Wednesday, April 14, 2010

Daily news letter 14-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 14,  சித்திரை – 1,  ரபியுல் ஆகிர் – 28

இன்று: விக்ருதி வருட ஆரம்பம்

முக்கிய செய்திகள்

மின் கட்டண உயர்வு எப்போது? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் 

கிலானி, மன்மோகன் சந்திப்பு 

 

அ.தி.மு.க.வுக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சவால் 

மரபணு கத்தரிக்காய்க்கு தமிழகத்தில் அனுமதி இல்லை அமைச்சர் ... 

அதிமுக டெபாசிட் இழப்பு-3 மதிமுக நிர்வாகிகள் நீக்கம்! 

கார்ழ் லே கொநேசு நகரில் பிரான்சு கம்பன் மகளிரணி விழா 

ஐ.பி.எல். கிரிக்கெட் அணி பிரச்சினையால் மத்திய மந்திரிக்கு ... 

ஈரான் மீத மேலும் பொருளாதாரத் தடை விதிக்க இந்தியா எதிர்ப்பு 

பங்குச் சந்தையில் தொடர் சரிவு 

ஐபிஎல் கிரிக்கெட் : மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1699

 கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.

1828

 நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.

1849

 ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.

1865

 அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.

1894

 தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.

1912

 பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.

1958

 சோவியத்தின் ஸ்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்று வட்டத்தில் இருந்து வீழ்ந்தது.

1999

 அவுஸ்திரேலியா, சிட்னியில் பலமான பனிக்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.

பிறப்புகள்

1891

 அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956)

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் "பண்டைய இந்தியாவின் வர்த்தகம்' என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், "இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு' என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. "பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்' என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். "ரூபாயின் பிரச்சினை' என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்

இறப்புகள்

1950

ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879)

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற, உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம், இரமணாசரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.22

ஊக்கம் உடைமை

(uukkam udaimai)

2.1.22

Motivation

Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life.

597

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு.

Sithaividaththu olkAr uravOr puthaiampiR

pattuppA dunRung kaLiRu.

The men of lofty mind quail not in ruin's fateful hour,

The elephant retains his dignity mind arrows' deadly shower.

பொருள்

Meaning

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

இன்றைய பொன்மொழி

அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னர் சிறந்த குதிரைகளாகின்றன.

இன்றைய சொல்

Today's Word

ஏகவாசம்(பெ.)

EkavAsam

பொருள்

Meaning

1.     தனிமை வாழ்க்கை (thanimai vAzkkai)

1.     Solitary life

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: