||
Ways to perform duties and avocations. | ||||||||
679 | நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். | |||||||
n-attArkku n-alla seyalin virain-thae ottArai ottik koLal | ||||||||
Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you. | ||||||||
பொருள் | Meaning | |||||||
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும். | One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
ஊக்கம் இல்லாமல் எந்த ஒரு பெரிய காரியமும் சாதிக்கப்பட்டது கிடையாது | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏவம்(பெ.) | aevam | |||||||
பொருள் | Meaning | |||||||
1. குற்றம் (kutRRam) | 1. Fault, blemish | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment