Thursday, May 13, 2010

Daily news letter 13-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 13,  சித்திரை – 30,  ஜமாதில் ஆவ்வல் – 27

முக்கிய செய்திகள்

லிபியா விமான விபத்தில் 103 பேர் பலி 

பிரதமர் மன்மோகனுடன் அனில் அம்பானி சந்திப்பு 

மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான வீரர் ... 

இங்கிலாந்து புதிய பிரதமர் கேமரூன்

தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது மிகவும் கடினம்: நவீன்... 

வெளிநாட்டு வினோதம் 

நர்ஸ்களுக்குப் பற்றாக்குறை: அமைச்சர் குலாம் நபி ஆசாத் 

வெஸ்ட் இண்டீசை வெளியேற்றியது ஆஸ்திரேலியா

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் சஸ்பெண்ட் 

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எஸ்.எச்.கபாடியா ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1648

 டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

1830

 எக்குவாடோர் விடுதலை அடைந்தது.

1888

 பிரேசில் அடிமைமுறையை இல்லாதொழித்தது.

1967

 சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.

1998

 இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.

2006

 திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.

பிறப்புக்கள்

1905

 பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இ. 1977)

1918

 பாலசரஸ்வதி, பரத நாட்டிய மேதை (இ. 1984)

பாலசரஸ்வதி தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவருடைய முன்னோர் தஞ்சை மாராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள்.  பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே இசையும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தஞ்சாவூர் நால்வர்களில் ஒருவரான சின்னையாவின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது.

1956

 ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய குரு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர், வாழும் கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

றப்புக்கள்

1898

 பி. ஆர். ராஜமய்யர், தமிழ் எழுத்தாளர் (பி. 1872)

பி. ஆர். ராஜமய்யர் ஓர் எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளர். இவர் தமிழின் இரண்டாம் நாவலாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை மிக இளவயதிலேயே (21ஆம் வயதில்) எழுதியவர்.

1978

 வி. தெட்சணாமூர்த்தி, தவில் மேதை (பி. 1933)

வி. தெட்சணாமூர்த்தி ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார்.

2001

 ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906)

ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண் ஓர் ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். இவரின் உணர்ச்சிபூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமததைத் தழுவி எழுதப் பட்டவையாகும்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.25

இடுக்கண் அழியாமை

(idukkaN aziyAmai)

2.1.25

Overcoming Obstacles

Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve

623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.

Idumpaikku idumpai paduppar idumpaikku

Idumpai padA a thavar.

Who griefs confront with meek, ungrieving heart,

From them griefs, put to grief, depart.

பொருள்

Meaning

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

இன்றைய பொன்மொழி

பொய்யன் வீடு தீப்பற்றி எறிந்தாலும் அச்செய்தியும் பொய்யாகவே போய்விடும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏடகம்(பெ.)

aedakam

பொருள்

Meaning

1.     பூ (puu)

2.     பனை (panai)

3.     தென்னை (thennai)

1.     Flower

2.     Palmyra

3.     coconut

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: