Wednesday, March 3, 2010

Daily news letter 03-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 03,  மாசி – 19,  ரபியூலவல் – 16

10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

முக்கிய செய்திகள்

சந்திரனில் பனிமலைகள் ஏராளம் : 'நாசா' விஞ்ஞானிகள் புது ஆய்வு

உலக கோப்பை ஆக்கி ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

பேரவைக்கு மாட்டு வண்டியில் சென்றார் சந்திரபாபு நாயுடு

அண்ணாமலைப் பல்கலை.க்கு காலவரம்பற்ற விடுமுறை

மன்மோகன் & சோனியா அவசர ஆலோசனை

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்: திருச்சியில் முதல்வர் இன்று ...

பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் நில நடுக்கம்

கேரளா பந்த்-தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

குண்டு வெடித்து சேதம் அடைந்த 12 வீட்டை காலி செய்ய உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வர்கள் `உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1923

டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

1938

சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

1969

நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.

1992

பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1839

 ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)

1847

 அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கண்டுபிடிப்பாளர் (இ. 1922)

1867

 பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (இ. 1911)

பாண்டித்துரைத் தேவர் பாலவ நத்தம், தமிழ்நாடு நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழிறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.

பாண்டித்துரைத் தேவர் பாலவனத்தம் ஜமிந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்கலாவிநோதர் என்றும், செந்தமிழ் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர். மூவேந்தரும் போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவரும் காலகட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கங் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்கு பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் மாசிக வாசிக பத்திரிகையை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினை திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார்.

றப்புக்கள்

1703

 ராபர்ட் ஹூக், ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1635)

1707

 ஔரங்கசீப், மொகாலயப் பேரரசர் (பி. 1618)

அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது

1996

 சி. சிவஞானசுந்தரம், சிரித்திரன்

சி. சிவஞானசுந்தரம் (சுந்தர்) சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.19

வெருவந்த செய்யாமை

(veruvan-tha seyyAmai)

2.1.18

Refrain from Terrorism

(Mindless Trepidation)

Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land.

561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

thakkAngku n-Adith thalaichsellA vaNNaththAl

oththAngku oRuppathu vaen-thu.

Who punishes, investigation made in due degree,

So as to stay advance of crime, a king is he.

பொருள்

Meaning

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.

இன்றைய பொன்மொழி

எல்லாக் கெட்ட நடவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.

இன்றைய சொல்

Today's Word

ள்ளற்பாடு (வி)

eLLaRpAdu

பொருள்

Meaning

1.     இகழ்ச்சி, நிந்தை

(ikazcchi, n-inthai)

1.     Reproach, scorn, condemnation

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: